லவோதிக்கேயா சபையின் காலம் Jeffersonville, Indiana, USA 60-1211E 1அவர் அதை ஒருபோதும் முடிக்கவில்லை. “என்னுடைய திருமணத்திற்கு நான் பிந்திவிட்டேன். நான் சிறிது காலந்தாழ்ந்து பிறந்தேன். திருமணத்திற்கும் எனக்கு நேரம் பிந்தி விட்டது. என்னுடைய அடக்கத்திற்கும் நான் பிந்திவிட எனக்கு இயலு மென்றால்!'' என்று கூறினேன். அந்த ஒன்று தான் மிகவும் காலந்தாழ்ந்து நடைபெற வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் புறப்பட முடியாமல் இருக்கும்படி வீட்டில் அநேக தொலைபேசி அழைப்புகள் எனக்கு உண்டாயிருந்தன. என் மனைவியும் மற்றவர்களும் வீட்டை விட்டு சீக்கிரமாகவே புறப் பட்டு விட்ட பிறகு, உடனேயே, எனக்கு அநேக வேலைகள் உண்டாயிருந்தன. பின்பு அநேக இடங்களிலிருந்து மக்கள் ஜெபித்துக்கொள்ள வந்தனர். இப்பொழுது தான் நான் உள்ளே நுழைகிறேன். ஒரு சகோதரனுக்கு கர்த்தரிடத்திலிருந்து வெளிப் படுத்துதல் உண்டாயிற்று. வியாதிப்பட்ட நிலையில் அங்கே பின்னால் நின்று கொண்டிருக்கிற சகோதரியே, நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டேயிருக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். ஜார்ஜியாவிலிருந்தும், மற்றும் கனடா தேசத்தி லிருந்தும், மற்றும் சுற்றியுள்ள பல்வேறு இடங்களிலிருந்தும் வந்திருக்கிற என் நண்பர்களுடன் நான் கைகளிலிருந்தும் வந்திருக் கிற என் நண்பர்களுடன் நான் கைகுலுக்கக் கூட என்னால் இயலா மல் இருக்கிறது. உங்களோடு கைகுலுக்கிட இயலாமற் போன தற்காக நான் மிகவும் வருந்துகிறேன். 2நிற்க, இன்றிரவில் சகோதரன் ஃப்ரெட் சோத்மன் அவர்கள் எங்கேயிருக்கிறார்? ஃப்ரெட் அவர்களே, நீங்கள் கனடாவிலிருந்து என்னை தொலைபேசியில் கூப்பிட்ட அந்த வேளை உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? நீங்கள் அப்பொழுது அங்கிருந்து வந்து கொண்டிருந்தீர்கள். நீங்கள் மோட்டார் வாகனத்தில் வர வேண்டாம் என்று உங்களுக்கு கூறினேன் அல்லவா? ஆனாலும் நீங்கள் அப்படிதான் வந்தீர்கள். அவருடைய மோட்டார் வாகனம் நொறுங்கிச் சேதமடைந்து, அவருடைய மனைவி ஏறக்குறைய கொல்லப்படக்கூடிய அளவுக்கு ஆகி விட்டது. குடும்பத்தினரும் கூட, அவரது மூக்கு உடைந்து விட்டது. இதினால் அவர்கள் யாவரும் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்கள். சற்று நேரத்திற்கு முன்னால் மத்தியானத்தில் நான் கிளம்பிக் கொண்டிருக்கையில், இங்கு நின்று கொண்டிருக்கும் சகோதரன் பென் அவர்கள் என்னண்டையில் வந்தார். ரோஸல்லாவும் அங்கே வந்து, “நான் வீட்டுக்குப் போகிறேன்'' என்றாள். '' ரோஸல்லா என்றேன் நான் “ என்ன விஷயம் சகோ. பிரன்ஹாம் அவர்களே'' என்றாள் அவள். '' நான் அதைப் பற்றி விசித்திரமாக உணருகிறேன்'' என்றேன் பாருங்கள்? '' ஏதாவது சம்பவிக்கப் போகிறதா?'' என்றாள் அவள். “எனக்குத் தெரியாது, ஒன்று என்னை எச்சரித்தது போல் நான் உணருகிறேன்'' என்றேன். 3சில நிமிடங்களுக்கு முன்பாக அவள் என்னை அழைத்து, தான் ஒரு விபத்தில் சிக்கியதாகத் தெரிவித்தாள். ஒருவரும் காயப் படவில்லை. ஆனால் அது தேவனுடைய கரமாக இருந்தது. வடக்கே எங்கும் பனியாயிருக்கிறது. எனவே அதில் அவள் சறுக்கி விழுந்து விட்டாள். இண்டியானா போலீஸ் என்ற இடத்தில் தான் அவளது வாகனம் பனியில் பாதையை விட்டுவேகமாக சறுக்கிக் சென்றது. “ ஓ ஆண்டவரே எனக்கு உதவி செய்யும்'' என்று அவள் அந்த சமயத்தில் கதறினாள். அப்பொழுது வாகனமானது மீண்டும் இந்தப் பக்கமாக சறுக்கிக் கொண்டே வந்து சாலையில் சரியான பாதைக்குள் வந்து, மீண்டும் சரியாக ஓட ஆரம்பித்தது. அவள் சாலையில் சரியானபடி வாகனம் போவதைப் பார்த்தபொழுது, ”என்னே என்னே, அந்த ஆபத்திலிருந்து தப்பித்ததைக் குறித்து நான் எவ்வளவாய் நன்றியுள்ளவளாய் இருக்கிறேன்'' என்று கூறினாள். ஏனெனில் ஏனைய வாகனங்கள் பறந்து வருவது போல் அதே பாதையில் வந்து கொண்டிருந்தன. எனவே அவள் சாலைக்கு அப்பால் சென்று வாகனத்தை நிறுத்தினாள். ஒரு கோப்பை காபி வாங்கி அருந்துவதற்காகத் தான் அவள் நிறுத்தினாள் என்று நம்புகிறேன். அவ்வாறு தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அதை விட்டு வெளியே வருவதற்கு முன்னர் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவளது வாகனத்தில் மோதியது. இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக வந்து மோதிய வாகனங்கள் யாவும் அங்கே அடுக்கடுக்காக குவிந்து போய்விட்டன. அவள் சிறிது அதிர்ச்சிய டைந்தது மாத்திரமே தவிர மற்றபடி வேறு கெடுதல் ஏதும் ஏற்பட வில்லை. அவள் கர்த்தருக்கு நன்றி தெரிவிக்க விரும்பி, என்னை தொலைபேசியில் அழைத்து, தான் சேதம் ஏதும் அடையாமல் தப்பித்தற்கு சபையானது நன்றி தெரிவித்துக் கொள்ளவும், மேலும் தான் பத்திரமாக வீடு போய்ச் சேர தோடர்ந்து வேண்டிக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டாள். அவள் இப்பொழுது தான் வாகன ஓட்டுவதற்குரிய உரிமம் பெற்றுள்ள ஒரு புதிய காரோட்டியாவாள். எனவே நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 4ஆனால் கர்த்தருடைய எச்சரிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொள்வது எப்பொழுதும் பயனளிக்கிறதாக இருக்கிறது. “நல்லது, எனக்கு ஒரு நாள் வேலை போய்விடும்'' என்றாள். ஒரு நாள் வேலை யானது என்ன? வாகனத்தின் சேதமடைந்த பின்பகுதியை சீர் செய் வதற்கு ஆகும் செலவை விட அது ஒன்றும் அதிகம் நஷ்டத்தை ஏற்படுத்தப் போகிறதில்லை. எனவே கர்த்தரோடு தங்கியிருப்பது எவ்வளவோ மேலானது ஆகும். அது சரியானது தானே - அவர் நமக்கு ஏதாவது சொல்வாரானால், அதிலே நாம் நிலைத்திருப்பது நமக்கு நல்லது ஆகும். ஏனெனில் அவர் எப்பொழுதும் சரியான வராக இருக்கிறார். அவர் அவ்வாறு இருக்கவில்லையா? எப்பொழு தும் அவர் சொல்வது சரியாகத் தானிருக்கும். 5இந்த வாரமானது அற்புதமான வாரமாக இருந்திருக்கிறது. இந்த அற்புதமான வாரத்தைப் பற்றி தேவனிடத்திலும் உங்களிடத் திலும் எவ்வாறு எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. என் வாழ்க்கையில் நான் பிரசங்கித்த நாட்களிலேயே, இந்த எட்டு நாட்கள் தான் மிகவும் மகிழ்ச்சியான நாட்ளாக இருக்கின்றன. அது உண்மையானது. கர்த்தருடைய காரியங்கள் அநேகமானவைகளை நான் கற்றுக் கொண்டுள்ளேன். அவருடைய ஈவு இரக்கங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். அவர் என்னவெல்லாம் நமக்கு செய்திருக்கிறார் என்பதைப் பற்றியும் சபையில் தேவ ஆவியானவர் மீண்டும் கிரியை செய்வதையும் நான் அறிந்து கொண்டேன். மீண்டும் சபையில் ஆவியின் வரங்கள் கிரியை செய்வதை காண்பதற்கு மகிழ்ச்சியாயிருக்கிறேன். இப்பொழுது ஒரு தடவை நீங்கள் வெளியே போயிருக்கும் சமயம், யாராவது ஒருவர் உள்ளே நுழைந்து சபையை அசுசிப் படுத்துகிறதைப் செய்வது போல் தோன்றுகிறது. அவர்கள் எதை யாவது செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். வரங்களை நீங்கள் கனவீனப்படுத்தினால், தேவன் உங்களை கனவீனப்படுத்துவார். பாருங்கள்? அவர்களை நீங்கள் சீர்படுத்திட வேண்டும். நாம் அது எவ்விதமாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறோமென்றால், அது அதனுடைய ஒழுங்கின்படி இருக்கவேண்டும். இவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுகிற விதத்திலும் அந்த ஒழுங்கு இருக்க வேண்டும். வெறுமனே வேத வாக்கியங்களை மேற்கோள் காட்டுதல் மட்டும் போதாது; ஆனால் என்ன நடக்கப் போகிறதோ அதைப் பற்றி முன்னுரைத்தல் இருக்க வேண்டும். நீங்கள் அதனுடன் தொடர்ந்து உண்மையான பயபக்தியோடு இருப்பீர்களாயின், அது ஆரம்பிக்கும்... ஒரு சபையில் யாராவது ஒருவர் ஒழுங்கான வழியை விட்டு விலகிச் சென்றால், பரிசுத்த ஆவியானவர் வெளிப் படையாக யார் அதைச் செய்கிறவர்கள் என்பதை உரைத்து விடுவார். அப்பொழுது சம்மந்தப்பட்டவர்கள் கடிந்துரைக்கப் பட்டு, குத்தப்பட்டு, பீடத்தண்டை சென்று அறிக்கையிடுவார்கள். அதற்காகத்தான் வரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. 6இங்கே இருக்கிற நமது பாஸ்ட்டராகிய சகோதரன் நெவில் அவர்களை பார்க்கையில், அவர் ஒரு காலத்தில் சங்கோஜப்படுகிற, பின் தங்கியிருக்கிற ஒரு வாலிபனாக இருந்தார்- பெந்தெகொஸ் தேயைப் பொறுத்த மட்டில், அவர் அதை பிடித்துக் கொள்ளவே மாட்டாரோ என்பது போல் தோன்றியது. ஆனால் அவர் எழுந்து நின்று, பாஷைகளை வியாக்கியானம் செய்து தீர்க்கதரிசனம் சொல்லுவதைப் பார்க்கையில், அவர் நீண்ட அனுபவத்திற்குள்ளாக வந்துவிட்டார் என்றே நான் உங்களுக்குக் கூறுவேன். நாம் நமது பாஸ்ட்டருக்காக ஜெபிக்ககடவோம். சபையில் வரங்கள் வர ஆரம்பிக்கின்றன. இங்கே இன்னொரு எளிய தாழ்மையான சகோதரனொருவர், இங்கு எங்கோ தான் இருக்க வேண்டும். அவர் எப்பொழுதும் இங்கே இருக்கிறார். சகோதரன் ஹிக்கின்பாதம் என்ற அந்த சகோதரன்தான் அவர், அவர் சபையின் தர்மகர்த்தாக்களில் ஒருவராக முன்பு இருந்தார். அவர் ஒரு எளிய, தாழ்மையான விலையேறப்பெற்ற, தெய்வ மனி தனாவார். அவர் அந்நிய பாஷைகளில் பேசும் வரத்தைப் பெற்றி ருக்கிறதைப் பார்க்கையில், சகோதரன் ஹிக்கின்பாதம் இவ்வா றெல்லாம் செய்வார் என்று யார் எண்ணிப் பார்த்திருக்க முடியும்அவருங்கூட மிகவும் சங்கோஜப்படுகிற, தன்னை மறைத்துக் கொள்ளுகிற ஒரு எளிமையான சகோதரனாவார். யாருக்கும் தெரியாமல் இருக்க விரும்புகிறவர் அவர். அவர் ரொம்பவும் பேசமாட்டார், எப்பொழுதும் பின்னாலேயே மறைந்திருப்பார். ஆனால் பாருங்கள், தேவனோ அவ்விதமான ஒரு மனிதனை எடுத்து உபயோகிக்க முடியும், ஏனெனில், அவர் தன்னை முன்னுக்குத் தள்ளிக் கொண்டு, ஏதாவது செய்ய விரும்புவதில்லை. அவர் அவ்வாறு செய்ய விரும்பியிருந்திருப்பாரானால், அவர் பெருமை யுள்ளவராய் இருந்திருப்பார். ஆனால், அவரோ அப்படிச் செய்ய விரும்பாமல் இருக்கிற வரையிலும், அவ்விதமாக தேவன் அவரை ஒருவேளை உபயோகிக்க முடியும். ஜூனி இங்கே இருக்கிறாரா? அவர் அந்த கம்பத்திற்குப் பின்னால் இருக்கிறார் என்று கருதுகிறேன். 7அநேகர் அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் கேட்டிருக் கிறேன் என்பதைப் பற்றி நான் கூறுவேன். அவையெல்லாம் தேவனிடத்திலிருந்தே வருகிறது என்று நான் எண்ணுகிறேன். ஏனெனில், யாருக்காவது, எங்காவது, ஏதாவது அர்த்தம் இல்லா மல் எதையாவது நீங்கள் தொனிக்கச் செய்ய முடியாது. “எத் தனையோ விதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது. அவை களில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல'' என்று வேதத்தில் கூறப் பட்டுள்ளது. அப்படியென்றால், ஒவ்வொரு பாஷைக்கும் ஒரு அர்த்தமுண்டு என்று அர்த்தமாகிறது. ஏதோ ஒரு அர்த்தம் இல்லாமல் நீங்கள் எதையும் உரைக்க முடியாது. நான் ஆப்பிரிக்கா வுக்குப் போகிற வரையிலும் அதைப்பற்றி நான், இது எவ்வாறு இருக்கும் என்று வியந்து கொண்டிருந்ததுண்டு. அங்கே நான் அந்த அநேக விதமான பாஷைகளை, சப்தங்களைக் கேட்டு, அது யாரோ ஒருவருடைய பேச்சு என்பதை கண்டுக் கொண்டேன். சில வேளை களில் அது ஒரு தூதனின் பேச்சாகவும் இருக்கிறது. 8ஆனால் ஜூனி ஜேக்சன் அவர்கள் ஒரு சங்கோஜமுள்ள, பின்னாலேயே இருந்து வந்த மிகவும் மென்மையான நகர் புறத்து பிரசங்கியாக, எலிசபெத் இண்டியானாவில், மெதோடிஸ்ட் சபை யில் இருந்து வந்தார். அப்பிரதேசம், நாட்டைவிட்டே மிகவும் தூரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியின் பக்கமாக இருந்தது. அமைதியாக இருப்பார், ஒன்றும் அதிகம் பேசமாட்டார். பின்னா லேயே ஒளிந்து கொண்டிருப்பார். சில வேளைகளில் நான் அவரைப் பார்த்து, அசைத்துக் கைகுலக்கி, “ஏதாவது சொல்லுங் கள் ஜூனி, என்னைப் பார்த்துக்கொண்டே அங்கே அப்படியே அமர்ந் திருப்பதை விட்டு விடுங்கள்'' என்று கூற வேண்டும்போல் தோன்றினதுண்டு. நாங்கள் காட்டில் வெட்டப்பட்ட அடி மரத்தில் உட்கார்ந்து கொள்வோம். அவர் உட்கார்ந்து கொண்டு “நல்லது, ... நான் கருதுகிறேன்... எல்லாம் சரிதான்.'' என்பார். ''ஓ ஜூனி, உங்களுக்குப் பதில் நானே பேசிவிடலாம் போல நான் உணருகிறேன். ஏனெனில் நீங்கள் என்னிடம் மிக மெதுவாகப் பேசுகிறீர்கள்'' என்று அவரிடம் கூறுவதுண்டு. தேவனோ அவருக்கு அந்நிய பாஷைகளில் பேசும் வரத்தை அளித்துள்ளார். என் வாழ்க்கையில் இதை விட மிகத் தெளிவான பாஷையை ஒருபோதும் கேட்டதேயில்லை, பாருங்கள்? 9சபையில் அவரைக் கவனித்துப் பாருங்கள் மற்ற பெண் மணியைப் பற்றி அறிந்திராத இந்த ஒரு பெண்மணி பேசியதைப் பாருங்கள்? அவர்கள் ஒருவரையொருவர் இன்னார் என்று அறிந் திருக்கவில்லை ஆனால் அவர்களிருவரும் ஒரேவிதமான தொனியில் பேசியதைப் பாருங்கள். அது வியாக்கியானம் செய்யப்பட்ட பொழுது, சரியாக அப்படியே இருந்ததை பார்த்தோம். அதே விஷயம் தான் வியாக்கியானம் செய்யப்பட்டது. செய்தியானது பூரணமாக இருந்தது சபைக்கு. அது எவ்வாறு இருக்கிறது என்பதைப் பாருங்கள். நாம் இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் நீங்கள் உங்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள வேண் டாம். நீங்கள் அவ்வாறு செய்தால், நீங்கள் உங்களை மட்டம் தட்டிக் கொண்டு விடுவீர்கள். அப்பொழுது பிசாசு உங்களை பற்றிக் கொள்வான். எனவே தாழ்மையோடு இருங்கள். ''ஓ கர்த்தாவே, நான் பின்னாலேயே இருக்கட்டும். வேளைக்கு முன்பாக நான் என்னை உயர்த்திக் கொள்ளாதபடி செய்யும்'' என்று அவரிடம் கூறுங்கள். அவர் ஒருபோதும் சரியான வழியை விட்டு விலகிச் செல்ல மாட்டார். சில சமயம், நீங்கள் அப்படிச் செய்தால், அப்பொழுது இங்கிருக்கிற மேய்ப்பன் அதைப் பற்றி உங்களுக்கு சுட்டிக் காட்டு வார். பாருங்கள், நாம் பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருக்கையில், அப்போது வரங்கள் குறுக்கிடக் கூடாது. வழக்கமாக, சபையில் வரங்கள் நல்ல விதமாக கிரியை செய்து கொண்டிருக்குமானால், மற்ற ஆராதனைக்கு முன்பாக, நமக்கு இன்னும் கூடுதலான கூட்ட வேளையை நாம் உடையவர்களாக அப்போது இருப்போம். அந்த விஷயத்தில் கர்த்தர் உங்களோடு கிரியை செய்வராக, ஏனெனில், செய்தி அளிக்கும் வேளையில் அது குறுக்கிடாமல் இருக்கத்தக்கதாக அப்படியிருக்கட்டும். நாம் சபை கூடி வந்திருக்கையில், கொஞ்ச நேரம் நீங்கள் அமைதலாயிருத்தல் வேண்டும். ஆனால் தேவன் கொடுக்கத்தக்க செய்தியை வைத்திருப்பாராயின், எங்காவது அதை அவர் கொண்டு வருவார். அவர் கிரியை செய்ய விடுங்கள். ஆனால் அது வேத போதனையின்படியே தான் இருக்கும். ஒரு வேளை சகோதரன் நெவில் அவர்கள் அந்தக் காரியங்களைப் பற்றி போதிப்பார். நாம் அதின்படி செய்ய முயலுவோம். நான் அவருக்கு இந்த விஷயத்தில் உதவி செய்ய முயலுவேன். நாங்கள் இருவரும் சேர்ந்து, அது எவ்வாறு உபயோகிக்கப்பட வேண்டும் என்கிற விஷயத்தை உங்களுக்கு தெளிவாகக் காண்பிப்போம். 10என்னுடைய போலந்து நாட்டு சகோதரனே, நீங்கள் நன்றாக இருக்கிறதாக உணருகிறீர்களா? அது அருமையாயிருக்கிறது. ஓ, கர்த்தர் எப்படியாய் அவரை ஆசீர்வதித்திருக்கிறார்! எட்டு ஆண்டு களுக்கு முன்பாக நடைபெறப் போகிற ஒரு காரியத்தைப் பற்றி அவருக்கு கூறினேன். அவர் ஒரு கண்டிப்பான திரித்துவவாதி, அவர் மிகவும் குழம்பிப் போயிருந்தார். அன்றொரு நாளில் கர்த்தர், “ஒரு மனிதன் வருகிறார், கறுமையான முடியையுடையவரும், பழுப்பு நிற கண்களை உடையவரும் கனத்த தேகமுள்ளவருமான வராக அவர் இருப்பார். அவரை அனுப்பிவிடாதே, நான் தான் அந்த மனிதனை உன்னிடம் அனுப்புகிறேன்'' என்று கூறினார். அவர் எங்கே குழம்பியிருந்தாரோ அதைக் குறித்ததான வேதவசனத்தை நான் எடுத்து, ஒரு சிறு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி, அங்கே வைத்தேன். சிறிது நேரம் கழித்து, அவர் அங்கே வந்தார். “இங்கே ஒரு மனிதர் உங்களை காண வந்திருக்கிறார்'' என்று என் மனைவி கூறினாள்'' ''அவர் தான் அந்த மனிதர், அவரை உள்ளே கொண்டு வா'' என்று கூறினேன்'' 11பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினாலே அவருக்குச் சொல்லப்பட்டதை பற்றி என்னிடம் அவர் கூறினார். எவ்விதமாக அவர் விசுவாசித்திருந்தார் என்பதையும் பற்றியும், தன் ஜனங் களின் மத்தியில் செய்தியை பற்றிக் கொண்டிருந்ததைப் பற்றியும் அவர் கூறினார். அவர் குறை கூறப்பட்ட போதிலும், செய்தியோடு உறுதியாக நிலைத்து இருந்திருக்கிறார். சிறிது காலத்திற்கு முன்பாக, ஒரு கூட்டத்தில் நான் அவர், அவரது பெயரைச் சொல்லி அழைத் தேன். நான் அந்தப் பெயரை எவ்வாறு உச்சரித்தேன் என்பது எனக்கே தெரியாது. நான் அந்தப் பெயரை அக்கூட்டத்தில், ஒவ்வொரு அட்சாராமாக பிரித்துக் கூறினதாகக் கூறினார். அவர் தன்னுடைய கரத்தில் ஒரு குழந்தையை சுமந்து கொண்டிருந்த தாகவும், அதற்கு முகத்தில் வடுக்களால் நிறைந்ததாக இருந்ததாக வும், அது முழுவதும் குணமடைந்ததாகவும் கூறினார். கர்த்தர் எவ்வாறு... 'நல்லது, இப்பொழுது உங்களுக்குத் தேவையானது என்னவெனில், நீங்கள் சபைக்குப் போய், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டும்'' என்று நான் கூறினேன். நான் மலையுச்சியிலே சற்று நேரத்திற்கு முன்பாக அவரைச் சந்தித்தேன், ஏனெனில் அவர் இறங்கி வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றார். இப்பொழுது அவர் முழு வதும் திருப்தியடைந்தவராக, நல்லபடியாக ஆகி வீடு திரும்பிக் கொண்டிக்கிறார். அவர் வரவிருக்கும் நாட்களில் ஒன்றில், போலந் திலும், ஜெர்மனியிலும் இன்னும் அங்குள்ள ஏனைய இடங்களிலும் எனக்கு மொழிபெயர்ப்பாளாராக இருப்பார் என்று நான் நம்பு கிறேன். கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. என் சகோதரனே. 12அநேக பெரிய காரியங்களை நம்முடைய கர்த்தர் செய்கிறார். அவருடைய இரக்கத்தை நாம் காண்கையில், அவர் கிழக்கு மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளிலெல்லாம் இருந்து தன் அருமையான பிள்ளைகளை வழி நடத்திக்கொண்டிருக்கிறார். அவர்களை ஒன்றாக சேர்த்து, வெளியே பிரித்தெடுத்து, அசைத்துக் கொண்டிருக்கிறார். எவ்வளவோ காரியங்களை நாம் கூறலாம். இப்பொழுது, அடுத்த ஞாயிறு இரவு மறந்து விட வேண்டாம். கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறு இரவில் நமக்கு... அடுத்த ஞாயிறு காலையில் இரு வேளை சுகமளித்தல் ஆராதனை இருக்கும். நான் இவ்வாறு கூறுவதள்கான காரணம் என்னவெனில். ஒரு ஞாயிறு காலையில் அளவுக்கதிமாக நபர்கள் இருந்தால். நான் அப்பொழுது ஞாயிறு இரவில் அதை வைத்துக் கொள்ளலாமல்லவா? அதனால்தான். ஆனால் ஞாயிறு காலையி லேயே நான் எல்லோருக்கும் ஜெபித்து அனுப்பிலிட முடிந்தால். அதுவும் நல்லது தான். புதன் இரவு வாரத்தின் நடுவில் நடத்தப்படும் ஜெபக் கூட்ட மாகும். இங்கே அருகாமையில் இல்லங்களை உடையவர்கள், இங்கே கூடி வந்து அந்த ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். அதை நீங்கள் விட்டு விட வேண்டாம், அதில் தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள். ஜெபியுங்கள், நெருக்கமாக தேவனைத் தேடுங்கள். உங்கள் மத்தியில் மதவெறி நுழைந்துவிட இடம் கொடுத்து விடாதீர்கள். ஒரு பொய்யை ஏற்றுக் கொள்ளக் கூடாதபடிக்கு உண்மையானது மிதமிஞ்சி உள்ளது. எனவே தவறான பாதையில் போய் விடாதீர்கள். அங்கே நிலைத்திருங்கள். 13ஒரு பழக்கப்பட்ட “ஆமென்'' சப்தத்தை நான் கேட்டேன். அதை நான் அநேக ஆண்டுகளாக கேட்டுப் பழக்கமானதாகும். அது சகோதரன் ரஸ்ஸல் க்ரீச் தான். அன்றொரு இரவில் பேட்டி தான் அந்நிய பாஷையில் பேசியது என்று என்னிடம் கூறினார்கள். பெட்டி எங்கேயிருக்கிறாய்? இங்கே இருக்கிறாயா, இனிமை யானவளே? ஆம், நான் அவளை பார்த்தால், அவளை அடையாளங் கண்டு கொள்ளகூட இயலாது. நான் அவளை என் கரங்களில் குழந்தையாயிருக்கையில் சுமந்து, இதே இடத்தில் கர்த்தருக்கென பிரதிஷ்டை செய்தேன். மேடா கூறினாள். ''அவள் இப்பொழுது ஒரு அழகான இளம் வாலிபப் பெண்ணாக பரிசுத்த ஆவியின் வல்லமையை தன் மேல் பெற்றுக் கொண்டவளாக இருக்கிறாள்'' என்று. ரஸ்ஸல் அவர்களே, நீங்கள் ஒரு ஐசுவரியவான். ஆம் நீங்கள் அப்படித்தான். சகோதரி க்ரீச் எங்கேயிருக்கிறார்கள்? நான் அவர்களைப் பார்க்கவேயில்லை. இங்கே எங்காவது இருக்கிறார்களா? ஓ, அங்கே இருக்கிறார்கள். ஓ, சகோதரி க்ரீச் அவர்களே, அவ்விதமாக ஒரு பிள்ளையை தேவன் உங்களுக்குக் கொடுத்தற்காக நான் எவ்வள வாய் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன் தெரியுமா? நீங்கள் அதை உணரவில்லை, எவ்வளவு நன்றியோடு இருக்கிறேன் என்பதை. இளம் வாலிபப் பருவத்திலே, பெண்களெல்லாம், நகைத்துக் கொண்டும் சிரித்துக்கொண்டும், வாத்து மாதிரி சிகை அலங்காரம் செய்து கொண்டுள்ள பையன்களோடு வெளியே சென்று, அபத்தமான காரியங்களை செய்து கொண்டும், இன்னும் இன்னபிற காரியங்களை செய்து கொண்டும் இருக்கிற பிராயம் அது. ஆனால் இந்த சிறு பெண்ணோ பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிறையப் பெற்று, அந்நிய பாஷையில் பேசிக் கொண்டிருக்கிறாள். பெந்தெகொஸ்தே பிரசங்கிகளே, எத்தனை பேர்கள் நீங்கள், உங்களுடைய வாலிபமான பெண்கள் ராக் ரோல் பார்ட்டிகளுக்கு போகிறவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டு, உங்களுடைய முழு ஜீவியத்தை ஒப்புக் கொடுப்பீர்கள்? 14அதை மதிப்பிடுங்கள், சகோதரனே, நீங்கள் அங்கே இண்டர் ஸ்டேட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிவேன். நானுங்கூட என் பிள்ளைகளை வளர்ப்பதற்கு அநேக நாட்கள் பாடுபட்டிருக்கிறேன். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். அவர் பிரதிபலன் அளிக்கிறவர், ''நான் திரும்பக் கொடுப்பேன்'' என்று அப்படித்தான் கூறுகிறார். பெட்டி, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நான் உன்னைப் பார்த்தால் என்னால் நீ யார் என்று அறிந்து கொண்டிருக்க முடியாது என்று கருதுகிறேன். ஆனால் அந்த நேர்ப்பாதையை விட்டு விலகாதே, எனக்கு இனிமையானவளே, ஒரு எலுமிச்சையாக இருப்பதை பொன்னிற ஆப்பிள் பழம் போல் ஏமாற்றிக் காட்டு வதைப் போல், பிசாசு உனக்குள் எதையாவது போட்டு விடுவதை அனுமதித்து விடாதே. அதை அப்படியே போட்டுவிட்டு விலகி விடு. உன் கண்களை சிலுவையின் மேல், கிறிஸ்துவின் மேல் வைத்து விடு. வேளையானது சமீபித்துவிட்டபடியினால், முன் னேறிச் சென்று கொண்டேயிரு. பார்? 15தேவனுடைய ஆசீர்வாதங்களைக் குறித்து இன்னும் எத்தனையோ புத்திமதிகளை நான் சொல்லிக்கொண்டே போகலாம். அநேகரை நான் சந்திக்கவே இயலாமற் போய்விட்டது. இந்த வாரம் முழுவதிலும் ஐம்பது பேர்களுக்குக் கூட நான் ஜெபிக்க வில்லை வருவோரும், போவார்களும், அவசர அழைப்புகளும் இருந்தபோதிலும், நான் முழுவதும் படித்து ஆராய்ந்து கொண்டேயிருந்தேன். ஆனால் இப்பொழுது, அடுத்த ஞாயிறன்று, கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறு காலையில் ஜனங்களுக் காக ஜெபித்து, கர்த்தர்தாமே இறங்கி வந்து, நமக்கு மகத்தான வல்லமையை அருளி, நமக்கு தம்மை பிரத்தியட்சமாக்கி தரும்படி கேட்கப் போகிறோம். 16இந்த சபை காலத்தைக் குறித்து ஆரம்பிக்கிறதை நான் விரும்பவில்லை. ஏனெனில், அவற்றின் இறுதியானது இதுதான் என்பதை அறிந்திருக்கிறேன். இப்பொழுது, இச்சபைக் கால மானது, ஏழு சபைக் காலங்களின் முடிவாக அது இருக்கப் போகிறது. நீங்கள் அதிலுள்ள இன்பத்தை அனுபவித்தீர்களா? (சபையார் ''ஆமென்'' என்று பதிலளிக்கிறார்கள் -ஆசி). இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், நான் ஆரம்பத்தில் கூறியது போலவே இதை முடிவிலும் கூறுகிறேன். நான் கூறினவைகளில் அநேகவற்றோடு நீங்கள் ஒத்துக் கொள்ளாமலிருக்கும் காரியம் அநேகம் இருக்கலாம். ஆனால் அவைகளை எனக்கெதிராகக் கொள்ளவேண்டாம். எப்படியிருந்தபோதிலும் என்னை நேசியுங்கள். ஏனெனில், நீங்கள் என்ன செய்தாலும், என்ன கூறினாலும் அது ஒரு வித்தியாசத்தையும் எனக்கு உண்டாக்காது, அதை நான் பொருட்படுத்தமாட்டேன். நான் உங்களைப் பற்றி ஒரே விதமாகத் தான் கருதுவேன். இன்னும் கூடுதலாக ஏதாவது இருக்குமானால் உங்களைப் பற்றி நான் இன்னும் கூடுதலாக சிந்தித்துக் கொள்வேன். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதை தேவன் அறிவார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தைப் பற்றி கூப்பிடும் எந்தவொரு மனிதனையும் நான் நேசிக்காமல் இருந்ததில்லை. பாருங்கள்? 17நாம் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு கொண்டிருந்த போதிலும், உங்களுக்கெதிராக எந்தவிதமான கசப்போ, மாறு பாடோ கொண்டிருக்கவில்லை. ஒரு மேசையில் நாம் அமர்ந்திருக் கையில், நம்மில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான 'பை' (ஒரு வகை 'கேக்' - மொழிபெயர்ப்பாளர்) சாப்பிடுகிறவர்களாக இருப்போம். அதேபோல்தான் இங்குள்ள காரியமும். ஒருவரோடு ஒருவர் ஐக்கியங்கொள்ளுகிறது என்பதில், நாம் ஒருவரையொரு வர் நேசிக்கிறவர்களாயிருக்கிறோம். அப்படி நாம் செய்யாவிடில் நாம் அதைச் செய்தாக வேண்டும். நாம் அதை செய்கிறவரையிலும், தேவனுக்குள்ளாக நாம் அதிக தூரம் செல்ல முடியாது. ஒரு விஷயத்தைப் மறந்து விட வேண்டாம். மறந்து விடவேண்டாம். வரங்களில் எல்லாம் மிகப்பெரிய வரமானது என்னவெனில், அது அன்புதான். “நான் மனுஷர் பாஷைகளைப் பேசினாலும் தூதர் பாஷைகளைப் பேசினாலும், என் சரீரத்தை சுட் டெரிக்கக் கொடுத்தாலும், சகல அறிவையும் நான் உடைய வனாயிருந்தாலும், நான் ஒன்றுமில்லை... நிறைவானது... அன்பு... வரும் பொழுது ...'' அனைத்து ஆவிக்குரிய வரங்களும், அன்போடு இசைந்ததாயில்லாவிடில், அது ஒன்றுமில்லை. வேறு எதுவும் ஒழிந்துபோம். ஆனால் அன்போ நிலைத்திருக்கும். அது 1 கொரிந் திரியர் 13 ம் அதிகாரத்தில் உள்ளது. 18இப்பொழுது இன்றிரவில் இந்த மகத்தான சபைக் காலத் திற்குள் பிரவேசிக்கிறோம். ஓ, என்னே! இன்றிரவில், ஒன்பது மணி கழித்து கால்மணி நேரம் வரை ஒரு வேளை நமக்கு ஆகலாம். இங்கிருக்கிற ஒவ்வொருவரையும் உட்கார வைக்க போதுமான இடவசதி இல்லை, அதற்காக நிச்சயமாக நான் வருந்துகிறேன். ஆனால் ஒரு நாளில் நமக்கு இடம் கிடைக்கும். இப்பொழுது நீங்கள் எனக்கு ஒரு சாதகம் செய்ய வேண்டு கிறேன். என்னுடைய நிலையை நீங்கள் பார்க்கிறீர்கள், ஒரு நாளில் எனக்கு அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை நீங்கள் காண்கிறீர்கள், நேரமானது சமீபித்து விட்டது பாருங்கள்? இப்பொழுது இதை நீங்கள் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். அதாவது நீங்கள் எனக்காக எப்பொழுதும் ஜெபி யுங்கள். நான் எவ்வளவு உத்தமமாயிருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு உத்தமமாய் இருந்திருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் இன்னும் சிறு பிள்ளை இல்லை. நான் ஐம்பத்து ஒன்று வயதுடையவனாக இருக்கிறேன். தேவன் என்னை அழைத்தால் ஒழிய நானாக போக முடியாது. நான் எந்த விதமாகப் போக வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ அந்த வழியாகத் தான் நான் போவேன், பாருங்கள்? அவ்விதமாகத்தான் அது இருக் கும். ஆனால் என்னவானாலும், நான் உத்தமமாயிருந்து சத்தியத்தை உங்களுக்கு சொல்லியாக வேண்டும். எனவே, சில சமயங்களில் அது ஒரு தனிமையான நடைப் பயணமாக இருக்கிறது என்பதை அறிவேன். ஆனால் அவர் என்னோடு இருக்கிற வரையிலும், அது என்ன வித்தியாசத்தை உண்டாக்கிவிடப்போகிறது? 19இந்த மகத்தான சபைக் காலத்திற்குள் நாம் பிரவேசிக்கும் முன்னர், சற்று நேரம் மீண்டும் நாம் ஜெபத்திற்காக எழுந்து நிற்க இயலுமா என்று அறிய விரும்புகிறேன். பாருங்கள்? அவ்வாறு எழுந்து நின்று சற்று நீட்டிக் கொள்வதினால், சௌகரியமாக இருக்கும். ஆராதனையின் முடிவில்... எத்தனை பேர்கள் தேவனுக்கு முன்பாக ஜெபத்தில் நினைத்துக் கொள்ளப்பட வேண்டுமென விரும்புகிறீர்கள்? அப்படி விரும்புகிறவர்கள், 'ஓ கர்த்தாவே, காலத்தின் முடிவில் உள்ள என்னை நினைந்தருளும், எல்லா ஜீவனும் முடிவுறுகிறபொழுது, அப்பொழுது என்னை நினைத்தருளும்“ என்று தேவனை நோக்கி கரங்களை உயர்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். 20எங்கள் பரம பிதாவே, கடந்த வார முழுவதிலும், எங்கள் மத்தியில் நிலவியிருந்த ஜீவனுள்ள தேவனின் பிரசன்னத்திற் காகவும், உம்மிடத்திலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டவைகளுக் காகவும், காலங்கள்தோறும் எவ்வாறு உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தினீர் என்பதற்காகவும், உம்முடைய வார்த்தையை எவ்வளவாய் நீர் எங்களுக்கு தெளிவாக்கிக் கொடுத்தீர் என்பதற்காகவும் நாங்கள் உமக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள் வதற்கு எங்களுக்கு நாவுகள் போதாது. நாங்கள் எவ்வளவாய் உமக்காக காத்திருந்தோம் என்பதையும், எங்களின் அன்பை நாங்கள் எவ்வாறு தெரிவிக்க முயற்சித்தோம் என்பதையும்அதைச் சரியாகச் செய்ய எங்களால் இயலாமற் போயிற்று - அழிவுக்கேதுவான நாவுகளால் அதைச் செய்யமுடியாது. எங்களை நீர் இரட்சித்ததற்காகவும், உமக்கென்று ஒரு பசியை எங்களில் தந்ததற்காகவும் நன்றி செலுத்துகிறோம். “நீதியின் மேல் பசி யுள்ளவர்கள் பாக்கியவான்கள்'' என்று வேதத்தில் எழுதப் பட்டுள்ளது. நீதியின் மேல் பசியாயிருப்பதே ஒரு ஆசீர்வாதமான காரியமாகும். அதன்பிறகு நீர் அந்த பெரிய வார்த்தையை உரைத்தீர்: ''அவர்கள் திருப்தியடைவார்கள்.'' இப்பொழுது கர்த்தாவே, நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். எங்களுடைய குறைகளை எங்களுக்கு மன்னியும். லவோதிக்கேயா என்ற பெயருள்ள இந்தக் கடைசி சபைக் காலத்திற்குரிய செய்திக்குள் நாங்கள் பிரவேசிக்கையில், வேத வாக்கியங்களையும், வரலாற்றையும் நாங்கள் பார்க்கையில், அது மிகவும் சரியாக இசைவாக இருக்கிறது. எனவே பிதாவே, இக்கடைசி காலத்தைக் குறித்து உம்முடைய தீர்க்கதரிசன வார்த் தைகளில் உள்ளதை நாங்கள் அறிவோம். அது ஏனைய ஆறு காலங் களைப் போலவே இருக்குமென்பது தான் அது. பிதாவே, இன்றிரவில் இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் எங்களிடமாய் வந்திட அனுமதித்து, நாங்கள் மேற்கொண்டு உமக்காக காத்திருக்கையில், ஆசீர்வதிக்கச் செய்வீர் என்று வேண்டுகிறேன். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். நீங்கள் அமரலாம். 21கர்த்தருக்கு சித்தமானால், இச்செய்திப் புஸ்தகமானது நம்மால் முடிந்த அளவு விரைவாக... சகோதரன் லியோ இந்த ஒலிநாடாவிலிருந்து, சுருக்கெழுத்தில் அவைகளை எழுதிக் கொண்டிருக்கிறார், அதிலிருந்து தட்டச்சு செய்ய அதுபோகும், பிறகு புஸ்தக வடிவில் அது கிடைக்கும். அப்படியே, ரோசெல்லா தனது புத்தகத்தை ஆயத்தப் படுத்திவிடுவாள். ''ஒரு குடிகாரி இரட்சிக்கப்பட்டாள்'' என்பது தான் அப்புஸ்தகத்தின் தலைப்பு. அவளுடைய கதையை நீங்கள் யாவரும் அறிவீர்கள். மேலும், பரிசுத்த ஆவியானவர் அவளை ஒரு கூட்டத்தில் எவ்வாறு அழைத்தார் என்பதையும் அறிவீர்கள். மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை திருத்தும் நான்கு பெரிய நிறுவனங்களும், சிக்காகோவில் உள்ள மருத்துவமனைகளும் அவளை மீட்க முடியாது என்று கைவிட்டுவிட்டார்கள். கர்த்தராகிய இயேசுவோ, ஓரே க்ஷணத்தில், அவளைவிட்டு அவை யாவற் றையும் அகற்றிப்போட்டுவிட்டார். அவள் சிறைச்சாலையிலிருந்து மற்றும் ஏனைய இடங்களுக்கும் சென்று, எவ்வாறு தேவன் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை விடுவிக்க முடியும் என்பதைப் பற்றி சாட்சி கூறிக்கொண்டிருக்கிறாள். அவளுடைய சாட்சியினால், அநேகர் கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தப்பட்டிருக்கிறனர். 22முதலாம் சபைக்காலம் அது என்னவென்று நீங்கள் கூறக் கூடுமா? அது எபேசு. இரண்டாவது? சிமிர்னா, மூன்றாவது? பெர்கமு. நான்காவது? தியத்தீரா. ஐந்தாவது? சர்தை. ஆறாவது? பிலதெல்பியா. ஏழாவது: லவோதிக்கேயா முதலாம் சபைக் காலமானது கி.பி.55ம் ஆண்டு முதல் 170 முடிய இருந்தது. அது எபேசுவாகும். சிமிர்னா கி.பி.170 முதல் கி.பி.312 முடிய. பெர்கமு கி.பி.312 முதல் 606 முடிய. தியத்தீரா 606 முதல் கி.பி. 1520 முடிய சர்தை 1520 முதல் 1750 முடிய. பிலதெல்பியா 1750 முதல் 1906 முடிய அப்பொழுதுதானே, லவோதிக்கேயாவின் காலம் ஆரம்பித்தது. ஆறாம் சபைக் காலமானது ஏழாம் சபைக் காலத்திற்குள் நீண்டு போயிருந்தது. நேற்று இரவில் நாம் அந்த காலத்தைக் குறித்துத்தான் பார்த்தோம். இப்பொழுது, இன்றிரவில், நாம் லவோதிக்கேயா சபைக் காலமாகிய முடிவுக் காலத்தைக் குறித்து காண்போம். 23கி.பி. 1906 லவோதிக்கேயா சபைக் காலமானது ஆரம்பித்தது என்று நாம் விசுவாசிக்கிறோம். நான் முன்னுரைக்கிறேன். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள் ஒலிநாடாவில் செய்தி யைக் கேட்கிறவர்களே! முன்னுரைக்கிறேன் என்ற வார்த்தையைக் கவனியுங்கள். அவ்வாறு நிச்சயம் நடக்கும் என்று நான் உரைக்கவில்லை; 1977 வாக்கில் அது முடியும் என்று நான் அனுமானித்து முன்னுரைக் கிறேன். 'ப்ரெடிக்ட்' (Predict) அப்பொழுது சபையானது முற்றிலும் விசுவாசத்துரோகத்திற்குள் போய் விடும். தேவனுடைய வாயினின்றும் அவள் வாந்தி பண்ணிப் போடப்பட்டிருப்பாள் என்றும் முன்னுரைக்கிறேன். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை அல்லது எடுத்துக் கொள்ளப்படுதல் எந்த வேளையிலும் வரலாம். அவ்விஷயத்தில் நான் ஒரு ஆண்டு தவறவிட்டிருக்கக்கூடும். அல்லது ஒரு வேளை இருபதாண்டுகள் தவறவிட்டிருப்பேன் அல்லது நான் அது நடப்பதைப் பற்றி நூறு ஆண்டுகள் கணக்குத் தவறுதலாக சொல்லிவிடக்கூடும். அது எங்கே எப்பொழுது நடக்கும் என்பதை நான் அறியேன். அவர் எனக்குக் காண்பித்த ஒரு தரிசனத்தின் அடிப்படையிலும், காலமானது முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறதின் அடிப்படையிலும், அது 33 க்கும் 77க்கும் இடையில் இருக்கலாம் என்று அனுமானத்தின் பேரில் முன்னுரைக்கிறேன். இந்த மகத்தான தேசமானது, ஒரு யுத்தத் திற்குச் சென்று அதினால் அது தூள் தூளாக நொறுக்கிவிடும். அது மிகவும் சமீபமாக இருக்கிறது பயங்கரமான விதமாக சமீபமா யிருக்கிறது. நான் அனுமானத்தின் பேரில் தான் முன்னுரைக் கிறேன். எனவே நான் தவறாக இருக்கக்கூடும். புரிந்து கொண் டுள்ள ஒவ்வொருவரும் “ஆமென்'' என்று கூறுங்கள். (சபையார் ”ஆமென்'' என்று கூறுகிறார்கள் - ஆசி). பாருங்கள். 24ஆனால் கர்த்தர் 1933 ஆண்டில், பெரிய வல்லமை படைத்தை ஒரு ஸ்திரீயைக் குறித்து எனக்கு தரிசனத்தில் காண்பித்தார். அது எழுதி வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறு ரூஸ்வெல்ட் உலகம் யுத்தத்திற்கு செல்லும்படி செய்துவிடுவார் என்பதைப் பற்றியும் சொல்லப்பட்டது. எவ்வாறு முஸோலினி எத்தியோப்பியா தேசத்தின் மேல் தனது முதலாவது படையெடுப்பை எடுப்பான் என்பதும் அத்தேசத்தை அவன் கைப்பற்றுவான் என்பதும், ஆனால் அவன் அவமானகரமான முடிவை எய்துவான் என்பதும் தரிசனத்தில் காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு, எவ்வாறு நாஜிக்கொள்கை, பாசிசக் கொள்கை, கம்யூனிசக் கொள்கை என்ற மூன்று விதமான 'இஸம்கள் தோன்றும் என்பதும், இவையெல்லாம் கம்யூனிசத்தில் போய் முடிவடையும் என்பதும் காண்பிக்கப்பட்டது. அக்காலத் தில் எத்தனைபேர்கள் நான் பின்வரும் காரியத்தை நீங்கள் நின்று கொண்டு சப்தமாகக் கூறும்படி செய்ததை நினைவில் வைத்திருக்கிறீர்கள்? “ருஷ்யாவைக் கவனி, வடதிசை இராஜாவாகிய ருஷ்யாவைக் கவனி, வடதிசை இராஜாவாகிய ருஷ்யாவைக் கவனி, வட திசை இராஜாவாகிய ருஷ்யாவைக் கவனி'' என்று மீண்டும் மீண்டும் உங்களை கூற வைத்தேன். எத்தனை பேர்கள் நான் இவ்வாக்கியங்களை கைகளை அசைத்து மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப கூறியதைக் கேட்டிருந்தீர்கள். முன் காலத்தவர்கள், சபையின் ஆரம்பக் காலத்தில் இருந்தவர்கள், அதை அறிவார்கள். அவன் என்ன செய்வான் என்பதும், எல்லா 'இஸம்களும்' முடிந்து ருஷ்யாவில் போய் குவிந்துவிடும் என்று உரைக்கப்பட்டது. 25“இந்த தேசம் ஜெர்மனியோடு யுத்தத்திற்குச் செல்லும்'' என்று பிறகு நான் கூறினேன். ''ஜெர்மனியானது அதன் எல்லையில் காங்க்ரீட் மதிலினால் அரணாக்கப்படும்'' என்றும் கூறினேன். அதுதான் மேகினோட் லைன் என்ற சுவராகும் அது கட்டப் படுவதற்கு பதினொன்று ஆண்டுகளுக்கு முன்பே முன்னுரைக்கப் பட்டது. ''அமெரிக்கர்கள் அந்த சுவரண்டை மிக மோசமான தோற் கடிப்பை அடைவார்கள்'' என்றும் கூறினேன். இங்கேயுள்ள சில சகோதரர்கள் அங்கே அந்த காங்க்ரீட் சுவரண்டை இருந்திருக் கிறார்கள். சகோதரன் ராய் ராபர்சன் அவர்களும் மற்றும் ஏனை யோரும் தான் அங்கே இருந்தார்கள். என்ன நடைபெற்றது என்பதை அவர்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள். அவ்வாறு தான் அமெரிக்கர்களுக்கும் நடந்தது. ஆனால் முடிவாக நாம் ஜெயிப்போம், நமக்கும் ஜெர்மனிக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தில் ஜெயிப்பதில் நாமும் ஒருவராக இருப்போம்'' என்று கூறினேன். 26'அந்தக் காலத்திற்கு பின்னர் விஞ்ஞானமானது மிகவும் முன்னேறிப்போய்விடும்'' என்று உரைத்தேன். அவ்வாறே அது நடந்தது, அவர்கள் அணுகுண்டையும் இன்னபிறவற்றையும் செய்தார்கள். அவர்களுடைய முன்னேற்றத்தின் கட்டத்தில் அவர்கள் முட்டை வடிவ மோட்டார் வாகனங்களைச் செய் வார்கள்'' என்று உரைத்தேன். 1933இல் இருந்து அந்த பழைய காலத்து பெரிய மோட்டார் வாகனம், மடக்கிக் கொள்ளும் வசதி யோடு துணியினால் மேல் மூடி உள்ளதாக இருந்தது. அதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? அதன் பெரிய பின்பகுதியை கீழே இழுத்துக் கொள்ளலாம். பின்னால் உபரி டயர் வைக்கப்பட்டிருக்கும். இப்பொழுது உள்ள வாகனங்களைப் பாருங்கள். அவைகள் ஒரு முட்டை வடிவத்தில் இப்பொழுது வடிவமைக் கப்பட்டுள்ளன. இறுதியாக அவர்கள் ஒரு மோட்டார் வாகனத்தைக் கண்டு பிடிப்பார்கள், அதற்கு ஸ்டியரிங் வீலும் இருக்காது. ஒரு குடும்பத்தினர் கண்ணாடியினாலான மேல் மூடியையுடைய தான அந்த அருமையான மோட்டார் வாகனத்தில் ஒரு பெரிய அழகாக காட்சியளிக்கும் சாலைகளில் பயணம் செய்து கொண்டிருப் பதைப் பார்த்தேன். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த பொழுது அவ்வாகனமானது யாராலும் ஓட்டிச் செல்லப்படாமல், தானாகவே இயங்கி அது சாலைகளின் வளைவுகளிலும் மற்றும் எவ்விடங்களிலும் சென்று கொண்டிருந்தது'' என்று நான் கூறினேன். இப்பொழுது அவர்கள் அந்த மோட்டார் வாகனத்தை செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே அதைக் கண்டு பிடித்துவிட்டார்கள். அவர்களிடம் இப்பொழுது அவ்வா கனம் இருக்கிறது. விஞ்ஞானமானது அந்நாளில் முன்னேறி விடும்'' என்று நான் அப்பொழுது கூறினேன். 27நான் மேலும் கூறினேன்: 'அவர்கள் பெண்களுக்கு வாக் குரிமையை வழங்கிடுவதை நான் பார்த்தேன்'' என்றேன். அவ்வாறே அவர்கள் பெண்கள் வாக்களிப்பதற்கும் அனுமதித்தும் விட்டார்கள். ''அவ்வாறு வாக்களிப்பதின் மூலம் அவர்கள் இந்நாட்களில் ஒன்றில் தவறான மனிதனை தேர்ந்தெடுப்பார்கள்'' என்று கூறினேன். கடந்த தேர்தலில் நீங்கள் அதைச் செய்திருக் கிறீர்கள். பெண்களின் வாக்குகள்தான் கென்னடியைத் தேர்ந் தெடுத்தது. நாம் அறிவோம். அங்கே அவர்கள் ஆதயத்தப்படுத்தி யிருந்த சூழ்ச்சியான இயந்திரங்கள், மற்றும் சில காரியங்களுக்கும் நடுவில் சில ஏற்பாடுகள் மூலமாக அதை சாதித்தார்கள். பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் அதை கண்டுபிடித்து அம்பலப் படுத்தியது. ஏன் அதைக் குறித்து ஏதும் செய்யமாட்டேனென் கிறார்கள்? ஏன் அதைக் குறித்து ஒன்றும் சொல்லமாட்டேனென் கிறார்கள்? தங்கள் வேலையை இழந்து விடுவோமா என்று அச்சத்தினால்தான். முழுவதும் அழுகிப்போன அரசியலின் கூட்டம் அது. அவ்வளவு தான் அது நிச்சயமாக! 28தயவு செய்து இதைக் கூறுவதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். இத்தேசத்திற்கு இரட்சிப்பே இல்லை. எந்த தேசத்திற்கும் இரட்சிப்பே இல்லை. இரட்சிப்பு இயேசு கிறிஸ்துவில் மட்டுமே உள்ளது. அவரில் மட்டும் உள்ளது. அது சரிதான்; நான் அமெரிக்காவுக்காக நன்றியுள்ளவனாயிருக்கிறேன்; உலகின் வேறு எந்த நாட்டில் வாழ்வதைவிட இத்தேசத்தில் வாழ்வதையே நான் விரும்புகிறேன். ஏனெனில், கனடாவிற்கு வெளியே... கனடாவும், அமெரிக்காவும் இரட்டையர்கள். நாம் அதை அறிவோம், இரு வரும் அண்டை நாடுகள், அற்புதமான நாடு இது. வேறு எங்கும் வாழ்வதை விட இங்கு தான் நான் வாழ விரும்புகிறேன். ஏனெனில் இது எனது தாய் நாடு. நான் ஒரு அமெரிக்கனாயிருப் பதற்காக மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன். அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஆனால் நான் உங்களுக்கு கூறுவ தென்னவெனில், இத்தேசமானது அதற்கு சமமான எழுப்புதலை அவசியம் பெற்று இருக்கவேண்டும். ஆனால் அது அதைப் பெற்றுக் கொள்ளாது. இல்லை, ஐயா, அவள் மீண்டும் எழும்பப் போகிறதில்லை. இல்லை அவள் முடிந்து போய்விட்டாள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக சிக்காகோவில் நான் கூறியது உங்களுக்கு நினைவிலிருக்கும். அது ஒலிநாடாவில் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஜீன், உன்னிடத்தில் அது இருக்கிறது. “ஒன்று இந்த ஆண்டில் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், தவறினால், அவர்கள் தொடர்ந்து அதை புறக்கணித்தே விடுவார்கள்'' என்று நான் கூறினேன். அதைத் தான் அவர்கள் செய்து இருக்கிறார்கள். பாருங் கள் அவள் தன்னுடைய முடிவை எய்துகிற வரையிலும் அதையே தான் அவர்கள் செய்வார்கள். 29ஆனால் வல்லமை வாய்ந்த ஒரு ஸ்திரீ தோன்றுவாள். இப்பொழுது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது ஒலிநாடா விலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வல்லமை பொருந்திய ஸ்திரீ வருவாள், அவள் ஒரு வேளை ஜனாதிபதியாக இருக்கக் கூடும். அல்லது கத்தோலிக்க சபைக்கு எடுத்துக் காட்டாக அவள். இருக்கக் கூடும், அப்படியிருக்கும் என்று நான் கருதுகிறேன்; அவள் ஒரு நாளில் இந்நாட்டை தன் கையிலெடுத்துக்கொண்டு, இந்த தேசத்தை ஆட்சி செய்வாள். இந்நாடு ஸ்திரீயின் தேசமாக இருக்கிறது. கொடியானது ஒரு ஸ்திரீயினால் உண்டாக்கப்பட்ட தாகும். அதில் பதின்மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. பதின்மூன்று கோடுகள் கொடியில் உள்ளன. பதிமூன்று காலனிகள் உள்ளன. எல்லாம் பதின்மூன்று, பதின்மூன்று, பதின்மூன்று என்று யாவற்றிலும் அவ்வாறே காணப்படுகிறது. அவளது வெள்ளி டாலர் நாணயத்திலும் பதின்மூன்று நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. யாவும் பதின்மூன்று என்றே காணப்படுகிறது. இத்தேசத் தின் என் பதின்மூன்றாகும். அது வெளிப்படுத்தின விசேஷத்தின் பதின்மூன்றாம் அதிகாரத்திலும் காணப்படுகிறது. முற்றிலும் பதின்மூன்று தான் யாவும், “ஸ்திரீ, ஸ்திரீ, ஸ்திரீ, ஸ்திரீ, ஸ்திரீ'' என்றே இருக்கின்றது. அவள் அனைத்து அலுவலகங்களையும் கைப்பற்றியிருக்கிறாள். ஹாலிவுட்டையும் அவள் தன் கையில் எடுத்துக்கொண்டு விட்டாள். தேசத்தையும் மேற்கொண்டு விட்டாள். அலுவலகங்கள் அவளால் மேற்கொள்ளப்பட்டிருக் கின்றன. அங்கிருக்கின்ற யாவற்றையும் தன் அதிகாரத்தில் கொண்டு வந்திருக்கிறாள். மனிதனோடு அவள் சரி சமமான உரிமை களை பெற்றுவிட்டாள், ஆண்களோடு வாக்களிக்கும் உரிமையும் கிடைத்துள்ளது. அவள் மனிதனைப் போலவே சபிக்கிறாள். ஆணைப் போலவே மது அருந்துகிறாள். இன்னும் என்னவெல்லாமோ செய்கிறான். ஒரு ஸ்திரீயை தொழுது கொள்வதற்காக கத்தோலிக்க சபையானது பயன்படுத்தும் ஒரு சரியான வஞ்சகமான கண்ணி யாகும். எப்படியாயினும் அவர்கள் ஏற்கெனவே ஒரு ஸ்திரீயைத் தொழுது கொண்டுதானிருக்கிறார்கள். 30ஒரு ஒழுக்கக் கேடான பெண்மணியானவள், சாத்தான் வசத்தில் இருக்கும் வேறெந்த ஒன்றைக் காட்டிலும் மிகவும் வலுவான கண்ணியாகும். மது அருந்தும் தவரணைகளைவிட அவள் மோசமானவள். நாட்டிலுள்ள மது அருந்தும் தவரணைகளைவிட அவள் அதிகமான ஆத்துமாக்களை நரகத்திற்கு அனுப்பிட முடியும். அது சரிதான். “குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக் கிறாள்'' என்று பூமியிலேயே மிகவும் ஞானமுள்ள மனுஷன் கூறினான். ஒரு நல்ல ஸ்திரீயை ஒரு மனிதன் கனம் பண்ணவேண்டும். ஆனால் பொல்லாத ஸ்திரீயோ அவனது இரத்தத்தில் தண்ணீராக இருக்கிறாள். அவனது இரத்தம் என்றால், அவனது ஜீவனையே குறிக்கும். ஒரு மனிதனுக்கு ஏதாவது மிக நல்லதை ஒரு துணைக்குப் பதிலாக கொடுக்கக்கூடியது ஒன்று தேவ னுக்கு இருக்கிறதெனில், அதை அவர் கொடுத்திடுவார். ஆனால் ஒரு ஸ்திரீதான் தேவன் ஒரு மனிதனுக்கு சிறந்த துணையாகக் கொடுக்க முடியும். ஆனால் அவர்கள் மாறுபடும் பொழுது... 31ஏதேன் தோட்டத்தில் பெண்ணைத்தான் சாத்தான் தனது கருவியாக இருக்கும்படி தெரிந்துகொண்டான். அவன் மனிதனை எடுக்கவில்லை, ஸ்திரீயையே எடுத்துக் கொண்டான். அவன் ஏன் ஆதாமிடம் போய் அவனுக்கு தனது பாசத்தை காண்பிக்கவில்லை? அவன் ஸ்திரீயினிடத்தில் வந்து அவளிடத்தில் தான் தனது அக்கறையுள்ள பாசத்தைக் காட்டுகிறான், ஏனெனில் அவளைத்தான் அவன் தெரிந்து கொண்டான். தேவன் மனிதனை எடுத்துக் கொண்டார். சாத்தானோ மனுஷியை எடுத்துக்கொண்டான். முன் நடந்ததையும் முடிவில் நடப்பதையும் பாருங்கள். ஆதியில் பாபிலோனானது ஸ்தாபிக்கப்பட்டபொழுது, ஒரு ஸ்திரீதான் அங்கே இருந்தாள். ஹிஸ்லோப் எழுதிய “இரு பாபிலோன்கள்'' என்ற புத்தகத்தில் பாருங்கள். இப்பொழுது இருக்கிற இந்தக் காலமானது வந்தபொழுது, அது புறஜாதி காலமாக முடிவடைகிறது. பாபிலோன் அவ்வாறு ஆரம்பித்தது, முடிவடையும் பொழுதும், ஸ்திரீ தொழுகையில் (மரியாள் வணக்கம்) தான் முடிவடைகிறது. எப்பேர்ப்பட்ட நாளில் நாம் ஜீவிக்கிறோம்! 32இப்பொழுது லவோதிக்கேயாவின் காலம், அவ் வார்த்தைக்கு, ''வெது வெதுப்பான'' என்றும் அர்த்தமாம். அது சகல நன்மைகளும் தன்னிடத்தே பெருகப் பெற்றதாகவும் தனக்கு ஒரு குறைவுமில்லையெனவும் அவள் எண்ணுகிறாள். ஆனால் வேதமோ, அவள் நிர்பாக்கியமுள்ளவள், பரிதபிக்கப்படத் தக்கவள், தரித்திரமான நிலையை குருடான, நிர்வாணமான நிலையிலிருப்பதாக'' கூறுகிறது. இந்த சபைக்காலத்தில் ஜெயங்கொள்ளகிறவர்களுக்கு அளிக்கப்படும் பலனானது, “கர்த்தருடைய சிங்காசனத்தில் உட்காருவது'' ஆகும். இந்த சபைக் காலத்தின் நட்சத்திரம், அல்லது செய்தியாளன் யார் என்பது தெரியவில்லை. இப்பொழுது முதலாம் சபைக்காலத்தின் தூதன் யார்? பவுல் எபேசு. சிமிர்னாவுக்கு யார்? ஐரேனியஸ், பெர்கமுவுக்கு? பரிசுத்த மார்ட்டின் ஆவார் தியத்தீரா சபைக்கு? அது கொலம்பாவாகும். சர்தைக்கு? லூத்தர். பிலதெல்பியா? வெஸ்லி. இந்த லவோதிக்கேயாவுக்கு, அது யாரென்று இன்னமும் நமக்குத் தெரியாது. அது யார் என்பது ஒருவேளை இக்காலம் முடிவடைகிற வரையிலும் தெரியாமலே இருக்கக்கூடும். 33ஆனால், இந்த தூதன் எப்படியிருப்பான் என்று நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி ஒரு மேற் கோளை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். அப்படிச் செய்வது சரியாயிருக்குமா? (சபையார், ''ஆம்! ஆமென்!'' என்று கூறுகிறார் கள்- ஆசி). அதில் நமக்கு ஒரு சிறிது நேரம் இருக்கிறது. நான் அதைப்பற்றி என்ன எண்ணுகிறேன் என்பதைப் பற்றி ஒரு சிறு குறிப்பு ஒன்றை வரைந்துள்ளேன். லவோதிக்கேயா சபையின் தூதனானவன், அதை முடிக்க வருவான். அவன் தானே காலத்தின் முடிவிலே இருப்பான், அதாவது ஏனைய தூதர்களைப் போல, வேதாகமத்தைப் போல, சபைக்காலத்தின் துவக்கத்திலே அவன் வருவதில்லை, முடிவில் தான் வருவான். ஏனெனில், அவர்கள் செய்தவைகளுக்காக அவர்களை கடிந்து கொள்ளவே அவன் வருகிறான். “லவோதிக் கேயா சபை யின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்.'' ''சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்.'' கவனியுங்கள். அந்தந்தக் காலத்தின் முடிவில் அதனதற்குரிய தூதனானவன் வருகிறான். பவுல் அச்சபைக் காலத்தின் முடிவில் வந்தான். இவ்வாறு வரிசையாக ஒவ்வொரு தூதனும் அந்தந்த சபைக்காலத்தின் முடிவில் வந்தார்கள். ஒரு சபைக்காலம் முடிவடைகையில், அது அடுத்த சபைக் காலத்திற்குள் சிறிது நீண்டிருந்து, முடிவடைந்தது. காலத்தின் முடிவு அதுதான் அவ்வாறு சிறிது அடுத்த சபைக்காலத்திற்குள்ளும் நீண்டு போயிருக்கிறது. அது என்னவாயிருந்தது என்பதைப்பற்றி தூதனுக்கு உரைக்கப்படுகிறது. நாம் படிக்கட்டுகளில் ஏறிப்போகையில் எப்படியிருக்குமோ அவ்வாறு இவ்வேழு சபைக் காலங்களும், ஒவ்வொன்றும் முடிவடைகையில், அது அடுத்த சபைக்காலத்திற்குள்ளும் நீண்டு இருந்து அதிலும் காணப் படுகிறது. 34இந்நாளில் வருகின்ற இந்த தூதனானவன்... இங்கே சிலவற்றை நான் எழுதி வைத்துள்ளேன், அதை நான் வாசிக்க விரும்புகிறேன். ஆனால் இந்த சபைக்காலத்தின் இறுதிப்பாகத்தில் அவன் அறியப்படுவான். ஏனெனில் நாம் அதற்கு மிகவும் சமீபமாயிருக்கிறபடியால், அந்த வெளிச்சத்தின் காலத்திற்கு நாம் சமீபமாயிருக்கிறபடியால், அவன் ஒரு வேளை இப்பொழுது பூமி யிலிருக்கக்கூடும். அவனைத் தெரியாது பாருங்கள். அவன் தானே வல்லமையான தீர்க்கதரிசியாக இருப்பான். சபை உலகத்தினால் அவன் புறக்கணிக்கப்படுவான், அவர்கள் தங்கள் பாவங்களில் தொடர்ந்து நீடித்துக் கொண்டே போகிறபடியினால் தேவன் அவர்களை தனது வாயினின்று வாந்தி பண்ணிப் போடுவதினி மித்தம் இப்படியாகும். தேவனுடைய பிரசன்னத்தை விட்டு வாந்தி பண்ணிப்போடப்படுவார்கள். அத்தூதன் எலியாவைப் போல் இருப்பான் என்று நான் விசுவாசிக்கிறேன். அதற்கான காரணங்களை நான் எடுத்தியம்பப் போகிறேன். இப்பொழுது, நாம் மல்கியாவின் புஸ்தகத்திற்கு சற்று திருப்புவோம். அத்தூதன் எலியா தீர்க்கதரிசியின் ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருப்பான் என்று நான் எண்ணுகிறேன் என்பதற்கான காரணத்தை உங்களுக்கு எடுத்துரைக்கப்போகி றேன். இப்பொழுது நீங்கள் உங்களுடைய கிருபையின் தலைப் பாகையை அணிந்து கொள்ளுங்கள். மல்கியா 4ம் அதிகாரம். இப்பொழுது நான் வாசிக்கையில், உங்கள் வேதத்திலிருந்து கவனி யுங்கள். அடுத்த சில நிமிடங்களில் இந்த சபைக்காலத்திற்குள் போகும் முன், இப்பொழுது மிகவும் கவனமாக பரிசீலனை செய்திடுங்கள். “இதோ, சூளையைப்போல் எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல்.4:1 அவர் என்ன கூறுகிறார்? வரப்போகிற நாளைப்பற்றி அவர் பேசுகிறார். அதை நீங்கள் ஒத்துக்கொள்ளுகிறீர்களா? கர்த்தருடைய வருகையின் நாள் அது. “ஆனால்... உங்கள் மேல் ... 35இப்பொழுது கவனியுங்கள். அவர் இஸ்ரவேலரோடு பேசுகிறார். அவர் என்ன கூறுகிறார்? “இதோ சூளையைப்போல எரிகிற நாள் வரும்.'' “ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய் கொழுத்த கன்று களைப்போல வளருவீர்கள். துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச்செய்யும் நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப் பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (அவர் பூமியை அக்கினியால் சுட்டெரிக்கும் நாளில், அவர்களுடைய சாம்பலை மிதிப்போம். அது நிச்சயமாக ஆயிர வருஷ அரசாட்சியின் காலமாகும்.) ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளை களையும் நியாயங்களையும் நினையுங்கள். இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிற தற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத் திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக் களிடத்திற்கும் திருப்புவான்.'' மல்.4:2-6) இது பழைய ஏற்பாட்டின் முடிவாக இருக்கிறது. 36இயேசு கூறினார்... மத்தேயு 17:10ல் இதைப்பற்றிப் பேசுகிறார். வரவேண்டிய எலியாவை அனைத்து யூதர்களும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். மத்தேயு 17:10ல் இயேசு அதைப்பற்றி என்ன கூறினார் என்பதை இப்பொழுது கவனியுங் கள். மத்தேயு 17ம் அதிகாரம் 9ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். “அவர்கள் மலையிலிருந்து இறங்குகிற போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார். (பார்த்தீர்களா? ”இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், நீங்கள் அறிவீர்கள், அதை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்.) அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படி யானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள். (''நீதியின் சூரியனாகிய கிறிஸ்து வருமுன்னர் எலியா ஏன் முந்தி வர வேண்டும்? ஏன் அவர்கள் இதைக் கூறுகிறார்கள்? இதோ நீர் ஏற்கெனவே வந்து விட்டீர், ஆயினும் வேதபாரகர் எலியா முந்தி வரவேண்டு மென்கிறார்களே'' என்று கேட்டார்கள்) மத்.17:9-10 இப்பொழுது கவனியுங்கள் “இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா மெய்யாகவே முந்தி வருவான் (தமிழ் வேதாகமத்தில் ”எலியா முந்தி வந்து'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது - ஆங்கில வேதாகமத்தில் 'எலியா மெய்யாகவே முந்தி வருவான் என்று எதிர்காலத்தில் நடக்க விருக்கும் ஒன்றைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது - “அவன் எல்லாவற்றையும் சீர்படுத்துவான்; ஆனாலும், அந்த எலியா வந்தாயிற்று என்று உங்களுக்கு சொல்லுகிறேன்” (ஆங்கில வேதாகமத்தில், “That Elias” (அதாவது “அந்த எலியா'' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழிலோ வெறுமனே ”எலியா'' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மொழி பெயர்ப்பாளர்) அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாக மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். (அந்த எலியா யாரென்று அவர் கூறவில்லை என்பதைப் பாருங்கள்.) அவர் யோவான் ஸ்நானனைக் குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்து கொண்டார்கள். மத் 17:11-13 37இப்பொழுது கவனியுங்கள். நான் மீண்டும் மல்கியா 4ம் அதிகாரத்திற்கு போகப்போகிறேன். அவர் இங்கே, 'கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்'' என்று கூறியிருக்கிறதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது 5ம் வசனம். “இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்'' (...பெரிதும் பயங்கரமு மான நாள் என்று சகோ. பிரன்ஹாம் கூற, ”கர்த்தரு டைய'' என்று கூறாமல் விட்டதை சபையார் பதிலுக்குக் கூறுகிறார்கள் - ஆசி) மல். 4:5 ''கர்த்தருடைய நாளில்'' என்பதை நாம் எங்கே காண்கிறோம்? காலத்தின் முடிவிலே! அப்பொழுது உலகமானது சுட்டெரிக்கப்படும். அவர் வெண்மையான தலைப்பாகையை உடையவராய், மார்பருகே பொற்கச்சை உடுத்தினவராய் இருந்ததைக் குறித்து நாம் படித்தோம் என்பதை நீங்கள் நினைவில் வைத் திருக்கிறீர்களா? அதை நினைவில் வைத்திருக்கிறீர்களா? கர்த் தருடைய நாள் என்பது ஒரு ஓய்வு நாள் அல்ல என்பதையும், அல்லது ஒரு ஞாயிற்றுக்கிழமையும் அல்லவென்பதையும் நாம் வேதத்திலிருந்து நிரூபித்தோம். அது சரிதானே? அந்த நாளில் தான் அவர் நியாயாதிபதியாக வருகிறார். 'பூமியை சாபத்தால் அடிப்பார்'' (தமிழில் ''சங்காரத்தால் அடிப்பார்'' என்று குறிப் பிடப்பட்டுள்ளது - மொழிபெயர்ப்பாளர்). அது சரிதானே? கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். மல்.4:5 38இவ்வசனத்தில் எலியாவின் இரட்டை வருகையைக் குறித்துப் பாருங்கள். இப்பொழுது நீங்கள் கவனிபீர்களானால், அனைத்து வேத வாக்கியங்களுமே கூட்டு அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அதை “ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, கற்றுக்கொள்ளகூடிய பாலகருக்கு வெளிப்படுத்தினீர்''. இப்பொழுது நாம் மத்தேயு சுவிசேஷம் 2ம் அதிகாரத்திற்கு சற்று செல்லுவோம். இந்தப் பக்கத்திற்கு சற்று பின்னால், மத்தேயு 2ம் அதிகாரம். மத்தேயு 2ம் அதிகாரம் என்று கூறியதற்குப் பதில் லூக்கா 2ம் அதிகாரம் என்று நான் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று நம்புகிறேன். அதை நான் இங்கே எழுதி வைத்திருக்கிறேன், ஆனால் சில நிமிடங்களுக்கு முன்னால் நான் சற்று துரிதப்படுத்திக் கொண்டிருந்தேன். அறையில் நான் இருக்கையில் பரிசுத்த ஆவியானவர் என் மேல் இருந்தார். நான் ஒரு மகத்தான வேளையை உடையவனாய் இருந்தேன். எனவே நான் 2ம் அதிகாரம் என்றேன். அதுதானா என்பதை நாம் பார்ப்போம். இப்பொழுது ஒரு நிமிடம் நான் இதைப் படிக்கிறேன். மத்தேயு 2ம் அதிகாரம் ... நான் தேடு வது அதுவல்ல, அப்படித்தானே? சற்று ஒரு நிமிடம் பொறுங் கள்... சற்று நேரத்தில் அதை எடுத்துவிடுவேன்... எனக்கு சற்று நேரம் எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில் வேத வாக்கியத்துக்கு இரு விஷயங்களைப் பற்றிக் கூறும் கூட்டு அர்த்தம் உண்டு என்பதை நீங்கள் கண்டு நிச்சயமடைந்து கொள்ளவேண்டுமென்று நான் விரும்புகிறேன். 'அன்னாள் துதி செலுத்துதல்' 'நாசரேத்துக்கு திரும்புதல்; 'பஸ்கா பண்டிகை' 'யோவானின் ஊழியம்' இப்பொழுது, நான் லூக்காவைத் தான் குறிப்பிட்டேனோ என்பதை பார்க்கட்டும். நான் எங்கோ அதைப் பற்றி வாசித்தேனே... லூக்கா வுக்குப் பதிலாக நான் மாற்கு என்று குறிப்பிட்டுவிட்டேன். ஒரு வேளை மாற்காக வும் இருக்கலாம். இவ்வாறு நான் மாற்றிக் குறிப்பிட்டதுகூட அது கர்த்தருடைய கிரியைதான் என்பதை காணத்தக்கதாக, நீங்கள் இந்த வேத வாக்கியத்தை எடுத்துக் கொள்ளவேண்டுமென நான் விரும்புகிறேன். அவரே இவ்வித மாக கிரியை செய்கிறார். நான் எந்த வசனத்தைத் தேடுகிறேன் என்பதை நான் உங்களுக்குக் கூறுவேன். ''எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத் தேன்'' என்று அவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். யாரிடமாவது ஓரக் குறிப்புகளையுடைய வேதாகமம் இருக்கிறதா? இருந்தால் விரைவாக அவ்வசனத்தை எடுத்துக்கொண்டுவிட இயலுமே. எகிப்திலிருந்த என் குமாரனை வரவழைத்தேன்'' என்ற வசனம். ஒரு க்ஷணம் ... 39(ஒரு சகோதரன், ''லூக்கா 1:17'' என்று கூறுகிறார்.) நன்றி சகோதரனே. அது சரிதான் லூக்கா 1ம் அதிகாரம். மாற்கு... லூக்கா 1:17 - இரண்டாம் அதிகாரத்திற்குப் பதிலாக ... 14ம் வசனத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன், அங்கே தான் .... அதுதானே சகோதரனே, அது மிகவும் சரியாக இருக்கிறது. லூக்கா 1:17. நீங்கள் இப்பொழுது அதைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது அது என்ன? அதுதானே கர்த்தருடைய ஆசீர்வாதங்களிலிருந்து, ஆம் ஆசீர்வதிக்கப்பட்டதாகும். உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும். அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்ச ரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். லூக்.1:14-15 வருகின்ற இம்மனிதன் அவனது பிறப்பின் முதற் கொண்டே மது அருந்துதல் மற்றும் பாவ சம்மந்தமான எந்த காரி யத்தையும் செய்யாதிருக்கும்படி போதிக்கப்பட்டிருப்பான். அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? ... தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான் பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும் கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தை கர்த்தருக்கு ஆயத்தப் படுத்தும்படியாக அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான். லூக்கா .1:15-17 40இப்பொழுது, அவனைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கப் பட்டிருந்தது. அந்த நபர் யோவான். அது சரிதானே? அந்நாளில் வரவேண்டியவனாக இருந்த எலியா யோவான்தான். வேத வாக்கியமானது சில வேளைகளில் இரண்டு காரியங் களை அர்த்தப்படுத்துகிறது என்பதையும் நாம் அறிவோம். மத்தேயு வில், “எகிப்திலிருந்து என் குமாரனை வரவழைத்தேன்'' என்பதா கக் கூறியிருக்கிற வசனத்திற்கு, நாம் ஒரு அர்த்தத்தைக் கூறுவோம். நல்லது, அதைத்தான் நான் தேடிக்கொண்டு இருந்தேன். ''எகிப் திலிருந்து என்னுடைய குமாரனை வரழைத்தேன்.'' ”குமாரன்'' என்ற வார்த்தைக்கு ஒத்து வாக்கியத்தை நீங்கள் தேடிக் கொண்டே போனால், அது ஓசியாவுக்குப் போகும். அங்கே அவ்வசனம் அவருடைய குமாரனாகிய இயேசுவைப்பற்றி குறிப்பிடுவதாக இருக்கவில்லை. அங்கே அது இஸ்ரவேலைக் குறிக்கிறதாக இருக் கும். ஆனால் அவ்வசனத்திற்கு கூட்டு அர்த்தம் உண்டு. ஆனால் அதற்கு இதைவிட மேலான அர்த்தம் உண்டாயிருக்கிறது. அவர் இஸ்ரவேலை வரவழைத்தார் என்று சொன்னால் அது இஸ்ரவேலை விட பெரியவராகிய இயேசு வின் வருகையைக் குறிக்கிற தாகத்தான் இருக்கிறது. சரி. 41அவருடைய முதலாம் வருகையானது, கர்த்தருடைய நாளில் ஏற்படவில்லை என்பதையும் நாம் காண்கிறோம். அது சரிதானே? இப்பொழுது மல்கியாவுக்குத் திரும்புவோம். முதலில் “கர்த்தரு டைய நாளிலே வருதல்' என்பதை பற்றி நாம் தெளிவுபடுத்து வோம். இப்பொழுது அவருடைய இரு வருகைகள் கூட்டாக ஒரே வசனத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதை கவனியுங்கள். அதில் அவருடைய முதல் வருகையும், இரண்டாம் வருகையையும் ஒரு சேர குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுடைய ஆவிக்குரிய புரிந்து கொள்ளுதல் ஆயத்தமாக உள்ளதா? இப்பொழுது 6ம் வசனம் ... “.... அவர்... ”... கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வரு கிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.“ (அது சரிதானே?) மல். 4:5 அதுதானே யோவான் அல்ல என்பதை உணருகிறோம், ஏனெனில், அவன் வந்த நாள் கர்த்தருடைய பயங்கரமான நாளல்ல (அப்படித்தானே?) அல்லாமலும், அப்பொழுது ஆண்டவர் பூமியை சுட்டெரிக்கவில்லை. எனவே அது ஒரு முன் காட்சியாகத் தான் அர்த்தப்படுத்திட வேண்டும். அல்லது யோவானின் ... அல்லது எலியாவின் இன்னொரு எதிர்வரும் வருகையைக் குறிப்பதாகத்தான் இருக்கவேண்டும். அது சரிதானே? ஏனெனில், அவர் கூறினார். “நான் எலியாவை அனுப்புவேன், முழு பூமியைச் சுட்டெரிப்பேன். அதை நான் சுத்தம் செய்வேன். அப்பொழுது நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய், அவர்களுடைய சாம்பலின் மேல் நடப்பீர்கள்'' என்று. அது ஆயிர வருட ஆரசாட்சி என்பதை நாம் அறிவோம். அணுகுண்டு அதை தூள் தூளாக சிதறிப்போகப் பண்ணின பிறகு, அது சரி செய்யப்படும். அங்கே அப்பொழுது இப்பூமியில் ஒரு பெரிய நாள் உண்டாயிருக்கும். இயேசுவோடு கூட சபையானது ஓராயிரம் ஆண்டுக் காலம் ஆட்சி செய்வாள். அது சரிதானே? 'ஆனால் எல்லாம் வெடித்துப் போகவிருக்கும் கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்பு வேன்.'' அது சரிதானே? எனவே, அது அவ்விடத்தில் யோவான் ஸ்நானன் வருவதைப் பற்றிக் கூறவில்லை. ஏனெனில் கர்த்தருடைய பயங்கரமான நாள் அப்பொழுது வரவில்லை. அது இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்துத் தான் வருகிறது. அது சரிதானே? 42இப்பொழுது நீங்கள் சரியானபடி ஆவிக்குரியவர்களாக இருப்பின், அடுத்த வசனத்தைக் கவனியுங்கள். இப்பொழுது, இதுதானே காதல் கடிதமாக இருக்கிறது. வாக்கியங்களுக்கிடை யில் நீங்கள் கூர்ந்து கவனித்து வாசிக்கவேண்டும், அப்பொழுது அது சரியாக உங்களுக்குக் காணப்படும். நான் என்ன கூறிகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். “இயேசு தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார், ஏனெனில், அதை அவர் ஞானிகளுக்கும் கல்வி மான்களுக்கும் மறைத்து (அவர்கள் கண்களுக்கு) பாலகருக்கு வெளிப்படுத்தினதால்'' என்று அவ்வேத வாக்கியத்தைக் குறித்து நான் எவ்வாறு கூறினேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். என் மனைவி எனக்கு ஒரு கடிதம் எழுதுவதைப் பற்றிய ஒரு உவமையை நான் அடிக்கடி கூறியிருக்கிறேன். அதைப் போலுள்ளது. கடிதத்தில் அவள் என்ன கூறுகிறாள் என்பதை நான் காணமுடிகிறது, ஆனால் நான் அவள் என்ன அர்த்தப்படுத்துகிறாள் என்பதை அறிய வாக்கி யங்களுக்குள்ளாக உய்த்து ஆராய்ந்து படிப்பேன், ஏனெனில் நான் அவளை நேசிக்கிறபடியினாலும், அவளது சுபாவத்தை அறிந்த படியினாலும் அப்படிச் செய்வேன். அதுபோல நீங்கள் தேவனு டைய சுபாவத்தை அறிந்திருக்க வேண்டும். மேலும் அவரை நேசிக்கவேண்டும். அப்பொழுது வேத வாக்கியங்கள் உங்களுக்கு திறந்து கொடுக்கப்படும். அவர் அதை வெளிப்படுத்துகிறார். 43இப்பொழுது அடுத்த வசனத்தைக் கவனியுங்கள் “...அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத் திற்கும், (இப்பொழுது கவனியுங்கள்) பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.'' (பார்த்தீர்களா?) மல்.4:6 யோவான் ஸ்நானன் எலியாவாக வந்தபொழுது, அவன் அப்பொழுது, அவனுடைய செய்தியை ஏற்றுக்கொண்ட பிதாக் களாகிய இஸ்ரவேலரின் இருதயங்களை பிள்ளைகளின் இருதயத் திற்குத் திருப்பினான். ஆனால் எலியா இத்தடவை வரும் பொழுதோ, அவன் தானே சபையாரின் இருதயங்களை பெந்தெ கொஸ்தே பிதாக்களிடத்திற்கு திருப்பப்போகிறான். அங்கே அது நிலை யெதிர்மாறாக இருப்பதைப் பாருங்கள். உங்களுக்குப் புரிகிறதா? இப்பொழுது படியுங்கள். 44இப்பொழுது கவனமாகக் கேளுங்கள். '..... அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்குத் திருப்புவான்...'' அந்த பழைய வைதீக ஆசாரியன் அவர்களுக்குக் கூறுவான், ''என் தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்... உங்களுக்குள்ளே சொல்ல நினையாதிருங்கள்'' என்று. அவன் வந்து, இந்த வயது சென்ற கடினமான வைதீக ஆசாரிய இருதயத்தை எடுத்து, அவர்களுடைய இருதயத்தை இங்கே இந்தப் பிள்ளைகள் கொண்டிருக்கும் விசுவாசத்திற்குத் திருப்பப் போகிறான் என்று இருந்தது. “இப்பொழுது, இங்கே ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டு, வர விருக்கும் மேசியாவுக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களே, யார் உங்களை எச்சரித்தது? விரியன் பாம்புக் குட்டிகளே, வரும் கோபத்திற்கு தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்?'' என்று கூவினான். ஓ, என்னே ! இப்பொழுது பாருங்கள்.'' அவன் தானே பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்திற்குத் திருப்பினான் ...'' அடுத்தது, பிள்ளைகளின் இருதயங்களை பிதாக்களிடம் திருப்புவது.'' இப்பொழுது இந்த மகத்தான எலியாவானவன் இந்தக் கடைசிக் காலத்தில் வருகையில், அவன் வந்து, பெந்தெ கொஸ்தே செய்தியை எடுத்துக்கொண்டும், பிள்ளைகளை பிதாக் களின் விசுவாசத்திற்கு நேராகத் திருப்புவான், ஏனெனில், அவர்கள் ஆதியில் இருந்த அதே விசுவாசத்தை கைக்கொள்ளாமற் போய்விட்டபடியால், அவர்களை அவன் கடிந்து கொள்ளுவான். ஆமென்! அது எலியாதான் என்பதை நாம் நன்கு உணர்ந்திருக் கிறோம் என்பதை நான் நம்புகிறேன். நாம் அவ்வாறு செய்ய வில்லையா? இப்பொழுது நாம் அதை அறிவோம். 45கர்த்தருடைய பயங்கரமான நாள் யோவான் வந்தபொழுது வரவில்லை. “அப்படியெனில், இம்மனிதன் வெறும் பிரசங்கியாகத் தான் இருப்பானோ?” என்று நான் அடிக்கடி வியந்ததுண்டு. எலியா எல்லா அற்புதங்களையும் செய்தான். அதிகம் பிரசங்கிக்க வில்லை. ஆனால் எலியாவின் ஆவி யோவான் மேல் இருந்த பொழுது, அதுதானே பிரசங்கிப்பதையெல்லாம் செய்தது, ஆனால் அற்புதங்களைச் செய்யவில்லை. ஏன்? இயேசு அவனைத் தொடர்ந்து வரவிருந்தார். அவரே அற்புதங்களை செய்யவிருந்தார். ''... நீதியின் சூரியன் உதிக்கும்... அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்'' என்று அவன் கூறினான். எனவே, யோவானுக்கு அற்புதங்களைச் செய்ய வேண்டியதாக இருக்கவில்லை. அவன் கிறிஸ்துவின் வருகையைக் குறித்து அறிவிப்புச் செய்பவனாக மட்டுமே இருந்தான். அவர்கள் .... இந்த யோவான் .... அல்லது வரவேண்டிய இந்த எலியாவானவன் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவான் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். அவன் தான் மேசியா என்று மக்கள் நினைக்குமளவுக்கு அவன் கர்த்தருக்கு முன்பாக அத்தகைய மகத்தான வல்லமை பொருந்திய மனிதனாக இருப்பான். ஏனெனில் அவனது மிகவும் சிறந்த நண்பர்கள் அவனிடம், ''நீர்தான் மேசியா'' என்று கூறினார்கள். அவனோ , ''எனக்குப் பின் ஒருவர் வருகிறார், அவரது பாதரட்சையின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரனல்ல'' என்று கூறினான். ஏனெனில் அவர்கள் ஒரு மேசியாவைக் காண்பதற்காக எதிர்பார்ப்போடு இருந்தார்கள். மேசியா வரப்போகிறார் என்று அவர்கள் எண்ணினர். இந்த மகத்தான விசேஷித்த நிகழ்ச்சி அவர்கள் நடுவில் தோன்றியபொழுது, “இவரே அந்த மேசியா'' என்றார்கள். ''நான் அவரல்ல, அவர் எனக்குப்பின் வருகிறார்'' என்று யோவான் கூறினான். ஓ, என்னே! நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? எனவே அவனுடைய நெருங்கிய நண்பர்கள் அவனே தான் மேசியா என்று எண்ணுவார்கள். 46இதைப் போலவே, நடக்கிற இன்னொரு விஷயத்யுைம் இங்கே கவனியுங்கள். அவன் தானே கர்த்தருடைய வருகைக்கு சற்று முன்பாக வருவான். யோவானின் நாட்களில் பூமியானது பற்றியெரியவில்லை, எனவே அது எதிர்காலத்தில் நடைபெற வேண்டிய ஒரு நிகழ்ச்சியாகும். எலியா முதலில் வருகையில், அவன் பிரசங்கம் மாத்திரமே செய்தான். இரண்டாவது தடவை யாக அவன் வரும்பொழுதோ, அவன் பிரசங்கித்தலையும், இயேசு வாக்குரைத்த அடையாளங்களையும் ஆக இவ்விரண்டையுமே செய்யக் கூடியவனாக இருப்பான். வரவிருக்கிற இந்த தீர்க்கதரிசியின் இயல்பைக் குறித்து இப்பொழுது பார்ப்போமாக. இந்த கடைசி சபைக் காலத்திற்குரிய இந்த தூதனானவனைப் பற்றி, பழைய ஏற்பாட்டிலிருந்தே முன்னுரைக்கப்பட்டுள்ளது. ஏனையோர்களைப் பற்றி முன்னுரைக்கப்படவில்லை. பவுல், ஐரேனியஸ் போன்றோர்களைப் பற்றி குறிப்பிட்டு முன்னுரைக்கப் படவில்லை. ஆனால் இந்த கடைசி காலமானது, உலகத்தின் முடிவாக இருப்பதால், அது அத்தகைய பயங்கரமான வேளையாக இருக்கும், அதுதானே நம் முன்னாலேயே இருந்துகொண்டிருக்கிறது, எனவே இந்த காலத்தின் தூதனானவன் வேதவாக்கியத்தின் முன் காலத்திலேயே முன்னுரைக்கப்பட்டுள்ளான். இந்த தொன் மையான வேத வாக்கியத்தில் முன்னுரைக்கப்பட்டுள்ளது, காலத்தின் முடிவில் வருவது மகத்தான விதமாக அபிஷேகம் பண்ணப்பட்ட எலியா தான். 47இப்பொழுது கவனியுங்கள். என்னவிதமான இயல்புடைய வனாக எலியா இருப்பான்? முதலாவதாக, அவன் தானே தேவ னுடைய வார்த்தைக்கு உண்மையுள்ள வல்லமையான தீர்க்கதரிசியாக இருப்பான். ஏனெனில், எலியா உண்மையுள்ளவனா யிருந்தான். யோவானும் உண்மையுள்ளவனாயிருந்தான். அது சரிதான். அவன் அற்புத அடையாளங்களை செய்வித்து, பிள்ளைகளுடைய இருதயங்களை பெந்தெகொஸ்தே பிதாக்களுடைய விசுவாசத்திற்கு திருப்புவான். இவனும் எலியாவைப் போல், ஸ்தாபனத்தை வெறுப்பவனாக இருப்பான். அவன் அவ்வாறு தான் இருப்பான். அவனுடைய ஊழியத்தின் வேளையானது நமக்கு ஆரம்பித்துவிட்டது என்று நான் எண்ணுகிறேன். அவன் வர வேண்டிய வேளையானது வந்துவிட்டது. அவன் ஸ்தாபனங்களை வெறுப்பான். எலியா அவைகளை வெறுத்தான், அதைப் போலவே யோவானும் ஸ்தாபனங்களை வெறுத்தான். யோவான் கூறினான், 'ஆபிரகாம் உங்களுக்குத் தகப்பன் என்று நினையாதிருங்கள். விரியன் பாம்புகளாகிய பரிசேயரே, சதுசேயரே வேறு விதமாகக் கூறினால், ''புல்லில் உள்ள பாம்பு களே, தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்'' என்றான். ''அவர்கள் யாவரும் வழிதப்பிப்போய் விட்டார்கள், அவர் கள் ஒவ்வொருவரும் நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்கிறேன்'' என்று எலியா கூறினான். ஓ, என்னே ! அவனுங்கூட நவநாகரிகப் பெண்களை வெறுப்பவன். எலியா அவ்வாறு செய்தான், யேசபேலை எலியா வெறுத்தான். அது சரிதானே? யோவான் ஏரோதியாளை வெறுத்தான். அந்த இரு தீர்க்கதரிசிகளிலுமே ஒரே ஆவியானவர் தான் இருந்தார். அவர்கள் மதஸ்தாபன உலகை, சபை உலகத்தை, வெறுத்தனர், அவர்கள் இருவருமே, நவநாகரிக பொல்லாங்கான ஸ்திரீகளை வெறுத்தனர். அவர்கள்... அந்த காரியத்திற்கெதிராக அவர்கள் ஆவியில் இருந்த ஒன்று கூக்குரலிட்டது. யேசபேல் எலியாவின் தலையை வாங்க அவனைத் துரத்திக்கொண்டிருந்தாள். அதே போல் யோவானையும் கொல்ல ஏரோதியாள் திட்டம் தீட்டினாள். அவர்கள் இருவருமே அவ்வாறு இருந்தார்கள். 48இந்த தீர்க்கதரிசியானவன் வனாந்திரத்தை நேசிக்கிறவனாக இருப்பான். எலியாவைப் போல. அவனும் வனாந்திரத்தில் தனிமையில் வாழ்ந்தான். யோவானுங்கூட வனாந்திரத்தில் மட்டுமே வாழ்ந்தான். அது எலியாவாகத்தான் இருக்கும் என்று நாம் அறிகிறோம். இந்த தீர்க்கதரிசியானவன் உண்மையான தேவ வசனத் தோடு நிலைத்திருப்பான். ஆம், இவன் முழு வார்த்தையோடு நிலைத் திருப்பான். எதற்காக? எபேசு சபையில் இருந்த அவ்விசுவாச மானது இத்தனை காலமும் இழந்து போய்விட்டிருந்தது, அதை திரும்ப பெற்றளிப்பதற்காகத்தான். தனக்கு முன்பாக 'திறந்த வாசலைப் பெற்றிருந்து, அதை நிராகரித்து விட்டிருக்கிற சபைக்கு அதைத் திரும்ப அளிப்பதற்காக இந்த எலியா வருவான். இவன் ஒரு கல்விமானாக இருக்க மாட்டான். திஸ்பியனாகிய எலியாவும் கல்விமான் அல்ல. யோவான் ஸ்நானனும்கூட கல்விமான் அல்ல. லூக்கா 1:67ல் வேதம் கூறுகிறது, “அவன்... அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ர வேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள் வரைக்கும் வனாந்தரங் களிலே இருந்தான்''. யோவானைப் பற்றி லூக்கா 1:67 முதல் 80 முடிய உள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ளது. குறித்துக் கொள்ள விரும்பினால் நீங்கள் அதைக் குறித்துக் கொள்ளலாம். 49இந்த தீர்க்தரிசியுங்கூட துக்கமான மனநிலை (moody) உள்ளவனாக இருப்பான். எலியா ஒரு பெரிய கூட்டம் நடத்திய பிறகு, யாரும் அவனோடு ஒத்துப் போக முடியவில்லை. மெய் மறந்த நிலையில் ஆவிக்குள்ளாகுதல்கள் எலியாவுக்கு இருந்தது. அவன் புறப்பட்டுச்சென்று, வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்து, பாகாலின் பலிபீடங்களை சுட்டெரித்து, மகத்தான காரியங்களைச் செய்தபொழுது, அவன் தானே வனாந்திரத்திற்கு ஓடிப்போய், “கர்த்தாவே, நான் பிதாக்களைவிட நல்லவனல்ல, நான் சாகட்டும்'' என்று கூறினான். அப்படித் தானே அவன் கூறினான்? (மேலும் யோவானும்...) எலியா ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து கொண்டு விட்டான். அவன் ஒரு பெரிய எழுப்புதலுக்குப் பிறகு, இப்பொழுது சாகவேண்டு மென்று விரும்புகிறான். அவர்கள் யோவானை சிறையிலிட்டபொழுது, அந்த சூதுமதி படைத்த அப்பெண்மணி யோவானை சிறையிலடைத்த பொழுது, அவன் அங்கே அமர்ந்து, துயருற்ற மனோபாவத்துடன் இருக்க ஆரம்பித்தான். பெம்பர்மேன் என்பவரோ வேறு யாரோ “யோவானின் கழுகுக் கண்கள் சிறையிலிருந்துகொண்டு தூரத்தில் நடப்பவைகளை படம்பிடித்தது'' என்று கூறினார் என்று நினைக் கிறேன். அவன் தன்னுடைய சீஷர்களில் சிலரை அனுப்பினான். 50“இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி'' என்று அவனே அறிக்கையிட்டுமிருந்தான். அக்கினிஸ்தம்பம் அவருக்குமேல் ஒரு புறாவைப் போல தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். அது இறங்கி வந்து அவர்மேல் தங்கினதை அவன் கண்டான். அவை யாவையும் அவன் கண்னாரக் கண்டிருந்தான், ”இதோ தேவாட்டுக்குட்டி'' என்று கூறினான். ''உம்மால் நான் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க நீர் என்னிடத்தில் வரலாமா'' என்று யோவான் கூறினான். “இப்பொழுது இடங்கொடு'' என்று இயேசு கூறினார். ஆனால் அவர்கள் அவனை சிறையிலடைத்தபொழுது, வெகு விரைவில் அவன் சோர்வடைந்த நிலையில் ஆகிவிட்டான். அவனைப் புரிந்து கொள்வதே கடினமாக இருந்தது. அவனை அவர்கள் சிறையில் அடைத்தபொழுது, அவரிடம் போய், உண்மையிலேயே வரவேண்டியவர் அவர்தானா அல்லது வேறொருவர் வரக் காத்திருக்க வேண்டுமா என்று கேட்டு வாருங்கள்'' என்றான். எலியா செய்ததைப் போலவே அவனும் அப்படியே செய்தான். 51அவன் தானே ஒரு வகையான மனச் சோர்வுள்ள ஒரு நபராக இருந்தான். அவனுக்காக நாம் பரிதாபப்படுகிறோம். ஏனெனில் அத்தகைய ஒரு மனோநிலை எத்தகையது என்பதை நாம் அறிவோம். இப்பொழுது, சபையானது அவன் தோன்றுகையில்.... இந்த விஷயத்தை நான் இத்தோடு விட்டுவிடுவது நல்லது. அவன் தோன்றுகையில் சபையானது... தேவன் நமக்கு அனுப்பவிருக்கிற வல்லமை பொருந்திய இந்த எலியாவானவன் தன்னை அறியப் படுத்தும்பொழுது, எலியா செய்தது போல இவன் தன்னை யாரென்று தெரியப்படுத்துகையில், சபையானது விடுதலையாக் கப்பட ஆயத்தமாக இருந்தது, அஞ்ஞான மார்க்கத்தின் கரங் களிலிருந்து அது விடுவிக்கப்பட்டது. அப்படித்தானே நடந்தது? “யார் மெய்யான தேவன் என்பதை நாங்கள் நிரூபிப்போம்'' என்று கூறிக்கொண்டு அவன் வந்தபொழுது, எலியா சபையை விடுதலை செய்தான். யோவான் இயேசுவைக் கண்டபொழுது, 'அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்'' என்று கூறினானே, அதைப் போலவே, அவ்வாறு யோவான் செய்ததைப் போலவே, கர்த்தருடைய வருகைக்கு சற்று முன்பு யோவான் பிரசங்கிக்கவும், தன்னை யாரென்று தெரியப்படுத்தவும் செய்தான். சரியாக முடிவில் பிரத்தியட்சமாகுதல் உண்டாயிற்று. 52இந்த சபையின் காலத்தில் வரவேண்டியவன் தான் அந்த எலியா என்பதை நாம் கண்டு கொண்டோம். அது எலியாதான் என்பதை நிரூபிக்கும்படி. எலியா தனது தீர்க்கதரிசனத்தை உரைத்த பிறகு.. எலியா மரிக்க வேண்டியதாயிருக்கவில்லை. அவன் மறுரூபப்படுத்தப்பட்டு, பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டான். அவன் தானே வரப்போகும் எலியாவின் காலத்தின் முடிவில் எடுத்துக் கொள்ளப்படும் சபைக்கு முன்னடையாளமா யிருக்கிறான். அவனது காலத்தின் முடிவில், சபையானது மரணத்தின் நிழல்களுக்குள் போகாமல், எடுத்துக் கொள்ளப் படுதலில் போய்விடும். அதுவே எடுத்துக் கொள்ளப்படுதலாகும். அந்த மகத்தான எலியாவானவன், வரவேண்டிய அந்த மகத்தான அவன், இந்த கடைசிநாளுக்கென தீர்க்கதரிசனமாக உரைக்கப் பட்ட அபிஷேகம் பண்ணப்பட்ட எலியாவாக இருப்பான் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென்! அவன் அப்படிப்பட்டவனா யிருப்பான் என்று நான் விசுவாசிக்கிறேன். கடைசி நாட்களில், புறக்கணிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட மக்களடங்கிய இச்சபை யானது அந்த நிலைமைக்குள் போகும். ஏற்கனவே அப்படிப்பட்ட நிலையில் உள்ளது, அந்த சபைக்கு அவன் ஒரு தூதனாக, செய்தி யாளனாக இருப்பான். வேதாகமத்தில் எலியா வருவானென்று வாக்குத்தத்தம் கூறப்பட்டுள்ளது என்று நான் எண்ணுகிறேன். அதை நாம் புரிந்துகொள்ள முடியும் என்று நான் எண்ணுகிறேன், அந்த எலியா, இந்த நாளில் வரவேண்டுமென வேதத்தில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவன் ஆவான். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 53இப்பொழுது நாம் லவோதிக்கேயாவுக்குத் திரும்புவோம். லவோதிக்கேயாவைப் பற்றி நமது கர்த்தர் நமக்கு இன்றிரவில் என்ன கூறவிருக்கிறார் என்பதை நாம் பார்ப்போமாக. அது ஒரு லவோதிக்கேயா, நல்லது. முதலில் சபைக்கு வாழ்த்துதல் கூறப்பட்டுள்ளது. '... கர்த்தருடைய தூதனுக்கு... வெளிப்படுத்தின விசேஷம் 3ம் அதிகாரம் 14ம் வசனம் : கர்த்தருடைய தூதனுக்கு… “.... லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது.” வெளி. 3:14. 54ஓ, என்னே ! நமக்கு யாவும்... அதன் பேரில் சிந்திக்க நமக்கு முழு இரவும் எடுத்துக் கொண்டால், அதைக் குறித்து கர்த்தர் எவ்வளவாய் நமக்கு வெளிப்படுத்துவார்! கவனியுங்கள். “ஆமென்'' என்பது ”இறுதியாகும்.'' கடந்து சென்ற கால மெல்லாம் அவர் வெவ்வேறு வகையில் தோற்றமளித்திருக்கிறார், ஆனால் இங்கே இந்த கடைசி சபைக் காலத்திலோ, “நான் முடிவாக இருக்கிறேன், அதுவே முடிவு'' என்று கூறுகிறார். அவரே முந்தினவர் என்பதை இப்பொழுது காண்பிக்கத்தக்க தாக.... அவரே “தேவனுடைய சிருஷ்டிக்கு முந்தின பேறு மானவர்'', ஓ! அதை நீங்கள் கிரகித்துக் கொண்டீர்களா? பாருங் கள்? தேவன் ஒரு ஆவியாயிருப்பாரானால், அவர் எப்படி சிருஷ் டிக்கப்பட முடியும்? அவர் எவ்வாறு அப்படியிருக்க முடியும்? அவர் நித்தியமானவராக இருக்கிறார்! அவர் ஒரு போதும் சிருஷ்டிக் கப்படவில்லை, அவர் ஒருபோதும் சிருஷ்டிக்கப்படமாட்டார். ஏனெனில் அவர் ஆதியில் தேவனாயிருந்தார். ஆனால் ”தேவ னுடைய சிருஷ்டிக்கு ஆதியுமானவர்'' என்று கூறப்பட்டவர், இயேசு கிறிஸ்து ஆவார்: இயேசு கிறிஸ்து தோன்றப்பண்ணப் பட்டபொழுது, தேவன் அவரில் வாசம் பண்ணியபொழுது, அவ்வாறு அவர் அழைக்கப்பட்டார். அவர் தேவனுடைய சிருஷ்டி யானவர், ஓ, என்னே ! ''முந்தினவரும், பிந்தினவருமானவர்; ஆமென்; தேவனுடைய சிருஷ்டியில் முதலாமவர் அவர்'' என் பதைப் பாருங்கள். தேவன் தாமே தனக்கென ஒரு சரீரத்தை சிருஷ்டித்தபொழுது, அவர் தாழ இறங்கி வந்து அதில் வாசம் பண்ணினார். அவர் தேவனுடைய சிருஷ்டிக்கு முதன்மையானதாக இருந்தது. பாருங்கள்? ஓ, அவர் அற்புதமானவராக இல்லையா? 55''நான் சர்வ வல்லமையுள்ளவர், நான் இருந்தவரும், இருப்பவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ளவர்'' என்று எபேசு சபைக்கு மூன்று தடவைகள் தெரிவித்து, தனது தெய்வீகத் தன்மையை அவர் இங்கே காண்பித்ததை, முதலில் நாம் கண்டோம். அது சரிதானே? கடைசியாக லவோதிக்கேயாவில் அவர் வந்து, “நான் தான் ஆமென் என்பவர், அங்கே ஆதியில் நான் முதலாமவராக இருந்தேன். இங்கே பிந்தினவராகவும் இருக் கிறேன். நானே தேவனுடைய சிருஷ்டியில் முதன்மையானவர், நமக்கிருக்கும் சபைக்காலங்களின் வழியாக, நானே தேவனா யிருக்கிறேன் என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள், மனித ரூபத்தில் படைக்கப்பட்ட தேவன் நானே, நானே தேவனுடைய சிருஷ்டிப்பில் ஆதியாக இருக்கிறேன்'' என்று கூறுகிறார். ஆமென். 56இவ்வாறு கூறுவது ஒரு ப்ரெஸ்பிடேரியனை கூக்குரலிடச் செய்யும், அதைக் குறித்து எண்ணிப்பாருங்கள்! 'தேவனுடைய சிருஷ்டியின் ஆதியானவர்,“ இப்பொழுது நான்... ”தேவனுடைய சிருஷ்டி'' எனக் கூறப்பட்டுள்ளதை நான் எவ்வளவாய் விரும்பு கிறேன். தேவன் சிஷ்டிக்கப்பட்ட பொழுது, தேவன் இயேசு கிறிஸ்துவிலே மாம்சத்தில் வந்து நம் மத்தியில் வாசம் செய்த பொழுது, “தேவனுடைய சிருஷ்டி'' என்று கூறப்பட்டார். இப்பொழுது அடுத்த வசனமானது; அவர் மற்ற சபைகளை புகழ்ந்துரைத்தார். ஆனால் இந்த சபையை அவர் புகழ்ந் துரைப்பதாக இல்லை. ஆனால் அதற்கெதிராக ஒரு குற்றச் சாட்டை அவர் தெரி வித்தார். புகழ்ந்துரைத்தல் அல்ல. இந்த சபையைப் பற்றி, இந்த லவோதிக்கேயா சபையைப் பற்றி, அவர் ஒரு புகழ்ச்சியையும் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு இத்தனை அளவு ஒளியிருந்தும் கூட அவர்கள் அதிலிருந்து பின்வாங்கினர், ஆகவே அவர்கள் புகழப்பட அவசியம் ஒன்றுமில்லை, உ, ஊ. அவர்களுக்கு ஒரு கடிந்து கொள்ளுதல் தேவையாயிருந்தது. அதை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இந்த சபைக்கெதிராக அவர் புகார் ஒன்று தான் தெரிவித்தாரேயல்லாமல், ஒரு புகழ்ச்சியையல்ல. “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். (அதாவது வெதுப்பாக இருக்க வேண்டாம் என்று கூறுகிறார்). இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப் பாயிருக்கிற படியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப் போடுவேன். (ஊ). வெளி. 3:15-16 57அது புகழ்ச்சியுரையா? இருப்பவையெல்லாவற்றிலும் மிகவும் மோசமான கூட்டமாகிய இந்த தேவபக்தியற்ற லவோதிக் கேயா காலத்திற்கு அது ஒரு கடிந்துரைத்தல். ஏனையோரெல்லாம், எல்லாவிதமான வேதனைகளுக்கும் உட்பட்டு இருந்தனர், அவர் களுக்கு ஒன்றும் இருக்கவில்லை, அவர்கள் வறியராயிருந்தனர், ஆட்டுத் தோலையும் வெள்ளாட்டுத் தோலையும் போர்த்திக் கொண்டு ஆதரவற்றவராய் திரிந்தனர், வாளால் அறுப்புண்டனர், தீக்கிரையாக்கப்பட்டனர், சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டனர், மற்றும் இன்னபிற காரியங்களுக்குள் உட்படுத்தப்பட்டனர்; ஆயினும் அவர்கள் விசுவாசத்தைக் காத்துக் கொண்டனர். ஆனால் இந்த லவோதிக்கேயா கூட்டமோ “ஐசுவரியவானும், ஒன்றும் குறையுமில்லையென்றும்'' என்ற நிலையில் காணப்பட்டு, ஒரு வேசியாக அது இருந்தது. அவ்வாறு தான் இருந்தது. இப்பொழுது நமக்கு மகத்தான, பெரியதொரு பாடம் இங்கே உள்ளது. அதை அறிந்துகொள்ள கர்த்தர் நமக்கு உதவி செய்வார் என்று நான் நம்புகிரேன். அவர் கூறினார்: “... நீ குளிருமல்ல அனலுமல்ல...'' வெளி. 3:15 58பாலைப் போலுள்ளது அது என்பதைப் பாருங்கள். ஒரு குளிர்ந்த நிலையில் உள்ள பாலானது நல்லதாக இருக்கிறது. அப்படித்தானே? சூடான பாலும் உங்களுக்கு நன்மை பயக்கும். ஆனால் வெதுவெதுபான பாலோ உங்களை வாந்தியெடுக்கப் பண்ணும். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக நதியில் நான் வசித்து வருகையில், நான் ஒரு இரவில் வியாதிப்பட்டேன். நான் அப்பொழுது, ஒரு சிறிய படகு வீட்டில் வசித்து வந்தேன். நான் வியாதிப்பட்டேன். என்னுடைய மைத்துனர் வந்து என்னை டாக்டர் ஐஸ்லர் என்பவரிடம் அழைத்துச் சென்றார். அவர் என்னிடம், ''என்ன விஷயம்?'' என்று கேட்டார். “எனக்கு வயிற்றில் குமட்டல் ஏற்பட்டுள்ளது” என்று நான் கூறினேன். “நீ ஒரு கோப்பை வெதுவெதுப்பான பாலைக் குடித்தாயா?'' என்று கேட்டார். ஓ, சகோதரனே! வெது வெதுப்பான பாலானது என்னை சுகவீனமுறச் செய்தது. எனவே நான் அதை முழுவதும் வெளியேற்றி சுத்தம் செய்துகொண்டேன். 59தேவன் கூறினார். ''... நீ அனலாய் இருக்க விரும்புகிறேன், பழுக்க பழுக்க சிவந்துபோயிருக்கும் நிலையை அடையும் அளவுக்கு அனலாய் இருக்க வேண்டும், அல்லது உறைதல் நிலையில் இருக்க வேண்டும், ஏதாவது ஒரு நிலையில் இருக்க வேண்டும். நீ வெதுவெதுப் பாய் இருக்க வேண்டாம், ஏனெனில் உனது அந்தவிதமான நிலை என்னை வேதனைப்படுத்தும்.'' இந்த சபைக்காலமானது தேவனுக்கு அவ்வாறான காரி யத்தையே செய்தது. அது வாந்தி பண்ணிப் போடச் செய்யும் அளவுக்கு, அவரை வியாதிப்படுத்துகிறதாயிருக்கிறது. பாருங்கள்? “ஒன்று, பழுக்க சிவந்த அனலான நிலையில் இருக்க வேண்டும், அல்லது குளிர்ந்துபோன நிலையில் இருக்க வேண்டும். ஆனால் வெதுவெதுப்பாய் இருக்கக்கூடாது. வெதுவெதுபான நிலையானது என்னை வாந்திப் பண்ணிப் போடச் செய்துவிடும்''. ஜான் வெஸ்லியின் காலத்தில் ஆங்கலிக்கன் சபையில் காணப்பட்ட குளிர்ந்துபோன நிலையானது, அவரை அச்சபையை விட்டு அகன்று வேறு இடத்தில் போய் கூட்டங்கள் நடத்தும்படி அவரை விரட்டியது, ஏனெனில் அது மிகவும் குளிர்ந்து போன நிலையில் காணப்பட்டது. 60மெதோடிஸ்ட் சபையில் காணப்பட்ட குளிர்ந்து போன நிலையானது, வில்லியம் பூத் அவர்களை பழுக்க சிவந்த அனலுள்ள இரட்சண்ய சபைக்காரராக ஆக்கியது. பாருங்கள். “நீ மனந் திரும்பி வராவிட்டால், நான் விளக்குத் தண்டை உன்னைவிட்டு அகற்றி விடுவேன், அதை வெளியே அகற்றிவிட்டு, அதை வேறு யாருக்காவது கொடுத்து விடுவேன்'' என்று தேவன் கூறினார். எனவே, மெதோடிஸ்ட் சபையானது ஜான் வெஸ்லியின் பரிசுத்த மாகுதலைப் பற்றிய செய்தியை ஏற்றுக்கொள்ள விரும்பாத பொழுது, வில்லியம் அவர்கள், இரட்சணிய சேனை சபையை உண்டாக்கிக் கொண்டு வந்தார். அது உண்மை . ஏன்? அவர்கள் ஸ்தாபனமாக ஆனார்கள். அவ்வாறு தான் நடந்தது. அதன் பேரில் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கிக் கொண்டார்கள். ”நான் அதை வெறுக்கிறேன்'' என்று தேவன் கூறினார். எனவே, அங்கே வில்லியம் பூத் அவர்கள் அத்தருணத்தில் தோன்றி, அச்செய்தியை எடுத்துக்கொண்டு இரட்சண்ய சபையை உருவாக்கினார். அதன் பிறகு அவர் என்ன செய்தார்? அவரும் அதையே செய்து, திரும்பி வந்து, மீண்டும் ஸ்தாபனத்தை உண் டாக்கினார். அவருக்குப்பிறகு, கேம்ப்பெல்லைட்டுகள் வந்தனர், அவர்கள் சில காலம் நிலைத்திருந்தனர். அதன் பிறகு ஜான் ஸ்மித் என்பவர் பாப்டிஸ்ட் சபையை உருவாக்கினார், அவருக்குப் பிறகு, நசரேய சபைக்காரர்கள் எழும்பினர்; நசரேய சபைக்காரர்களுக்குப் பிறகு, பெந்தெகொஸ்தே வந்தது. நசரேய சபையினர் என்ன செய்தனர்? அதேவிதமாக அவர்களும் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டனர். 61அவ்வேளையில் என்ன வந்தது? இரு சிறு கிளைகள், தேவ சபையும் (Churh of God) ஏனைய சபையும் அதிலிருந்து முளைத் தெழும்பியது. அவர்கள் என்ன செய்தார்கள்? ஸ்தாபித்துக் கொண்டனர், அது அவ்வாறு போகும்படி அவர் விட்டுவிட்டார். பின்மாரி ஆசீர்வாதத்தோடு பெந்தெகொஸ்தேயினர் அத் தருணத்தில் எழும்பினர். அவர்கள் செய்தது என்ன? அவர்களும் ஸ்தாபனமாக ஆயினர், தேவன் அவர்களை அப்படியே போக விட்டுவிட்டார். இப்பொழுது நாம் முடிவுக் கட்டத்திற்கு போகப் போகி றோம். இன்னும் சில நிமிடங்களில், சரியான பலத்த காரியம் ஒன்றைக் காணப் போகிறோம். சரி. ஒன்று நீங்கள் சிவப்பாக பழுத்துப் போயுள்ள அனலுள்ள நிலையில் இருக்க வேண்டும் என்றோ, அல்லது குளிர்ந்துபோன நிலையிலோ இருக்க வேண்டும் என்றோ தான் விரும்புகிறார். நீங்கள் வெதுவெதுப்பாயிருக்க வேண்டாம். நீங்கள் பெற்றிராத ஒன்றை பெற்றுவிட்டதாக நடிக்க வேண்டாம். ஒன்று நீங்கள் தேவனுக்காக நெருப்பாய் இருங்கள், அல்லது ஸ்தாபனத்திற்குள் திரும்பிப் போய் விடுங்கள். வெது வெதுப்பாயிருக்க வேண்டாம். 62அதேவிதமாகத் தான் இப்பொழுதும் உள்ளது. அதே காரியம் தான் இங்குள்ள இந்த சபைகளிலும் நேரிட்டிருக்கிறது. நீங்கள் அனலாயாவது குளிராயாவது இருக்க வேண்டுமென்று தான் அவர் விரும்புகிறார். அவர் வெது வெதுப்பாயிருப்பதை விரும்பவில்லை. அப்படிப்பட்டதான நிலைக்குள் தான் பெந்தெ கொஸ்தேயும் போய்விட்டது. அது வெதுவெதுப்பாயிருக்கிறது. அவர்கள் பியானோவையும், ஒரு சில ட்ரம்களையும் வைத்துக் கொண்டு சிறிது வாசிக்கிறார்கள். போதுமான அளவுக்கு சப்தம் போட்டு, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அல்லேலூயா'' என்று கத்துகிறார்கள். உ, ஊ அப்பொழுது இசையானது குறைகின்றது. ஊ, ஊ, ஊ'' அவ்வளவு தான். அவ்வாறான காரியம் தேவனுடைய வயிற்றை, வாந்தி பண்ணிப்போடும் அளவுக்கு கலக்குகிறது பாருங்கள் ? உ, ஊ. சரி. பழுக்க, பழுக்க சிவந்த அளவுக்கு உள்ள அனலான எழுப்பு தலைப் போலுள்ளதொன்று அங்கே அவர்களுக்குள் காணப்பட வில்லை, ஆனால் அவர்களுக்குள் ஏராளமான அளவுக்கு இந்த சபையில், செயற்கையான ஒரு காரியம்தான் காணப்படுகிறது. ஏனெனில், அவர்கள் ஐசுவரியவான்களாக இருந்து, அவர்கள் ஒன்று சேர்ந்து, பெரிய கூட்டங்களை நடத்துகிறார்கள். இந்த சபையின் காலத்தில் ஒரு நல்லவேளை அவர்களுக்கு இருக்கத்தான் செய்தது. அதேல்லாம் உண்மைதான். ஆனால் அவை யாவும் இப்பொழுது, செயற்கைத்தனமாக ஆகிவிட்டது. அங்கே பரிசுத்த ஆவியின் அனல் இருக்கவேயில்லை. 63இங்கே அவர் என்ன கூறுகிறார் என்பதைப் பாருங்கள்! “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலு மல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப் பாயிருக்கிற படியினால் உன்னை என் வாயினின்று வாந்திப் பண்ணிப் போடுவேன்.'' வெளி.3:15-16 இங்கே அவர், நீ அனலாயாவது அல்லது குளிராயாவது இருந்துவிட நான் விரும்புகிறேன்.. ஆனால் நீயோ அவ்வாறு இல்லாதபடியினால், உன்னை என் வாயின்று வாந்திப் பண்ணிப் போட்டு, உன்னை நீக்கி விட விரும்புகிறேன்'' என்று கூறுகிறார். 64அவர்களிடம் எராளமான பணம் இருக்கிறது. மகத்தான கட்டிடங்கள் அவர்களுக்கு உண்டு. மாபெரும் காரியங்கள் அவர் களுக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தன, ஆனால் அவர்களுக்கோ பரிசுத்த ஆவியின் அனலானது இருக்கவில்லை. அவர்களிடம் அதிகார இயந்திரம் உள்ளது. ஓ, என்னே ! அவர்களுக்கு ஒருங் கிணைந்த சபை உண்டு. இது வரையில் அவர்கள் பெற்றிராத மிகப் பெரிய கட்டிடங்கள் அவர்களுக்கு உண்டு. ஆனால் பரிசுத்த ஆவி இல்லை. தேவன் சபைக்கு பரிசுத்த ஆவியைத் தான் அனுப்பினார். இப்பொழுது 16ம் வசனத்தில் நாம் தொடர்ந்து கவனிக்கையில். அவர்களுக்கு எல்லாவிதமான சங்கங்கள் உண்டு. 'ஓ, எங்களுக்கு அதற்குரிய மகத்தான ஆளுகை உண்டு; முதிர்வயதான பெண்மணிகள் உதவி சங்கம், எங்களுக்கு உண்டு, வாலிபருக்கான சீட்டாட்டம் உண்டு, வெள்ளி இரவில், பங்கோ எனப்படும் ஒரு வகையான சூதாட்டம் உண்டு; ஞாயிறு மதியம் கூடைப் பந்தாட்டம் உண்டு, தளக்கட்டுப் பந்தாட்டம் (Baseball) உண்டு; ஆண்கள் அரட்டையடிப் பதற்கு என்றே ஒரு சங்கம் என்றெல்லாம் எங்களுக்கு இவ்வாறு எல்லாவிதமான காரியங்களும் உண்டு'' என்று கூறுகிறார்கள். சபைக்கு சங்கங்களும், க்ளப்புகளும், கூட்டங்களும், இன்னும் இன்னபிற காரியங்களுக்கும் ஏராளமாக நிறைந்து காணப்படுகிறது. ஆனால் பரிசுத்த ஆவியின் அனல் அவளிடம் காணப்படவில்லை. உங்களுக்கு பெரிய ஆட்சி முறை உள்ளது. ஆனால் உங்களுக்கோ அனலுண்டாக்க ஒன்றுமே இல்லை. ஆனால் உலகுக்குத்தான் அனலுண்டாக்குகிறீர்கள். ஆனால் தேவனுக்கு அல்ல, எனவே தான் அவர்கள் வெது வெதுப்பாயிருக்கிறார்கள். 65நிச்சயமாகவே உங்களிடம் ஏற்கெனவே உங்களிடம் இருந்ததை விட இப்பொழுது கூடுதலாக அங்கத்தினர்கள் பெருகி யிருக்கிறார்கள். 1944ம் ஆண்டில் இருந்ததைவிட இன்னும் ஒரு மில்லியன் மக்கள் கூடுதலாக எங்களுடன் சேர்ந்திருக்கிறார்கள் என்று பாப்டிஸ்டுகள் கூறினர். ஆனால் நீங்கள் பெற்றிருப்பது தான் என்ன? ஒரு பெரிய இயந்திரமே! அவ்வாறு பெருமையாகக் கூறினதை நான் கேட்ட அதே சபையில், ஆராதனை நடந்து கொண்டிருக்கையில், நடுவில் பதினைந்து நிமிடங்கள் இடைவேளை விட்டு அப்பொழுது சபையின் மேய்ப்பர் மற்றும் உதவிக்காரர்களும், மற்றோரும் வெளியே போய் சிகரெட் புகைத்துவிட்டு வருவதற்கு ஒரு தருணம் அளிக்கின்றனர். பார்த்தீர்களா? வேதமானது அக்காரியத்தை தெளிவாகக் கண்டனம் செய்கிறது என்பதைக் கவனியுங்கள். ''உன் சரீரத்தை அசுத்தப்படுத்தினால்...'. மருத்துவர்கள் புகைப்பதைக் குறித்து அது முழுவதும் புற்று நோயினால் நிறைந்திருக்கிறது என்று கண்டனம் செய்கின்றனர். அப்படியிருந்தும், வானொலியிலோ ''சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி'' என்று புகைபிடிப்பதைத் தூண்டும் விளம்பரத்தைச் செய்கிறார்கள். பில்லி கிரகாம் அவர்கள், ''ஒரு மனிதன் அவ்விதமாக சிந்திக்கத் தொடங்கினால் அவன் முட்டாள்'' என்று கூறியது போல் அக்காரியம் உள்ளது. 66''சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி'' என்கிறார்கள். சிந்திக்கும் மனிதன் ஒருக்காலும் புகைக்கவே மாட்டான். அதைப் பற்றி மறு சிந்தனை கொள்ளுங்கள். தற்போதுள்ள நவீன பெண் களின் ஆடைகளை அணிந்து கொள்தவற்கு ஏதுவாக, பெண்கள் புகை பிடித்தால், அவர்கள் மெலிந்து போவார்கள் என்றும் கூறுகிறான். அவ்விதம் விளம்பரம் செய்வது சிகரெட் விற்பனையை அதிகரிக்கிறது. இப்பொழுது ஆண்களைவிட பெண்கள் தான் அதிகமாக சிகரெட் புகைக்கிறார்கள். ஒரு ஆண் ஒரு சிகரெட் புகைத்தால், அந்த நேரத்தில் ஒரு பெண் மூன்று சிகரெட்டுகள் புகைத்து விடுகிறாள், ஏனெனில் அவள் மெலிய விரும்புகிறாள். ஆனால் புகைப்பது, காசநோய், புற்று நோய் முதலியவற்றை உண்டாக்கி அவர்களை மெலியச் செய்கிறது என்பதை அவர்கள் உணருவதில்லை. அவளுக்குள் ஒரு குழந்தை வடிவத்தில் அது உள்ளே வந்து அவ்வாறு ஆக்கி, அவளை முற்றிலும் தின்று போட்டு, கொன்று விடுகிறது. அதிலிருந்து தீமையைத் தவிர வேறு எதுவும் வர முடியாது. அதுதான் சரி. அது ஒரு சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி என்னப்படுகிறது. ஓ, என்னே ! 67“இல்லை, இல்லை, இல்லை எங்களுக்கு உண்டு... சகோ. பிரன்ஹாமே நான் அதை எதிர்க்கிறேன். எங்களுக்கு மகத்தான கூட்டங்கள் நடைபெறுகின்றன. பில்லி கிரகாம் தேசம் முழுவதி லும் எதைப் பெற்றுள்ளார் என்பதை பாருங்கள்'' என்றெல்லாம் கூறுகிறார்கள். ஓ, நிச்சயமாக ஒரு பெரிய ஆட்சிமுறை தான் பணத்துக்கு அமர்த்திக் கொள்ளப்பட்ட சுவிசேஷர்கள், ஊதியம் கொடுத்து அமர்த்தப்பட்டுள்ள பாடல் குழு தலைவர்கள் அவர் களுக்கு உண்டு. ஆம், அவர்கள் தங்களுடைய சுவிசேஷகர்களை பணத்துக்கு அமர்த்திக்கொள்கின்றனர். “நல்லது, நான் வந்து அந்த எழுப்புதல் கூட்டத்தை நடத்தினால் எனக்கு எவ்வளவு பணம் தருவீர்கள். நல்லது, இத்தனை ஆயிரம் டாலர்களை எனக்கு தராவிடில் நான் வரவேமாட்டேன். அப்படித்தான். பாடலை நடத்துவதற்கு யாரை நீங்கள் அமர்த்திக்கொள்ளப்போகிறீர்கள்? நல்லது, நீங்கள் போய் இன்னாரை அமர்த்திக் கொள்ளுங்கள். அவர் ஒரு பெரிய தனிக் குரலிசைஞர் (Soloist) அவரையே நீங்கள் அமர்த்திக் கொள்ளுங் கள். அவரே தனிப்பட்ட விதத்தில் எனக்குச் சேரும் கூட்டத்தில் பாதியளவு கவர்ந்திழுப்பார்'' என்று கூறுகிறார்கள். கூலிக்கு அமர்த்திக் கொள்ளப்படும் பாடகர்கள்! கூலிக்கு அமர்த்திக் கொள்ளப்படும் சுவிசேஷகர்கள்! ஆத்தும ஆதாயம் செய்வதென்பது ஒரு வியாபாரம் என்ற அளவுக்கு இப்பொழுது ஆகிவிட்டது. ஆத்தும ஆதாயம் என்பது சபையின் வியாபாரம் அல்ல, அது சபையில் காணப்படும் பரிசுத்த ஆவியின் வல்லமை யால் நடப்பதாகும். ஆத்தும ஆதாயம் என்பது தேவனுடைய கிரியையாகும். அதைப் பணத்தைக்கொண்டு விலைக்கு வாங்காதே. இல்லை ஐயா! இல்லை. ஆகவே அவைகள் யாவும் கிரியைகள், கிரியைகள், கிரியைகள் என்பதாகத்தான் இருக்கிறது. கூலிக்கு அமர்த்திக்கொள்ளப்பட்ட சுவிசேஷர்கள், கூலிக்கு அமர்த்திக் கொள்ளப்பட்ட பாடல் குழு தலைவர்கள், கூலிக்கு பாடும் பாடல் குழுவினர் என்று இவ்வாறெல்லாம் உள்ளன. அவ்விதமான கிரியைகளையெல்லாம் தேவன் விரும்பவில்லை. தேவனுக்கு அவை தேவையில்லை. பரிசுத்த ஆவியானவர் உங்களில் கிரியை செய்வதையே அவர் விரும்புகிறார். 6817ம் வசனம் கூறுகிறது. “நீ நிர்பாக்கிமுள்ளவனும், (ஓ!) பரிதபிக்கப் படத்தக்க வனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்” வெளி.3:17 இக்கடைசி கால சபைகளில் உள்ள இந்த பெந்தெகொஸ் தேயினர் தாங்கள் ''ஐசுவரியவான்கள்'' என்று எண்ணினர். அவர்கள் எண்ணினர்... புறம்பான ரீதியில் அவர்கள் அவ்வாறே உள்ளனர். ஆம் ஐயா. அவர்கள் ஐசுவரியமாயுள்ளனர். சில ஆண்டு களுக்கு முன்பாக இருந்த சபையைக் குறித்து எண்ணிப் பாருங்கள், அந்நாட்களில், ஊருக்கு ஊர் துரத்திவிடப்பட்டு, மூலையில் போய் நின்றனர். அவர்களுக்கு மிகவும் கடினமான வேளை உண்டாயிருந்தது. ஆனால் இப்பொழுதோ, எல்லாவற்றையும்விட பெரிய கட்டிடங்கள் அவர்களிடம் உள்ளன. 69அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் சபைக்கு இன்றிருக்கிற கட்டிடத் தைப் பாருங்கள். ஒரு காலத்தில் அவர்களுக்கு இங்கிருப்பதைப் போல், மரத்தலான சாதாரண கட்டிடமே இருந்தது, இப் பொழுதோ, அவர்கள் 6 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு கட்டிடத்தை கட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களும், “இயேசு சீக்கிரம் வரப்போகிறார்'' என்று கூறிக் கொள்ளுகிறார்கள். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையென்பதை உங்களுடைய கிரியைகள் நிரூக்கின்றனவே. ஏழை மிஷனரிகளோ ஊழிய களத்திலே, கால் களில் பாதரட்சைகூட தொடுக்காமல், ஊழியம் செய்கின்றனர். அவர்கள் உண்மையான தேவ பயம் உள்ள மிஷனரிமார்களாவர். கால்களில் அவர்களுக்கு பாதரட்சை இல்லை, வாரத்தில் இரண்டு நாட்களுக்குரிய அரிசி மட்டுமே அவர்களுடைய ரேஷனாககிடைத்து, வாரத்தில் இரு வேளைகள் மட்டுமே உண்டு, சுவி சேஷத்தை காடுகளிலும் தங்களுடைய சகோதரர்களுக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் நாமோ, 6 மில்லியன் டாலர் செலவில் கட்டிடங்கள் கட்டுகிறோம். சபைக்கட்டிடமானது பெரிய வருணம் பூசப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டதாக, பெரிய அளவில் கட்டுகிறோம். அவர்கள் சபைகளில் கடன் வழங்கம் சங்கங்கள் ஏற்படுத்தும் அளவுக்கு ஏராளம் பணம் குவிந்து விட்டது. உண்மை ! 70அவர்கள் சபைகளில் அவர்களுடைய சுவிசேஷகர்களையும், மிஷனரிமார்களையும் மருத்துவப் பரிசோதனை செய்வதற்கென்றே மருத்துவரும் உள்ளனர். யாராவது மிஷனரியாகப் போக விரும் பினால், அவரை மருத்துவரின் பரிசோதனைக்குட்படுத்தி, அல்லது உளவியல் மருத்துவ நிபுணரைக்கொண்டு (Psychiatrist) உளரீதியாக அவரது விவேகம், மூளை சரியாக இயங்குகிறதா என்பதையெல்லாம் பரிசோதித்து அனுப்புகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் தான் மனிதனை பரிசோதிக்க முடியும். ஊழியத் திற்குப் போவதற்கு தகுதியுண்டா இல்லையா என்பதை பரிசோதிக்க உளவியல் மருத்துவ நிபுணர் உங்களுக்குத் தேவையில்லை. 'ஏன், நாங்கள் ஐசுவரியவான்கள், எங்களுக்கு ஒரு குறைவுமில்லை'' என்று கூறுகிறார்கள். ஓ, நிச்சயமாக உங்களிடம் ஏராளமான பணம் உண்டு. புறம்பான ரீதியில், குறைவற்று, ஐசுவரியவான்களாயுள்ளனர். அவர்களிடம் பெரிய கட்டிடங்களும், அலங்கார ஜன்னல்கள் பொருத்தப்பட்டும் உள்ளன. 71பேச்சு சாதுரியமுள்ள பிரசங்கிகள் அவர்களுக்கு உண்டு. ஓ, என்னே, நான் உங்களுக்குக் கூறுவேன், அவர்கள் நிச்சயமாகவே நாவன்மை படைத்தவர்கள்தான். அவர்கள் இரவு முழுவதும் நின்று, பேசி கொண்டேயிருக்க முடியும்? அவர்கள் பிரசங்கிக்க எழும்பி வருகையில்... அவர்கள் கூறக் கூடாதவைகளைப் பற்றி கூறுவதையே நான் குறிப்பிடுகிறேன். அவர்கள் எழும்பி நின்று, இதைப் பற்றியும் அதைப் பற்றியும் சிறிது காரியங்களை அவர்கள் பேசுவார்கள், அவ்வளவுதான். அது எப்படியுள்ளது என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் கூலிக்கு அமர்த்திகொள்ளப்பட்ட பாடகர்கள். பிரசங்க பீடத்தில் நாவன்மைமிக்க பிரசங்கிகளாக வருகிறார்கள். பின் தொங்கலற்ற நீண்ட டக்ஸடோ சூட் என்னப் படும் ஒரு வகை விலையுயயர்ந்த ஆடை அணிந்தவராய், காலர் பட்டி திருப்பிவிடப்பட்ட நிலையில் அணிந்திருந்து, ஒரு வகையான பின்புறம் வால்போல் நீட்டிக் கொண்டிருக்கும் கோட் மேலே அணிந்தவராய் அவர்களது பிரசங்கியார் இல்லாவிடில், சபையார் அதனால் சற்று மலைப்படைக்கின்றனர். 72அப்பாடகர்கள் அங்கே வருகிறார்கள், அவர்களில் பெண் களோ, தலை முடியை யேசபேலைப்போல் குட்டையாக வெட்டிக் கொண்டு, முகத்தில் நிறைய வர்ணம் பூசிக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் முகத்தில் பூசப்பட்டுள வர்ணமானது, ஒரு களஞ் சியத்தை வர்ணமடிக்க போதுமானது. பாடல் குழுவில் அணிந்து கொண்ட அங்கியை கழற்றியே உடனேயே அவர்கள் குட்டையான நிஜார்களை, ஆண்களின் ஆடைகளை அணிந்து கொள்ளுகிறார்கள். 'ஆணின் ஆடையை பெண் தரித்துக் கொண்டால் ஆண்டவரின் பார்வையில் அது அருவருப்பாயிருக்கும்'' என்று வேதம் கூறுகிறது. தங்கள் நாசியை உயர்த்தினவர்களாக தெருவில் நடந்து செல்கின்றனர். மழை பெய்தால் அவர்கள் பூசியிருக்கும் வர்ணமெல்லாம் அவர்களை மூழ்கடித்து விடும். இறுமாப்பும், திமிர்பிடித்ததும், கர்வமான மனநிலையும் உள்ள யேசபேல்கள் இவர்கள். அக்காரணத்தினால்தான், நமக்கு எழுப்புதல் இல்லை, பெரிய அளவில் வெறும் இயந்திரமயமான காரியம் தான் உள்ளது. ஓ, பிரதான தூதனின் சப்தத்தையொத்த சப்தம் கொண்ட வராக நீங்கள் இருக்கக் கூடும், அதற்காக பதிலளிக்க வேண்டிய நிலையில், உங்களைத் தேவன் ஆக்குவார். இந்த எல்விஸ் ப்ரெஸ் லிக்களும், ஏனையோரும், மேலும் எர்னீ போஃர்ட்களும், இன்னும் மற்றுமுள்ளோரும் அருமையான குரல்களையுடையோர் ஆவர். அவற்றை பிசாசுக்காகப் பயன்படுத்துகிறார்கள். தேவன் “நான் அவர்கள் கையில் அதை விசாரிப்பேன்'' என்று கூறினார். குருடாயிருக்கும் பேஃன்னி க்ராஸ்பியை நான் மதிப்பதின் காரணம் என்னவெனில், அவன் தன்னுடைய வரத்தை ஒரு போதும் உலகுக்கு விற்றுவிடவில்லை. அவள் அவ்வரத்தை தேவனோடு மாத்திரமே வைத்துக்கொண்டாள். 73இவர்களில் அநேகர், இனிய குரலையுடைய பாடகர்கள், சொல்வன்மைமிக்க மனிதர், பெரிய மனிதர்கள், தங்களுடைய காலத்தை தேவனுக்காக உபயோகிக்கப்பதற்குப் பதிலாக வேறு வகையாக உபயோகிக்கிறார்கள். பிசாசு அவர்களை அவ்வாறான புரட்டான வழியில் நடத்தியிருக்கிறான். அவர்கள் பிசாசுக்காகவே கிரியை செய்து வருகிறார்கள். அவர்கள் பெரும் புள்ளிகள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசிடும் பெரும் பிரமு கர்கள், தங்களுடைய திறமைகளை தேவனுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக உலகுக்கு விற்றுப் போட்டு விட்டார்கள். அவர்களில் சிலர் ஆலயத்திற்கு வருகிறார்கள். அவர்கள் ஆலயத்திற்குபோய், அருமையான அங்கியணிந்து, அங்கே பாட்டுப் பாடிவிட்டு, அங்கிருந்து திரும்பிப்போய் அடுத்த நாள் இரவில் ராக் அண்டு ரோல் பாட்டுகளை பாடுகிறார்கள். நாம் அறிந்திருக்கிற அவ்வித மான பாடகர்கள், குறிப்பிட்ட சபைகளை சேர்ந்தவகளாயிருக் கிறார்கள். அவர்கள் திரைப்படங்களில் ராக் அண்டு ரோல் பாட்டுப் பாடுகிறார்கள். ராக் அண்டு ரோல் பாடகர்களின் அரசர்கள் என்னப் படுவார்கள். தேவதா பக்தியுள்ளவர்களாக தங்களை அழைத்து கொள்கின்றர். அது பிசாசின் ஒரு தந்திரமேயாகும். 74ஒரு மனிதனுக்கு போதுமான அளவுக்கு நல்ல பொது அறிவு இருந்தது; அதாவது, அவன் தான் ஞாயிற்றுக் கிழமையில் போய் பிரசங்கிக்கப் போவதாகவும், அதை முடித்த பிறகு, வானொலி ஒலிபரப்பில் ராக் அண்டு ரோல் பாடல்களை பாடப் போவதாகவும் கூறினான். முடிவாக அவன் ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து தன் தலையில் சுட்டுக்கொண்டு, மூளை சிதறி செத்துப்போனான். அதைச் செய்ததற்காக நான் அந்த மனிதனை மதிக்கிறேன். அவன் செய்தது சரிதான். அந்தப் பன்றிக் கூட்டம், தங்களுக்குள் அசுத்த ஆவிகள் நுழைந்ததும், கடலுக்குள் ஓடிப்போய் மூழ்கி மாண்டு போய் விட்டன. அந்த அளவுக்கு இந்த மனிதனுக்கும் அறிவு இருந் திருக்கிறது. அந்த அளவு அறிவு கூட சிலருக்கு இருப்பதில்லை. அவ்வளவு கடினமாகப் பேசுவதற்கு நானே வெறுக்கிறேன். ஆனால் சகோதரனே, சகோதரியே, அவ்விஷயத்தை நாம் திட்ட வட்டமாக எடுத்துக் காட்டியாகவே வேண்டும். நாம் வாழ்கிற இந்நாள் அதற்காகத்தான் உள்ளது. இயேசு ஏரோதை, ''கிழட்டு நரி என்று அழைத்தாரெனில், யோவான் அவர்களை 'விரியன் பாம்புக் குட்டிகளே'' என்று அழைத்தானெனில்... சரி. 75அவர்களுக்கு பெரிய கட்டிடங்களும், வர்ணம் பூசப்பட்ட கண்ணாடி ஜன்னல்களும், நாவண்மைமிக்க பிரசங்கிகளும், கூலிக்கு அமர்த்திக்கொள்ளப்பட்ட இனிய பாடகர்களும் உள்ளனர். ஆம் ஐயா, அதில் அவர்களுக்கு என்ன உள்ளது? அதில் என்ன உள்ளது? பரிசுத்த ஆவின் ஒரு அம்சமும் அதில் இல்லை. அவர்கள் குட்டையான உடைகளை அணிந்து, அங்கே நிற்கிறார்கள். பிறகு ஆலயத்துக்கு வந்து, பாடகர் குழுவில் அங்கம் வகித்து பாடுகிறார்கள். அப்படிப்பட்ட பரிதாபத்துக்குரிய மாய்மாலக் காரனே! ஆம், ஐயா, அப்படி தான் நடக்கிறது. ஓ, பிரசங்கியே, நீர் குறைவாகப் பணம் கொடுக்கும் கூட்டத் தைவிட, எங்கு அதிகம் பணம் கொடுக்கிறார்களோ அக்கூட்டத் திற்குத் தான் பிரசங்கிக்கப் போகிறீர், நீர் பிரசங்க பீடத்தில் நிற்ப தற்கு தகுதியுள்ளவர் அல்ல, நீர் ஒரு கயவர். பணம்தான் குறிக் கோள். “இத்தனை ஆயிரம் டாலர்களை நீங்கள் ஒதுக்கீடு செய்திடா விடில் எங்களால் வரமுடியாது. எங்களுடைய மேனேஜர்கள் அங்கே வந்திடுவார்கள். அப்பணத்தை உங்களால் சேர்த்துக் கொடுக்க முடிந்தால் தான் எங்களால் வர முடியும். யாவருடைய முழு ஒத்துழைப்பும் எனக்குக் கிடைக்காவிடில் நான் வரமுடியாது. அனைத்து சபைகளிலுள்ள யாவரும் முழுவதுமாக ஒத்துழைத்தால் தான் எனக்கு ஏராளமான பணம் கிடைக்கும், அதைக்கொண்டு, என் கடன்களையெல்லாம் நான் அடைத்துக் கொள்ள முடியும், ஆகவே அவ்வாறு இல்லாவிடில் நான் வரமுடியாது'' என் றெல்லாம் கூறுகின்றனர். சகோதரனே, ஒரு உண்மையான தேவனுடைய மனுஷன், பரிசுத்த ஆவியானவரின் நடத்துதல் அவனுக்கு இருந்தால் போதும், அவன் செல்வான், அல்லது சிற்றோடையில் ஓடும் தண்ணீரைக் குடித்துக்கொண்டு திருப்தியோடிருப்பான். நான் வெறும் சோடா க்ராக்கர்ஸ்களை சாப்பிட்டு, (ஏழைகள் சாப்பிடும் ஒரு வகை சாதாரண பிஸ்கட் - மொழிபெயர்ப்பாளர்). சிற்றோடை யின் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இருந்து விடுவேன். அதுதான் சரி. அவ்விதமான நபர்தான் உண்மையான தேவ மனிதனாவான். 76ஆனால் மக்களோ, பெருந்தொகையான பணத்தை சேகரிக் கும் பொருட்டு வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கென தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். நான் கூறுவது முற்றிலும் உண்மை . பாருங்கள்? அது தேவனுக்குரியதல்ல. தேவன் கூறுகிறார், “ஓ, நீங்கள்...'' ''நான் ஐசுவரியவான், எனக்கு ஒரு குறைவுமில்லை '' நிச்சயமாக அப்படித்தான் உள்ளது. எது அவசியம் தேவை யாயிருக்கிறதோ அது உன்னிடம் இருக்கவில்லை. ஆம் அதை நீ அறியாமலிருக்கிறாய். ''ஐசுவரியவானும், ஒரு குறைவுமில்லை யென்றும் என்று இருக்கும் நிலையைப் பாருங்கள். சீட்டு விளையாட்டு போன்ற காரியங்களில் சபையிலேயே ஈடுபட அவர் களுக்கு பணம் செலவழிக்கப்படுகிறது. ''எங்களுக்கு பெரிய சபை இருக்கிறது“ என்று கூறுகிறீர்கள். ஆம் ஐயா, நிச்சயமாக அப்படித் தான் இருக்கிறது. இருப்பதிலேயே பெரிய சபைதான். ''நல்லது, இந்நகரத்தின் மேயராக இருப்பவரே எங்களது சபைக்குத் தான் வருகிறார் என்பது உங்களுக்கத் தெரியுமா?'' என்று கேட்கின்றனர். ”இன்ன பிரமுகர் கூட, அவர் கள் நகருக்கு வருகை தரும் போது, எங்களுடைய சபைக்குத் தான் வருகிறார்கள்'' என்கிறீர்கள். 77ஆம், பரிசுத்தவான்களான தரித்திரரும், தேவை உள்ளோரும் சபைக்குள் வரட்டும் பார்க்கலாம். அவர்கள் வந்தால் அது உங்களுக்கு ஒரு கண்டனமாக இருக்கிறது. அவர்கள் அங்கே இருப்பதையே நீங்கள் விரும்பவில்லை. அப்படிப்பட்டவர்கள் வந்து விட்டால், நீங்கள் பிரசங்கம் பண்ணும்போது, 'ஆமென்'' என்று சப்தமிடுவர்களே என்று அஞ்சுகிறீர்கள். இங்கே ஒரு புத்தகத்தில், ஒரு ஆலயத்தினுள் வந்திருந்த ஒரு எளிய பெண்மணியைக் குறித்து நான் வாசித்திருக்கிறேன். அவள் ஒரு சபைக்குள் வந்தாள். அவள் தன் பிள்ளைகளை தூரமான காட்டுப் பிரதேசங்களிலே, உண்மையான தேவதாபக்தியுள்ளவர்களாக, பழைய பாணியிலான ஆவிக்குரிய சபையில் வளர்ந்து ஆளாக்கி யிருந்தாள். அவளது மகள் ஒருத்தியை ஒரு நாள், ஒரு வாலிபன் வந்து விவாகம் செய்து கொண்டு போனான். அவன் பெரிய நகரம் ஒன்றில் அப்பெண்மணி சார்ந்திருந்த அதே ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒரு பெரிய சபையைக் சேர்ந்தவனாக இருந்தான். எனவே, அவன் அப்பெண்ணின் தாயிடம், தான் ஒரு கிறிஸ்தவன் என்று கூறி விட்டு, அவளது மகளை விவாகம் செய்து கொண்டு, அழைத்துச் சென்றுவிட்டான். அவன் இறுதியாக, அப்பெண்ணை நாட்டுப் புறங்களிலிருந்து விவாகம் செய்து கொண்டு, தான் வாழும் நகரத்திற்கு அழைத்துச் சென்றபோது, அவள் சார்ந்திருந்த அதே பெயருள்ள நாட்டுப்புற சபையில் இருந்த வந்த நல்ல காரியங்களையெல்லாம் அவளை விட்டு மறக்கடித்துப் போட்டு, நகரில் இருந்த அதே பெயருள்ள தான் அங்கம் வகிக்கும் சபைக்குரியவளாக அவளை மாற்றிப் போட் டான். அவள் முன்பு சார்ந்திருந்த அந்த நாட்டுப் புறத்து சபையில் பரிசுத்த ஆவி உண்டாயிருந்தது. ஆனால் நகரில் இருந்த அதே சபையில் பரிசுத்த ஆவியே இல்லை. எனவே, அவர்கள் இப் பொழுது அந்த பெரிய அருமையான சபையில் வந்து விட்டார்கள். ஒரு நாள் அப்பெண்ணின் தாயார் தன் மகளை பார்த்து விட்டு போக விரும்புவதாக தெரிவித்திருந்தாள். அவள் வந்தால், அவளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று மகளும் மருமகனும் திகைத்தார்கள். எனவே, அவள் குறிப்பிட்ட நாளில் வந்தபோது ஏதோ பழங்காலத்து நினைவுச் சின்னத்தைப் பற்றி விவரிக்கும் புத்தகத்தில் கூறப்பட்ட ஒரு நபரைப் போன்ற அவர்களுக்கு காட்சி யளித்தாள். ஏனெனில் அவள் அணிந்திருந்த உடை கழுத்து வரையிலும் உயரமாக உள்ள காலர் உள்ளதாகவும், முழுக்கை உடைய தாகவும் இருந்தது. அவளது தலை முடியானது பின்னால் நீண்டு தொங்கிக் கொண்டு இருந்தது. தலையை உரித்த வெங்காயத்தைப் போல், நன்கு மழித்துச் சீவியிருந்தாள். அவள் வந்தபோது, “நல்லது அல்லேலூயா, அன்பே, நீங்கள் எல்லாம்; எப்படியிருக் கிறீர்கள்?'' என்று கேட்டாள். மேலும், ”இன்று ஞாயிற்றுக் கிழமை காலையாயிற்றே, நீங்களெல்லாம் ஆராதனைக்குப் போவீர் களல்லவா?'' என்றாள். 78மகளுடைய புருஷன், மகளிடம், “இவளை நாம் என்ன செய்யலாம்? இப்படிப்பட்ட இவளை நாம் அங்கெல்லாம் அழைத்துச் செல்லக் கூடாது, என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினான். அவன், 'அம்மா , நாங்கள்... நான் உங்களுக்கு கூறுகிறேன்...'' என்றான். “என்னால் ஆலயத்திற்குப் போகாமல் இருக்க முடியாது. நான் அங்கே அந்த மூலையில் இன்ன சபையொன்றைப் பார்த்திருக் கிறேன். நான் போய் ...'' என்று தாய் கூறினாள். ''ஓ, நல்லது, வேறு வழியில்லை, அழைத்துக் கொண்டு தான் போவோமே“ என்றான் அவன். ஆகவே, அப்பெண்மணியை அழைத்துக் கொண்டு சபைக்கு வந்தபொழுது, அவளைப்பற்றி வெட்கமாக நினைத்த படியால், அவளை முதலில் உள்ளே போக விட்டுவிட்டார்கள். இங்கே அவள் தெருவில், அந்த நீண்ட ஆடையை ஆணிந்து கொண்டு, தன் அக்களத்தில் வேதாகமத்தை சுமந்து கொண்டு வந்தாள். ஆனால் சகோதரனே, ஒருவேளை உலகில் உள்ள பெரிய தலைவர்கள் பிரமுகர்கள் ஆகியோரைப் பற்றிக் கூறும் “இன்னார் இன்னார்'' புத்தகத்தில் அவளது பெயர் இடம் பெறாமல் இருக்கக் கூடும். ஆனால் அவளது பெயர் ஆட்டுக்குட்டியானவரிள் ஜீவ புஸ்தகத்தில் இடம் பெற்றிருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதுவே முக்கியமான காரியமாயிருக்கிறது. 79அவள் சபையினுள் நுழைந்த போது, அங்கே பின்னால் ஒரு ஆசனத்தில் அமர்ந்தாள். பிறகு தனது வேதாகமத்தை திறந்து அதைப் படிக்க ஆரம்பித்தாள். அங்கிருந்த யாவரும் அவளையே வெறிக்கப் பார்த்து, ஏதோ ஒரு பழங்காலத்து நினைவுச் சின்னம் தான் எங்கிருந்தோ இங்கு தப்பித் தவறி வந்துவிட்டதோ என்று நினைத்தார்கள். அவர்களோ லவோதிக்கேயா காலத்திற்கு எடுத்துக் காட்டாய், மிகவும் எடுப்பான ஆடைகளை அணிந்தவர்களாய் அங்கே அமர்ந்திருந்தார்கள். அவர்கள் பின்னால் திரும்பிப் பார்த்து, அப்பெண்மணி தன் முகத்தில் பெரிய புன்முறுவலோடு வேதத்தை வாசித்துக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். சபைப்போதகர், ஆராதனையின் ஏனைய சடங்குகளையெல் லாம் முடித்துவிட்டு, கடைசியாக பதினைந்து நிமிட பிரசங்கத் திற்காகத் தான் அவருக்கு நேரம் இருந்தது. எனவே அவர் அதற்காக எழும்பி நின்று கர்த்தர் நல்லவர்'' என்று கூறி ஆரம்பித்தார். “தேவனுக்கு ஸ்தோத்திரம். அது சரிதான், அல்லேலூயா'' என்று அப்பெண்மணி சப்தமிட்டாள். உடனே யாவரும் ஆண் வாத்துக் கோழியைப் போல் தங்கள் கழுத்துக்களை சுற்றுமுற்றும் பார்த்து நீட்டி, ”யார் அது? என்றார்கள். சற்று நேரம் கழித்து, போதகர், “ஹூம் ஹூம்'' என்றார். அவர் மேலும் தொடர்ந்து, ''ஒவ்வொரு காலத்திலும் கிறிஸ்த வர்கள், தீரமிக்க மகத்தான அருமையான கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும்'' என்று கூறினார். இவ்வாறு இன்னும் சில காரியங் களையும் கூறினார். 80'அதுவே சரி தேவனுக்கு ஸ்தோத்திரம்'' என்று அவள் மீண்டும் கூறினாள். அவர்கள் யாவரும் சற்றும் முற்றும் பார்த்தார்கள். போதகர், ''ஹூம்'' என்று கூறிவிட்டு, உதவிக்காரர்கள்( டீக்கன்கள்) குழுவை அர்த்தத்துடன் நோக்கிப் பார்த்தார். அந்த உதவிக்காரர் குழுவுக்கு போதகர் என்ன சமிக்ஞை தெரிவிக்கிறார் என்பதை புரிந்து கொண்டார்கள். அவர்கள் பின்னால் போய், அந்தப் பெண்மணியை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய், ஆலய வாசலுக்கு வெளியே கொண்டுபோய் விட்டு, நீ போதகருக்கு இடையூறு செய்கிறாய்'' என்று கூறினார்கள். நீங்கள் மரித்திருக்கிறீர்கள், அதை அறியாமலும் இருக்கிறீர்கள். ஆம், ஓ, சித்திர வர்ணம் பூசப்பட்ட உங்கள் ஆலய ஜன்னல்கள் என்னத்திற்கு? மெத்தென்ற பூம்பட்டினால் செய்யப்பட்ட சொகுசான இருக்கைகள் என்னத்திற்கு? உங்களுடைய பெரும் திரளான மக்கள் கூடுகிற உங்கள் சபைதான் என்னத்திற்கு? மார்ட்டின் என்ற ஒரு வகைப் பறவை எவ்வாறு தன்னுடைய கூண்டிலேயே தன் அழிவை அடைந்து விடுகிறதோ, அவ்வாறு நேராக நீங்கள் நரகத்துக்கு தான் போகப்போகிறீர்கள். உங்களிடத்தில் தேவனுடைய ஆவி இல்லையெனில் நீங்கள் கைவிடப்படுவீர்கள். நீங்கள் மறுபடியும் பிறவாவிடில் தேவனுடைய இராஜ்யத்தைக் காண முடியாது. அவ்வாறு கூறுவது கசப்பாகத் தான் இருக்கும். அது நான் விளக்கெண்ணெய் குடிக்கும் வழக்கம் உண்டே, அதைப் போல் இருக்கிறது. நான் தாயிடம், 'அம்மா, என்னால் அதை சகிக்கவே முடியவில்லை'' என்று விளக்கெண்ணெய் குடிப்பதைப் பற்றிக் கூறுவதுண்டு. உனக்கு விளக்கெண்ணெய் குடிப்பது கஷ்டமாக இருக்கா விடில், அது உனக்கு நன்மை பயக்காது'' என்று என் தாய் கூறுவார்கள். இந்த பரம காரியமுங்கூட அந்த விதமாகத்தான் இருக்கிறது என்ற நான் நினைக்கிறேன். 81அந்த பெரிய அருமையான கட்டிடங்கள் உள்ள சபையின் மக்களிடம் நீங்கள் பேசிப்பாருங்கள். ஓ, அவர்கள், அவர்கள்... அவர்கள் சபைக்கு நீங்கள் போவீர்களானால், நீங்கள் சொல்ல நேரிடும்.... அவர்கள் சபைக்குப் போய், “நீங்கள் பெந்தெகொஸ் தேயினரா?'' என்று கேட்டால். ''ஓ ஆமாம், ஊ - ஊ. நிச்சயமாக நாங்கள் பெந்தெ கொஸ்தேயினர் தான்'' என்பார்கள். ''மறுபடியும் பிறப்பதில் நீங்கள் விசுவாசம் கொண்டிருக் கிறீர்களா?'' என்று கேட்டால். “ஆம்” என்பார்கள். 82“உங்களுக்கு ஒரு காரியத்தை காண்பிக்க நான் விரும்பு கிறேன். இந்தக் கட்டிடத்தைப் பாருங்கள். இக்கட்டிடத்திற்கு கட்டுமானச் செலவு எவ்வளவு ஆயிற்று என்பது உங்களுக்குத் தெரியுமா? இதைக் கட்டியெழுப்புவதற்கு, முக்கால் மில்லியன் டாலர்கள் (7.5 இலட்சம் டாலர்கள் - மொழிபெயர்ப்பாளர்) செலவாயிற்று. எங்களுக்கு முன்பெல்லாம் இம்மாதிரிக் கட்டிடம் கிடையாது. அந்த சந்தில் தான் ஒரு இடத்தில் நாங்கள் கூடு வதுண்டு” என்றெல்லாம் கூறுவார்கள். நீங்கள் சுற்றிப் பார்த்தால், அவர்கள் பெற்றிருக்கிற அந்த பெரிய காரியங்களையெல்லாம் எங்களுக்கு இருக்கிறது'' என்று மேலும் கூறுவார்கள். அவர் களுக்கோ இழந்து போகப்பட்ட ஆத்துமாக்களைப் பற்றிய ஆத்துமபாரம் இல்லை. அவர்கள் எப்பொழுதும் எப்படிப்பட்ட கட்டிடம் தங்களுக்கு இருக்கிறது என்பதைப் பற்றியே உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறார்கள். “எங்களுடைய ஞாயிறு பள்ளி வருகைப் பதிவைப் பார்த்தீர்களானால், அது எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை நீங்கள் கண்டுணரலாம்'' என்பார்கள். பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்காமல், இதினால் அவர்களுக்கு என்ன நன்மை பயக்கப் போகிறது? அவர்கள் ''ஐசுவரியவானும் திரவிய சம்பன்னரும், ஒரு குறைவுமில்லை'' என்ற நிலைமையில் இருக்கிறார்கள். 83அவ்வாறு தான் தேவன் அவர்களைப் பற்றிக் கூறினார். “நீ எண்ணுகிறாய், அவ்வாறு இருப்பதாக. ஆனால் நீ தரித்திரனும், நிர்பாக்கியமுள்ளவனும், பரிதாபப்படத்தக்கவனும், குருடனும், நிர்வாணியுமாய் இருக்கிறாய், நீ அவ்விதமான நிலையில் இருப்பதை அறியாமலும் இருக்கிறாய்.'' பார்த்தீர்களா? அவ்வாறு தான் உள்ளது. ஓ, நிச்சயமாக, அவர்கள், “உங்களுக்குத் தெரியுமா? நாங்கள் முன்பு உபயோகித்து வந்த அந்த ஆலயக்கட்டிடம், அது இப்பொழுது பின்னால் இருக்கிறது. புதிதாக உள்ள இது பெரிய ஆலயமாகும்'' என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு ஆத்தும பாரம் என்பதே கிடையாது. ஏனைய காரியங்களையெல்லாம் சரியாக இருக்க வேண்டுமென்பதைப் பற்றித் தான் அவர்கள் அக்கறை கொண்டுள்ளார்கள். ஸ்திரீகள் நலநிதி மற்றும் இன்ன பிற காரியங்களைப் பற்றித் தான் அக்கறை எடுக்கிறதாக இருக்கிறதே யொழிய இழந்து விடப்பட்டிருக்கிற ஆத்துமாக்களுக்கான பாரம் துளி கூட கிடையாது. அவர்கள் ஆத்தும பாரம் உடையவர்களாக இருக்கவில்லை. ஆனால் அவர்கள் ஆஸ்தியைப் பற்றித்தான் பாரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அப்படித்தான் நடக்கிறது. அவர்களுக்கு தவறான பாரம் தான் உள்ளது அவர்களுடைய ஆஸ்தி பெருகுவதைப் பற்றிய பாரம் தான் அவர்களுக்கு உள்ளதேயொழிய, வழி தவறிவிட்ட ஆத்துமாக்களைப் பற்றிய பாரம் அவர்களுக்கு இல்லை. வேதமானது, ''அவர்கள் நிர்பாக்கியமுள்ளவர்களும், பரிதபிக்கப் படத்தக்கவர்களும், குருடராயுமுள்ளதை அறியாமல் இருக்கிறார் கள்'' என்று கூறுகிறது. 84அவர்கள் பணத்தைக் கொண்டு உலகை மதமாற்றி விடலாம் என்று எண்ணுகிறார்கள். “ஓ, நமக்கு மட்டும் ஏராளமான பணத்தை திரட்ட திட்டம் இருக்கக்கூடுமென்றால், உலகை மனந்திரும்பப் பண்ண நம்மால் இயலும் என்று நான் விசுவாசிக்கிறேன். சகோதரன். பிரன்ஹாம் அவர்களே! நமது சபையிலுள்ள சில ஐசுவரியவான்களைக் கொண்டு, பணத்தை ஒன்று திரட்டி, அதைக் கொண்டு ஒரு சங்கத்தை நாம் உருவாக்கிட இயலும், அப்பொழுது நாம் உலகம் முழுவதிலும் சென்று உலகை மனந்திரும்பப் பண்ணலாம். நாம் ஆகாய விமானங்களை எடுத்துக் கொண்டு, ஆப்பிரிக்கா முழுவதிலும் துண்டுப் பிரசுரங்களை அதிலிருந்து வீசியெறிந்தும், மற்றும் இன்னபிற காரியங்களையும் செய்யலாம். நமக்கு மட்டும் போதுமான பணம் இருந்தால்'' என்றெல்லாம் கூறுகிறார்கள். சகோதரனே, உலகை பணத்தால் மனந்திரும்பப் பண்ண இயலாது. பரிசுத்த ஆவியினால் மாத்திரமே உலகை மனந்திரும்பப் பண்ண இயலும் பரிசுத்த ஆவியினால் உண்டாயிருக்கும் வல்லமை யான பிரசங்கமும், சிலுவையும் மட்டுமே உலகை மனந்திரும்பப் பண்ணும். தேவனுடைய திட்டம், பணம் அல்ல. அது பரிசுத்த ஆவியினால் உள்ள திட்டமாகும். லவோதிக்கேயா சபைக்காலத் திற்கோ அல்லது வேறு எந்த சபைக்காலத்திற்கோ, தேவனுடைய திட்டம் இவ்வாறு தான் உள்ளது. ஆம் ஐயா. அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிட விரும்புகிறார்கள். அவர்கள், ''எங்களிடம் தங்கம் உள்ளது'' என்று கூறுகிறார்கள். அவர்கள் வைத்திருப்பது பொன் தான், ஆனால் அது வேதம் கூறும் பொன் அல்ல. அவர்களிடம் ஏராளமான பொன் உள்ளது. ஆனால் அது சரியான பொன் அல்ல. எனவே தான் இப்பொழுது இயேசு அவர்களுக்கு கட்டளையிடுகிறார். ''நீ ஐசுவரிவானாயும், பொன்னை உடையவனாயும், ஒன்று குறைவுமில்லையென்ற நிலையிலும் இருக்கிறாய் என்பதை நான் அறிவேன்'' ஆனால்; 85“நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை என்னிடத்தில் நீ விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன் (தமிழ் வேதாகமத்தில் என்னிடத்தில் வாங்கிக் கொள்'' என்று கூறுகிறது - மொழிபெயர்ப்பாளர்). (இது ஒரு வேறுபட்ட பொன்னாக இருக்கிறது. ஆம் ஆக்கினிச் சூளையில் புட மிடப்பட்ட பொன்னாகும் இது, அது மரணம் என்னும் அக்கினி ஊடே கடந்து சென்றதாகும். அது கல்வாரி பாடுகளினூடே கடந்து வந்ததாகும்). நீங்கள் இப்பொழுது பெற்றிருக்கிறதான இப்பொன்னானது மங்கிப்போகும். அதின் ஒளி மங்கிப்போய் விடும், அதைப் பூச்சி அரிக்கும், அது துருப்பிடித்துவிடும். யாக்கோபு எழுதிய நிருபம் 5:1 முதல் 4ம் வசனம் முடிய நீங்கள் வேண்டுமானால் குறித்துக் கொள்ளுங்கள். அங்கே என்ன கூறப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்; ''ஐசுவரியவான்களே, கேளுங் கள், (இப்பொழுது கர்த்தருடைய வருகையின் நாளிலே) உங்கள் மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்... உங்கள் பொன்... துருப்பிடித்தது... ''துருப்பிடித்துப் போகிற அவ்விதமான பொன்னைத் தான் அவர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் இயேசு தருகிற பொன் யாதெனில், பரிசுத்த ஆவியே யாகும், அது பொன்னிறமான ஆவியின் எண்ணெய் ஆகும். அது உங்கள் இருதயத்தில் ஊற்றப்படுகிறது. ''நீ ஐசுவரியவானாகும் படிக்கு, என்னிடத்திலிருந்து பொன்னை விலைகொடுத்து வாங்கிக்கொள்'' என்று ஆலோசனை கூறுகிறார் கர்த்தர். ஓ, ஆம். 86அவர்கள் குருடராயும் உள்ளனர். அவ்வாறான நிலை மிகவும் மோசமான காரியமாகும். இந்தக் கிறிஸ்தவர்கள் குருடாராயிருப் பதாக நான் எண்ணவில்லை. அவர்கள் “ கிட்டப் பார்வை'' உள்ள வர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கிட்டப் பார்வையுள்ளவர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர்களால் கண்ணுறத்தக்கது அவர்களுடைய பெரிய பெரிய ஆலயக் கட்டிடங்கள் தாம் அவர் களால் பார்க்க முடிந்தது எல்லாம் பெருந்திருள் வட்டமான அவர் களுடைய சபையாரேயாகும். அவர்களால் நோக்க முடிந்திருக்கிற ஒரே காரியம் அவர்களுடைய பெரிய அங்கிகளை யணிந்த, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அவர்தம் பாடகர்குழு மட்டுமே. அவர்கள் கிட்டப்பார்வை எனும் நோய் பிடித்தவர்கள் என்று எண்ணு கிறேன். அவர்களால் தங்களது மூக்குக்கு மேலாக பார்வையை செலுத்த முடியாது. அவர்கள் குருடர் என்று நான் எண்ணவில்லை, அவர்கள் கிட்டப்பார்வை எனும் நோயுடைவர்கள்.... அவர்களால் மேற்சொன்ன காரியங்களைத் தவிர அதற்கு மேல் நோக்கிட முடியாதவர்களாய் இருக்கிறார்கள். ''உங்களுக்குத் தெரியுமா? நாங்கள் இன்ன இன்ன ஸ்தாபனத்தைச் சார்ந்தவர்கள்'' என்று பெருமையடித்துக்கொள்கிறார்கள். அவர் தம் பெரிய ஸ்தாபனங்கள், அவர் தம் பெரிய கூட்டம். அநேக உறுப்பினர்கள் எண்ணிக்கை, அவர் தம் ஞாயிறு பள்ளி, அவர்களுடைய அருமையான கட்டிடங்கள், இவை தான் அவர்களுடைய நோக்கம். 87''அவர்களுக்கு பரிசுத்த அவி தேவையாயிருக்கிறது'' என்று இயேசு கூறினார். அவர்களுக்கு பரிசுத்த ஆவி தேவைப்படுகிறது. எனவே கர்த்தர் அவர்களுக்கு கூறினார். ''உங்களுடைய கண் பார்வை மிகவும் மோசமாயிருக்கிறது. நீங்கள் கிட்டப்பார்வை நோய் உடையவர்களாய் இருப்பதால், உங்களால், உங்களுடைய பெரிய கட்டிடங்கள், பெரிய அருமையான பெருந்திரளான சபை யார், நகரத்து மேயர் உங்கள் சபைக்கு வருவது, மற்றும் உங்களுடைய கொண்டாட்டங்கள் ஆகியவைகளைத் தவிர வேறு எதையும் உங்களால் நோக்க முடிவதில்லை. நீங்கள் என்னை மறந்தீர்கள்... ஆனால், நீங்கள் அந்த அளவுக்கு குருடாயிருந்தால், உங்களுடைய கண்கள் அந்த அளவுக்கு நோயுற்று இருந்தால், நான் உங்களுக்கு கண்களுக்குப் போடும் கலிக்கத்தை விற்பேன்... (ஆம்). பாருங்கள், வேதசாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இந்த வேத பண்டிதர்கள் கொஞ்சம் கூட அதைப் பெற்றிருக்கவில்லை என்பது விசித்தரமாயுள்ளது. அவ்வாறு இல்லையா? அவர்களுக்கு ஏராளமான வாசனைத் திரவியம் உள்ளது. எராளமான மதக் கோட்பாடுகள் அவர்களிடம் உண்டு. ஆனால் அவர்கள் கண்களுக்குப் போடக்கலிக்கம் தேவையாயிருக்கிறது. அவர்கள் கர்த்தருடைய வருகையை கண்ணோக்குவதற்காகவும், வேதாக மத்தை சரியாக கண்டு கொள்ளவும். வார்த்தையை நோக்கிப் பார்ப்பதற்கு இயலும் படியாகவும், அவர்களுக்கு தேவனுடைய பரிசுத்த ஆவியாகிய கண்களுக்குப் போடும் கலிக்கம் தேவைப் படுகிறது. “ஆமென்'' என்பதை எவ்வாறு உச்சரிக்க வேண்டு மென்றெல்லாம் அவர்கள் சரியாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் இவ்விதமான எல்லாவிதமான வாசனைத் திரவியமும் பரிமள தைலமும் உண்டு. ஆனால், அவர்கள் கண்களுக்கோ கலிக்கம் தேவைப்படுகிறது என்று வேதம் கூறுகிறது (கலிக்கம் என்பது ஒரு நோய் தீர்க்கும் மருந்து - மொழி பெயர்ப்பாளர்) ''உன் கண்களுக்குப் போடும்படி உனக்கு சிறிது கலிக்கம் தேவைப் படுகிறது. அதைப் போட்டால், அது பார்வையற்று இருக்கும் உன் கண்களை பார்வையடையச் செய்யும்'' என்று வேதம் கூறுகிறது. 88நான் இப்போது கூறப்போகும் விஷயத்தை ஏற்கெனவே சபையில் கூறியிருக்கக் கூடும் என்று நான் எண்ணுகிறேன். இப்பொழுது அவ்விஷயம் மீண்டும் என் மனதில் வருகிறது. நான் சிறிது காலம் கெண்டக்கியிலுள்ள மலைப்பகுதியில் வளர்க்கப் பட்டேன். நாங்கள் அங்கே மெல்லிய மரப்பலகைகளால் ஆன பழைய வீட்டில் தான் வசித்து வந்தோம். அச்சிறிய வீட்டில் ஒரு பழைய மச்சு ஒன்று உண்டாயிருந்தது. அங்கே வைக்கோலினால் ஆன மெத்தை ஒன்று இருந்தது. அந்த வைக்கோல் மெத்தையின் மேல் சிறகினால் ஆன மேலுறை இருக்கும். சிறகினால் தயாரிக் கப்பட்ட மேலுறை கொண்ட வைக்கோல் மெத்தை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, அது எனக்குத் தெரியாது. அது ஒரு பழைய மெத்தை, நாங்கள் மிகவும் ஏழைகளாக இருந்தோம். அப்பாவும் அம்மாவும் கீழ்தளத்தில் கட்டில் போட்டுபடுத்துகொள்வார்கள். நாங்களோ ஒரு சிறிய ஏணியின் உதவியினால் அந்த மேல் மச்சுக்கு ஏறிப்போய் படுத்துக் கொள்வோம் எங்கள் தாயார் கூரையை மூடிக்கொள்வதற்காக கான்வாஸ் துணி ஒன்றைத் தருவார்கள். நாங்கள் அந்த மேல் மச்சில் படுத்திருக்கையில், பலகையினால் ஆன அக்கூரையில் இருக்கும் பெருந்துளைகள் வழியாக தெரியும் நிலவொளி நன்கு படும். அங்கே இரவில் மின்னும் நட்சத்திரங்களைக் கூட எண்ணிடலாம். அந்தவிதமாக அக்கூரையானது அமைந்திருந்தது. 89எனவே, பனியோ, மழையோ பொழியும்போது, சிறுபிள்ளை களாகிய நாங்கள் மேல் மச்சில் படுத்திருக்கையில், நனைந்து விடாமலிருக்க என் தாயார் கொடுக்கும் அந்த கான்வாஸ் துணி, உதவுகிறதாயிருக்கும். நாங்கள் அக்கான்வாஸ் துணியின் கீழாக மூடப்பட்டு இருப்பதால், பனி மழை இவற்றால் நனைந்துவிடாமல் இருப்போம். சில வேளைகளில் கூரையிலுள்ள அத்துளைகளின் வழியாக அடிக்கும் காற்றினால், எங்களுக்கு ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும், அப்பொழுது எங்களது கண்களில் சீழ்பிடித்துக் கொள்ளும். அந்த ஜலதோஷத்தினால் கண்களும் பாதிக்கப்படும். கண்கள் அடைத்துக் கொண்டு திறக்க முடியாதபடி இருக்கும். எனவே எங்களது அன்னை கீழே வந்து விடும்படி எங்களை அழைப் பார்கள். அப்பொழுது, நான், அம்மா என்னால் வர முடியாது. ஏனெனில் என் கண்களெல்லாம் பனியினால் சீழ் அடைத்துக் கொண்டு திறக்க முடியாதபடி உள்ளது'' என்று கூறுவேன். பனியானது கண்களை பாதிப்பதால், இவ்வாறு இருக்கும். கண்களைத் திறக்கக் கூட முடியாது. என்னோடு ஒரு சிறிய தம்பியும், ஹம்பியும் இருப்பார்கள். அவர்களும் தங்கள் கண்களை திறக்க முடியாதபடி இருக்கையில், திறக்க முயற்சி செய்வார்கள். ஆனால் இயலாது போகும். எனது தாத்தா கண்ணி வைத்து மிருகங்களை பிடிப்பதில், அதாவது மரம் ஏறும் ரேக்கூன்களைப் பிடிப்பதில் வல்லவர். அம்மிருகத்தின் கொழுப்பானது ஒரு நல்ல சர்வ ரோக நிவாரணி யாக எங்கள் வீட்டில் உபயோகிக்கப்பட்டது. அம்மிருகக் கொழுப்பைப் கொண்டு, எங்களது காலணிகளைக் கூட பாலிஷ் செய்துகொண்டோம். கொடிய இருமலோடு கூடிய குழந்தைகளில் காற்றுக் குழல் அழற்றி நோய் ஏற்பட்டால், அந்த மிருகக் கொழுப் பில் சிறிது டர்பன்டைனை கலந்து, சிறிது விழுங்க வேண்டும். அது அந்நோயைக் குணமாக்கும். 90இவ்வாறு பனியினால் எங்களது கண்கள் சீழ்பிடித்து அடைத் துக் கொண்டு விட்டால், அப்பொழுது எங்களது தாயார் இந்த கொழுப்பை எடுத்து... “ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளே, என்று சமையல் அறைக்கு ஓடிச் சென்று, அங்கே அந்த பழைய கோப்பையில் வைக்கப்பட்டிருக்கும் அந்த கூன் என்ற மரமேறும் அம்மிருகத்தின் கொழுப்பை எடுத்து அதை நன்கு சூடுபடுத்தி எடுத்துக்கொண்டு மேலே வந்து, அதை எங்கள் கண்களில், கண் திறக்கிற வரையிலும், தடவிக் கொண்டேயிருப் பார்கள். சிறிது நேரம் கழித்து என் கண்கள் திறந்து, என்னால் அப்பொழுது பார்க்க முடியும். ஆகவே, அவ்வாறு கண்கள் அடைத்துக் கொண்டு விட்டால், கூன் என்ற அந்த மிருகத்தின் கொழுப்பானது கண்களைத் திறப்பதற்கு உதவுகிற மருந்தாக இருக்கும். நமக்கு மிகவும் மோசமான குளிர்ந்த காற்று உண்டாயிருந் தது என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பாருங்கள்? தேசத்தில் மிகவும் மோசமான குளிர்க்காற்று வீசிக் கொண்டிருக் கிறது. பாப்டிஸ்ட்டுகள், 'அற்புதங்களின் நாட்கள் கடந்து சென்று விட்டன. பரிசுத்த ஆவி என்ற ஒன்று கிடையாது. அந்நிய பாஷைகளில் பேசுதலும் இல்லை. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் என்பது கிடையாது'' என்று கூறு கிறார்கள். ஓ, இவ்விதமான எல்லாவிதமான வாடைக் காற்று களெல்லாம் வீசிக் கொண்டிருப்பதால், அது தானே ஆவிக்குரிய குளிர்ந்த நிலையில், அநேகம் கண்களை குருடாக்கி போட்டுவிட்டது. இந்தவிதமான கண் அடைத்துப்போன நிலைக்கு கூன் என்ற அம்மிருகத்தின் கொழுப்பைவிட மேலான ஒரு மருந்தே தேவைப் படுகிறது. அவர்களுடைய கண்களைத் திறப்பதற்கு, சகோதரனே! அவ்விதமான குருட்டுத்தனத்தை குணமாக்க சுத்தமான பரிசுத்த ஆவியின் அபிஷேகமே தேவைப்படுகிறது பரிசுத்த ஆவியின் அபிஷேகமானது அடைத்து இருக்கிற உங்கள் கண்களில் மேல் தடவப்பட்டு, அதைச் சுத்தமாக்கி, உங்கள் கண்களிலிருந்து கிட்டப்பார்வையை உங்களிலிருந்து எடுத்துப் போட்டு, அதினால் தேவனுடைய வார்த்தையே சத்தியமாயிருக்கிறது என்பதைக் காண உங்களுக்கு உதவும். அதுதான் சரி “என்னிடத்திலிருந்து கண் களுக்கு கலிக்கம் வாங்கிக்கொள் என்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்'' என்று கூறுகிறார். உங்கள் கண்களில் பூசப்பட்டு அதினால் உங்களைக் காணச் செய்வது பரிசுத்த ஆவியின் அபிஷேகம்தான். 91வேத பண்டிதர்கள், தங்களுடைய சொந்த மதக் கோட் பாட்டை உடையவர்களாய் இருக்கிறார்கள். அவர்களிடம் அவர் களுடைய கொள்கைகள், உபதேசங்கள் ஆகிய வாசனை திரவியங் களும் மற்றும் இன்னபிறவும் உள்ளன. ஆனால் அவை போதாது, அவர்களைப் பார்வையடையச் செய்ய. பரலோக வல்லமைகள் கிரியை செய்வதைக் காண்பதற்குரிய ஆவிக்குரிய தரிசனத்தை அடைய அவர்களுக்கு பரிசுத்த ஆவி தேவைப்படுகிறது. பரிசுத்த ஆவிதான், கண்களுக்குப் போட வேண்டிய கலிக்கமாகும். கலிக்கம் என்பது ஒரு சூடாக்கப்பட்ட எண்ணெய் ஆகும் என்பதை நாம் அறிவோம். எனவே பரிசுத்த ஆவி தேவனுடைய எண் ணெயாக இருக்கிறது. 'ஓ, பிரிய சகோதரனே, நீ சரியாகத்தான் இருக்கிறாய் உன்னிடம் எந்த குறையும் இல்லை. எல்லாம் சரியாகத்தான் இருக் கிறது. நமது நகரத்திலேயே, எல்லாவற்றைவிட பெரிய ஆலயம் நமது சபைக்குத் தான் உள்ளது'' என்று கூறுகிறார்கள். இவ்வாறான சமயக் கோட்பாடுகளும், கவர்ச்சியான வாசனை திரவியங்களும் அவர்களிடம் உள்ளன. இவ்வித வாசனை திரவியம் ஒன்றுக்கும் உதவாது. இல்லை. அது உன்னை கிட்டப்பார்வை உடையவனாக, அருகில் உள்ளவைகளை மட்டும் காணக் கூடியவனாக ஆக்கும். அதினால், “ஆம், எங்கள் ஆலயக் கட்டிடம் தான் இருப்பதிலேயே மிகப் பெரியது'' என்று கூறுவீர்கள். ஆனால் லவோதிக்கேயா சபைக்காலத்தின் சபை அங்கத்தினர்களே, வரப்போகும் நியாயத்தீர்ப்பில் தேவன் உங்களை கணக்கொப்புவிக்கக் கேட்பாரே, அதைப்பற்றி என்ன? 92நான் இங்குள்ளவர்களுக்காக மட்டும் பேசவில்லை. எனது பேச்சு ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு, உலக முழுவதிலும் போய்க்கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான மக்களோடு இந்த வேளையில் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை கவனியுங்கள். ஆகவே, இவ்வாறான நிலையில் தான் லவோதிக்கேயா உள்ளது. அது அனலுமின்றி, குளிருமின்றி வெதுவெதுப்பாய் பின் மாறினதாகவும், கிட்டப்பார்வையுள்ளதாகவும் இருக்கிறது. இன்னும் வேறென்னதாக உள்ளதோ, நான் அறியேன். ஒரு கோவேறு கழுதையானது இனகலப்பு செய்யப்பட்டு பிறந்த ஒன்றாகும். சொல்லப்போனால், அதற்கு முதலில், செயல்படு வதற்குரிய பொது அறிவு என்பதே கிடையாது. அதனிடம் நீங்கள் பேசி பாருங்கள். அது தனது பெரிய காதுகளை உயர்த்திக் கொண்டு, “ஹா ஹா ஹா'' என்று கத்தும். அதனிடம் தயவு என்பதே கிடையாது. அது இனக்கலப்பினால் பிறந்த ஒன்றாகும். அது குதிரைக்கும் கழுதைக்கும் இடையே உள்ள பிறவியாகும். அதுதான் இப்பொழுது உள்ள காரியமாக இருக்கிறது. நீங்கள் நிக்கொலாய் மதஸ்தினரையும், லவோதிக்கேயரையும் ஒன்றாக சேர்த்து வைத்தால் உங்களுக்கு மீண்டும் ஒரு கழுதை தான் கிடைக்கும். நமக்குத் தேவையானது என்ன? அவர்களுக்கு தாங்கள் அப்படியிருக்கிறோம் என்பதே தெரியாது. அவ்வாறு தான் உள்ளது. அவர்களிடம் நீங்கள் தெய்வீக சுகமளித்தலைக் குறித்தும், இயேசுவின் நாமத்தினால் உள்ள ஞானஸ்நானத்தையும் குறித்து கூறுங்கள், அதற்கு அவர்கள், ”ஹா ஹா, என்னுடைய மேய்ப்பர் அவ்வாறு கூறவில்லை. ஹா ஹா! நாங்கள் அதை விசுவாசிக்கிற தில்லை. நாங்கள் ப்ரெஸ்பிடேரியன்கள்'' என்பார்கள். அவர்கள் அறிவிலிகள்! அவ்வாறு தான் அவர்களை நீங்கள் அழைக்க முடியும். அவர்கள் என்னவாயிருக்கிறார்கள்? நான் ஒரு கோவேறு கழுதையை வெறுக்கிறேன். ஒரு நல்ல, உயர்ந்த இனத்தில் பிறந்து வந்துள்ள குதிரையை நான் விரும்புகிறேன். அதற்கு நீங்கள் எதையாவது சொல்லிக் கொடுக்க முடியும். அதற்கு நீங்கள் பணிந்து அடங்குவதைக் குறித்துப் போதிக்க முடியும். அதை நீங்கள் அரங்கத்தில் கொண்டு செல்ல முடியும். ஏறத்தாழ மனிதனால் செய்யத்தக்கவைகளையெல்லாம் செய்யும்படி கற்பிக்க முடியும். ஏனெனில் அது ... அதற்கு சொன்னால் புரியும். அதற்கு வம்ச அட்டவணை உண்டு. ஆனால் ஒரு கோவேறு கழுதைக்கோ தனது தந்தை யார், தாயார் யார் என்பதே தேரியாது. அதனால் தன்னையே இனப்பெருக்கம் செய்ய இயலாது. அதைப்போலத்தான் இந்த சில பழைய, குளிர்ந்து போன சடங்காச்சார ஸ்தாபனங்ககளின் நிலைமையும் இருக்கிறது. அவர்களால் மீண்டும் எழும்ப முடியாது. ஆவிக்குரிய இன விருத்தி செய்ய முடியாது. சபையானது மரித்ததாய் உள்ளது. எனவேதான் அது ஸ்தபானமாக மாறிவிடுகிறது. அது மீண்டும் எழும்பவே எழும்பாது. அது என்னவாயிருக்கிறது? அது வித்துக் கலப்படத்தினால் பிறந்த கலப்பட மார்க்கமாகும். 93மார்ட்டின் லூத்தர் சரியாகத்தான் இருந்தார். ஆனால் அவர் ஸ்தாபனமாக அதை ஆக்கியபொழுது என்ன செய்தார்? மெதோ டிஸ்ட் சரியாகத் தான் இருந்தது. ஆனால் அதை மத ஸ்தாபனமாக ஆக்கியபொழுது அவர் என்ன செய்தார்? பெந்தெகொஸ்தேயும் சரியாகத்தான் இருந்தது. ஆனால் நீங்களும் ஸ்தாபனமாக ஆன பொழுது என்ன ஆனீர்கள்? நீங்கள் அதை இனக்கலப்படம் செய்துவிட்டீர்கள். அதை நிக்கொலாய் மதப் போதகத்தைக் கைக் கொள்ளும் கத்தோலிக்க ஸ்தாபனத்தால் கருவுறச்செய்தீர்கள். நீங்கள் சரியாக அக்காரியத்தைதான் செய்தீர்கள். அவளது முறை மையின்படியான ஞானஸ்நானத்தையும், அவளது வழிகளையும், செயல்களையும் பின்பற்றினீர்கள். “நீங்கள் ஒரு வேசியின் மகள், அதனால் நீங்களும் ஒரு வேசி. ஒரு வேசியின் மகள்'' என்று வேதம் கூறுகிறது. அது சரியாக அப்படித்தான் இருக்கிறது. 94ஒரு நல்ல ஜாதி குதிரையானது, உயர்ந்த தன்மையுள்ளதாக எக்காலத்திலும் இருக்கிறது. ஓ, அது நல்லதாக இருக்கிறது. நான் அதை விரும்புகிறேன். அது உங்களது தோள்களின் மேல் தலையை வைக்கும், அன்புள்ளதாகவும் பண்புள்ளதாகவும் இருக்கிறது. ஏன்? தனது தகப்பன் யார், தனது தாத்தா யார் என்பதையும், தன் தாத்தாவின் தந்தை யார் என்பதையும் அறிந்திருக்கிறது. தனது வம்சத்தில் உள்ள முன்னோர்களை, வம்ச அட்டவணையை அறிந் ததாக, உடையதாக அது இருக்கிறது. அதே போல் தான், உண்மையான, தான் தோன்றிய வம்சா வளியை அறிந்திருக்கிற கிறிஸ்தவனை நான் காண விரும்புகிறேன். கடந்த வாரத்தில் மெதோடிஸ்ட்டிலும், இந்த வாரம் பாப்டிஸ்ட்டி லும், அடுத்த வாரத்தில் பெந்தெகொஸ்தேயிலும், அதற்கடுத்த வாரம் யாத்திரைப் பரிசுத்த சபையிலுமாக தடுமாறிக் கொண்டே யிருக்கிறவனையல்ல. அவனுக்கு தனது தந்தை யார், தாயார் யார் என்பது தெரியாது. ஆனால், தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒரு மனுஷன், தன் முன்னோர்களின் வம்சாவழியைச் சொல்லும் படியாக அவன் உங்களை பெந்தெகொஸ்தே நாளுக்கு அழைத்துச் செல்ல முடியும் என்பதை நான் உங்களுக்கு கூறட்டும். அவன், தான் வழித் தோன்றிய தனது வம்சாவழியை, அதன் அட்ட வணையே உடையவனாக, பெந்தெகொஸ்தேகாரனாக இருப்பான். ஆமென். நான் எனது தலை முதல் பாதங்களின் அடிப்பாகம் வரையிலும் முழுவதுமாக பெந்தெகொஸ்தேகாரனாக இருக்கிறேன். நான் ஸ்தாபனமாக ஆகியுள்ள பெந்தெகொஸ்தேயை அர்த்தப்படுத்திக் கூறவில்லை. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் உண்மையான வல்லமையை, மெய்யான பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தைப் பற்றியே குறிப்பிடுகிறேன். கண்களுக்குப் போடும் கலிக்கம்-அது உங்கள் கண்களைத் திறக்கிறது. அதினால் நீங்கள், அது எங்கிருந்து வருகிறது என்பதை பின்னோக்கி சரியாக அறிந்துகொள்ள முடியும். இன்றைக்கு இருக் கிற சபையையே நீங்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அது எங்கிருந்து வருகிறது என்பதை நன்கு பின்னோக்கிப் பார்க்க வேண்டும். பின்பு, தேவனை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டேயிருங்கள். அப்பொழுது நீங்கள் இந்த ஸ்தாபனத்தை விட்டு விலகிச் செல்வீர்கள். ஆம், ஐயா. 95''அவர்கள் நிர்வாணிகளாயிருகிறார்கள்'' இன்னொரு காரியத்தை நான் கவனித்தேன். ''... நிர்வாணிகளாயிருக்கிறார்கள், ஆனால் அதை அறியவில்லை ...'' (நிச்சயமாக அப்படித்தான்). ஓ, நிர்வாணிகளாயிருந்தும் அதை அறியாமல் இருப்பார்க ளாம். ஒரு மனிதன் நிர்பாக்கியமுள்ளவனும், குருடனாயும், பரித பிக்கப்படத்தக்கவனும், நிர்வாணியுமாயும் இருந்தால், அவன் பரிதாபமான நிலையில் இருக்கிறவனாயிருப்பான். ஆனால் தான் இருக்கும் இவ்விதமான நிலையை அவன் அறிந்தவனாயிந்தால், அப்பொழுது அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தன்னை சரி செய்து கொள்ளுவான். ஆனால் அவனோ தனது நிலையைதானே அறியாதவனாயிருந்தால், இந்த பரிதாபத்திற்குரிய நபர், புத்தி சுவாதீனத்தையே இழந்துவிட்டான் என்றாகிவிடுகிறது. அது சரிதானே? வியூ! அவ்வாறு கூறுவது கடுமையான ஒன்றாக இருக் கிறது. அவன் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள இயலாதபடி தன் புத்தி சுவாதீனத்தையே இழந்து விட்டான். 96தெருவில் ஒருவன் நடந்து கொண்டிருக்கிறதை நீங்கள் காண்கையில், அவன் தரித்திரனாயும், பரிதபிக்கப்படத்தக்கவனாயும், குருடனாயும், நிர்பாக்கியமுள்ளவனாயும், நிர்வாணியுமாயும் இருக்கக்கண்டால், “சகோதரனே, நீ நிர்வாணியாயிருக்கிறாய்'' என்று நீங்கள் கூறினால், அப்பொழுது அவன், ”ஓ, நான் அப்படி யாயிருக்கிறேன்? ஓ, சகோதரனே, எந்த வகையிலாவது எனக்கு உதவி செய்து, நான் துணி உடுத்திக் கொள்ள எனக்கு வழி செய்யும்'' என்று கேட்பான். ஆனால், நீங்கள் அவர்களிடம் நடந்து சென்று, “நீங்கள் விசுவாசிகளான பிறகு, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்று கேளுங்கள். “நீ யார், உருளும் பரிசுத்தனா?' நீ என்னத்தைக் குறிப்பிடு கிறாய்? நான் ஒரு ப்ரெஸ்பிடேரியன், நான் ஒரு பாப்டிஸ்ட், நான் இன்னான் இன்னான், ஆகவே என்னிடம் இவ்வாறெல்லாம் பேசாதே'' என்று கூறுவர். இவர்கள் நிர்வாணிகளாயும் இருப்பதோடு, அதை அறி யாமலேயிருக்கிறார்கள். நான் இவ்வாறு கூறவில்லை. வேதமே இக்காலத்தைப் பற்றி கூறுகையில், ''நீ நிர்வாணம் தோன்றாதபடி, வஸ்திரங்களை வாங்கிக்கொள்'' என்று கூறுகிறார். 'வெண் வஸ்திரம்'' என்று அவர் கூறினார். ''... வெண் வஸ்திரம்...'' (அது பரிசுத்தவான்களுக்கு உரியது, அது பரிசுத்தவான்களுடைய நீதியைக் குறிக்கிறது). நிர்வாணியா? ஓ நிச்சயமாக அப்படித்தான் இருக்கிறார்கள். ஆம், ஐயா! ''சகோ. பிரன்ஹாமே, இது எங்களுடைய சபையைக் குறித்துக் கூறப்பட்டதல்ல. இந்நகரத்திலேயே மிகவும் சிறப்பாக உடுத்திருப்பது நாங்கள் தான்'' என்று ஒரு வேளை நீங்கள் கூறலாம். அதைப் பற்றி எனக்கு ஐயம் இல்லை; நிச்சயமாக நீங்கள் உடுத்துவ தெல்லாம், புதிய பேஷன்களும், நேர்த்தியாக வெட்டியெடுக் கப்பட்ட துணிகளும், ஹாலிவுட் நட்சத்திரங்கள் லேட்டஸ்ட்டாக உடுத்துவதுமான மிகவும் கீழ்த்தரமான பால் உணர்வுகளைத் தூண்டத்தக்கதான, தெருவில் போகும் ஒவ்வொரு மனிதனையும் கவர்ந்திருழுக்கச் செய்வதுமான ஆடைகள் தான். சந்தேகமில்லை. ஊ-°. நிச்சயமாக அப்படித்தான் நீங்கள் உடுத்துகிறீர்கள். 97ஒரு பெண்மணி என்னிடம், ''சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? கடைகளில் இவ்வாடைகளைத் தான் விற்கிறார்கள், அதைத்தான் நாங்கள் வாங்க வேண்டியுள்ளது'' என்று கூறினார். அதற்கு நான், 'அவர்கள் இன்னும் துணிகளை விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். தையல் இயந்திரங்களையும் உற் பத்தி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அது ஒரு சரியான காரணம் அல்ல, வெறும் சாக்குப் போக்குத்தான் இது'' என்றேன். 98“ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடு விபசாரம் செய்தாயிற்று'' என்று வேதம் கூறுகிறது. அது சரி தானே? நல்லது, அப்படியாயின், ஸ்திரீயானவள் பால் உணர்வு களைத் தூண்டத்தக்கதாக உடையுடுத்திக் கொண்டு, ஒரு மனிதனுக்கு முன்னால் தன்னை நிறுத்திக் கொள்வாளென்றால், இப்பொழுது யார்மேல் குற்றம் விழுகிறது? அப்பாவத்தை பிறப்பிக்க காரணமானது அந்த ஸ்திரீ தான். அது தான் சரி. நீங்கள் உங்கள் கணவருக்கு லீலி புஷ்பத்தைப் போல் சுத்த மானவராக இருக்கக் கூடும். உங்கள் வாழ்க்கையில் பிழையே செய்யாத இளம் பெண்ணாக இருக்கக் கூடும். உங்கள் கணவரை மணந்து கொள்ளுகையில், ஒரு சுத்தமான கன்னியாக கூட இருந் திருக்கக் கூடும். ஆனால், நீங்கள் இவ்விதமான உடையுடுத்திக் கொண்டால், அதினால் மனிதர்கள் உங்களை இச்சையோடு உற்று நோக்கிடச் செய்திட்டால், அவன் ஏற்கனவே உங்களோடு தன் இருதயத்தில் விபச்சாரம் செய்தாயிற்று. அந்தப் பாவி, இச்சை யோடு உங்களை உற்று நோக்கினான். ஒரு கிறிஸ்தவள் என்ற முறை யில், நகரத்திலேயே மிகவும் சிறப்பாக வெட்டப்பட்ட துணியை உடையவராக நீங்கள் இருக்கலாம், சிறந்த கம்பளித் துணிகள் வாங்கியிருக்கக் கூடும். ஆனால் ஒரு தேவனுடைய பரிசுத்த வாட்டிக்கு அவ்வாறு உடுத்துவது அழகல்ல. (ஒலிநாடாவில் காலியிடம்-ஆசி). ஓ, ஆம். இவ்வாறு இருந்தால், நீங்கள் ஒரு தேவ பிள்ளையாக இருக்க முடியாது. ''ஓ, இல்லை'' என்று அவர்கள் கூறுகிறார்கள். நல்லது, அவர்கள், ''எங்கள் சபை...'' என்று கூறுகிறார்கள். நீங்கள் சிறப்பாக உடையுடுத்தியிருக்கிறோம் என்கிறீர்களா? அவ்வாறு இருப்பதாக அவர்கள் கூறினார்கள். அவர்கள், ''ஐசுவரியவான்களும், ஒரு குறையுமில்லை'' என்றும் இருக்கிறார்கள். நிச்சயம் அப்படித்தான். “எங்களுடைய போதகர் ஒரு பெரிய அங்கி யணிந்து வெளியே செல்லுகிறார், சபையின் பாடகர் குழுவும் கூட பெரிய அங்கிகளை அணிந்துள்ளனர்'' என்று கூறுகின்றனர். அதற்குக் கீழாக பிசாசு ஒளிந்திருக்கிறான். உ-ஊ, உ-ஊ. அவ்வாறுதான் உள்ளது. அதை நான் மேற்கொண்டும் சொல்லாமல் விட்டுவிடுவது நல்லது. ஆனால் சகோதரனே... சரி. 99ஓ, இந்த அவர்களுடைய பெரிய காரியங்கள்! அங்கியணிந் துள்ள பாடகர் குழுக்கள், கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ள பாடகர் குழுக்கள்; இவர்களுக்கு பாடுவதற்கு பணம் கொடுக்க வேண்டும். பிரசங்கியாருக்கு நல்ல தொகை கொடுக்க வேண்டும். பிரசங்கி யாருக்கு நல்ல தொகை கொடுக்க வேண்டும், அவ்வாறு கொடுக் காவிடில், அதைவிட கூடுதலாக அவருக்கு பணம் கிடைக்கும் பொறுப்பை அவர் தெரிந்து கொண்டு விடுவார். அவர் அறங் காவலர்கள் குழுவை கூடிவரச் செய்து, '' சகோதரரே, இங்கே நீங்கள் இதுவரையிலும் என்னிடம் மிகவும் தயவு காட்டி வந்தீர்கள், நீங்கள் வாரத்திற்கு இத்தனை நூறு டாலர்கள் எனக்கு கொடுத்து வந்தீர்கள். ஆனால் அந்த மற்ற ப்ரெஸ்பிடேரியன் சபையோ, அல்லது பெந்தெகொஸ்தே சபையோ, அல்லது வேறு எந்த சபையோ, எனக்கு இன்னும் கூடுதலாக இத்தனை டாலர்கள் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்'' என்று கூறுவார். நிலைமை அவ்வாறு இருந்தால் ஏழையான பரிசுத்தவானுக்கு அங்கே என்ன இருக்கிறது? அவர்களுக்கு என்ன வாய்ப்பு உள்ளது? அந்தப் பிரசங்கியார் எதிர்பார்க்கிற அளவுக்கு கவர்ச்சிகரமான ஊதியத்தை அவருக்கு கொடுக்க அவர்கள் சக்தி படைத்தவர்கள் அல்ல. எனவே, கர்த்தர், அவ்வாறான சூழ்நிலையில், உங்களுக் கென ஒன்றை எழுப்புகிறார், ஆமென். அதுதானே அவரது சொந்தக் கரத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிரப்பப் பட்ட ஒன்றாகவும், அவரே அதின் மேல் கண்காணியாக இருக்கக் கூடியதாகவும் உள்ளது. ''என்னிடம் வெண் வஸ்திரத்தை வாங்கிக் கொள் என்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்'' என்று அவர் கூறுகிறார். “வெண் வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதியே'' என்று வேதம் கூறுகிறது. 100நாம் இப்பொழுது 19ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். 20ம் வசனத்தை நாம் பார்த்தோம் என்று நான் நம்புகிறேன். அதில் மிகச் சிறப்பான காரியத்தை நான் காண்கிறேன். ஆம், இவ் வசனங்களோடு இது முடிவடைகிறது. இதை நாம் ஆராய்கையில், மிகவும் அமைதியாக இருந்து இதை மிகவும் கவனித்துக் கேளுங்கள். கேளுங்கள்! “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான். நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளு கிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படி அருள்செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார். வெளி. 3:20-22 101புதிய ஏற்பாட்டில் உரைக்கப்பட்டவைகளிலேயே நான் கண்ட தலைசிறந்த வார்த்தைகளில் ஒன்று தான் இதுவாகும். ''இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்'' என்ற வசனத்தை நீங்கள் நன்கு கவனிக்கும்படி நான் விரும்புகிறேன். பாவிகள் மனந்திரும்புவதற்காக விடுக்கப்படும் அழைப்புக்காக பொதுவாக இவ்வசனமானது உபயோகிக்கப்படுவது. அப்படித்தானே? நாம் பாவிகளிடம், “இயேசு வாசற்படியில் நின்று கதவைத் தட்டு கிறார்'' என்று கூறுகிறோம். ஆனால் இங்கோ அவர் சபையின் வாசற்படியில் நின்று அதின் கதவைத் தட்டுகிறார். ஏனெனில் அவர் ஒரு காலத்தில் அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் களோ, தங்களது சடங்காச்சார ஸ்தாபன முறைமையினாலும், லௌகீகத்தினாலும், குளிர்ந்து போய்விட்ட நிலையிலும், அவரை வெளியேற்றிவிட்டார்கள். அவர் இப்பொழுது சபையின் புறம்பே இருக்கிறார். நாம் இப்பொழுது முடிக்கப் போகிற வேளையில், சபைக் காலங்களின் துவக்கத்தில் அவர் ஏழு பொன் குத்துவிளக்குகளின் நடுவில் உலாவிக் கொண்டிருந்தார் என்பதை நினைவில் கொள்ளுங் கள். இங்கே முடிவுக் கட்டத்தில், அவர் எந்த சபைக்கு வெளியே நிற்பதாக நாம் காண்கிறோம்? லவோதிக்கேயா சபைக்கு வெளியே. புறம்பே இருக்கிறார், அவர்கள் அவரை புறம்பாக்கிப் போட்டுவிட்டார்கள். ஏன்? அவர் வெளியே நின்று கொண்டிருக் கிறார். என்னே ஒரு பரிதாபமானதொரு காட்சியாக இது இருக் கிறது! தனது சொந்த இரத்தத்தால் கிரயத்திற்குக் கொண்ட தன் சபைக்கு வெளியே உலகின் இரட்சகரானவர் நின்று கொண்டிருக் கிறார். அவர்கள் மேல் இது வெட்கக்கேடாக இருக்கிறது! 102“நான் வாசற்படியிலே நின்று கதவைத் தட்டுகிறேன்''. அவர் தாம் வெளியே தள்ளப்பட்ட பிறகு அல்லது புறம்பாக்கப் பட்ட பிறகு, மீண்டும் உள்ளே நுழைய முயன்று, அவர் நகர்ந்து வந்து, கதவைத் தட்டுகிறார். புதிய ஏற்பாட்டிலேயே மிகவும் குறிப் பிடத்தக்க ஒரு காரியமாக இது காணப்படுகிறது. லவோதிக்கேயா சபைக்காலத்தில், இவ்வுலகின் இரட்சகரானவர் தனது சொந்த சபையை விட்டு புறம்பாக்கப்பட்டு இருக்கக்கூடிய இதைப் போன்றதொரு வருந்ததக்க காரியம் வேறு ஒன்றும் இருக்க முடியாது என்று நான் கருதுகிறேன். அவர்கள் செய்திருக்கும் காரியத்தைப் பற்றி அவர்களுக்கு அவர் சொன்ன பிறகு, அவர்க ளுடைய ஐசுவரியத்தைப் பற்றியும், அவர்கள் எவ்வாறு உள்ளனர் என்பதைப் பற்றியும், அவர்கள் எவ்வாறு வெதுவெதுப்பா யுள்ளனர் என்பதைப் பற்றியும், என்பதைப் பற்றியும் அவர் அவர் களுக்கு கூறிய பிறகு, அவர்கள் அவரை... அவர் அவர்களை தம் வாயினின்று வாந்தி பண்ணிப்போட வேண்டிய தேயில்லை, அவர்கள் அவரை வாந்தி பண்ணிப்போட்டு விட்டனர். இப்படி யெல்லாம் நடந்த பிறகும்கூட அவர் இன்னமும் வாசற்படியில் நின்று கதவைத் தட்டி மீண்டும் உள்ளே புக முயன்று கொண்டு தான் இருக்கிறார். எதற்காக? அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பதற்காகத்தான். கல்வாரியில் அவரைக் கொன்றவர்களின் ஆத்துமாக்களைக்கூட இரட்சிக்கவே அவர் முயன்றார். என் வாழ்வில் நான் பார்த்ததிலேயே, நினைத்ததிலேயே மிகவும் ஒரு பரிதாபத்திற்குரிய காட்சியாக அது இருக்கிறது. 103புறம்பாக்கப்பட்டார்! அவர் எதிலிருந்து புறம்பாக்கப் பட்டார்? இப்பொழுது, சிநேகிதரே, கவனியுங்கள். இது மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருக்கிறதாக இல்லையா என்று பாருங்கள். அதைப் பற்றிய உண்மைத் தோற்றத்தை பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதியட்டும். நமது இரட்சகர், இப்பூவில் இருக்கையில், தனது சொந்த ஜனத் தாலேயே புறம்பாக்கப்பட்டார். அவர் புறக்கணிக்கப்பட்டார் அவர் வெளியே தள்ளப்பட்டார். உலகம் அவரை புறம்பாக்கி போட்டு சிலுவையில் அறைந்தது. இப்பொழுது அவரது சொந்த சபையை விட்டே அவர் புறம்பாக்கப்பட்டு விட்டார். அவரை எந்த இடத் திலும் ஏற்றுக்கொள்வாரில்லை. அவர் இப்பொழுது அவர்களுக்கு தேவையில்லை. அவர்களுக்கு ஒரு ஸ்தாபனம் கிடைத்து விட்டது. அவர்களுக்கு அவர் தேவையில்லை. அவர்களுக்கு ஒரு போப் இருக்கிறார். இனிமேல் அவர் எதற்கு அவர்களுக்கு தேவை? அவர்களுக்கு இப்பொழுது ஒரு ஆர்ச் பிஷப்பும், தலைமைக் கண்காணியும் உள்ளனர். ஆகவே இனிமேல் அவர்களுக்கு பரிசுத்த ஆவியினால் எந்த உபயோகமும் இல்லை. இனிமேல் அவர்களுக்கு பரிசுத்த ஆவி தேவையில்லை. கிறிஸ்துவாகிய பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு இனி தேவைப்படமாட்டார். எனவே அவர்களுடைய ... 104அவர்கள் எழுந்து நின்று அவரை வெளியே தூக்கி எறிந்து விட்டார்கள் என்று நான் நம்பவில்லை. ஏனெனில் அவர் சபையில் இல்லாததை அவர்கள் உணரவில்லை. அவர் இல்லாததை அவர்கள் உணரவில்லை. ஏனெனில், அவர்கள் இன்னமும் அரைப் போற்றி பாடல்கள் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது பிரசங்கியார் இன்னமும் அவரைப் பற்றி பிரசங்கித்துக் கொண்டு தான் இருக்கிறார். எனவே அவர் இல்லாததை அவர்கள் உணர வில்லை. ஆனால் அவர்கள் சொந்த லௌகீக ஜீவியமும், அவர்கள் ஸ்தாபனத்தை ஸ்தாபித்துக் கொண்டு, “அற்புதங்களின் காலம் கடந்து போய் விட்டது. இன்ன பிற காரியங்கள் ஒன்றும் இப்பொழுது இல்லை'' என்றும் கூறத்தலைப்பட்டுவிட்டார்கள். நான் உங்களை ஒன்று கேட்கிறேன். வரலாற்றாசிரியர்களே! இந்த சபைக்காலங்கள் நெடுகிலும், எந்த சமயத்திலாவது வந்திட்ட எந்தவொரு எழுப்புதலும், எப்பொழுதும் ஒரு ஸ்தாப னத்திற்கு வெளியே தான் நிகழ்ந்திருக்கிறது. எழுப்புதலை ஆரம் பித்த எந்தவொரு மனிதனும், அதை ஸ்தாபனங்களுக்கு வெளியே தான் ஆரம்பித்தான். எழுப்புதல் ஏற்பட்ட எந்தவொரு சந்தர்ப் பத்திலும் அவர்களுக்கு அற்புத அடையாளங்களும், அன்னிய பாஷைகளில் பேசுதலும், வியாதிஸ்தர் குணமடைதலும், மற்றும் இன்னபிற காரியங்களும் நிகழ்ந்தன. அவ்வெழுப்புதலை ஆரம் பித்த மனிதன் மரித்த உடனேயே, அவர்கள் அது ஒரு ஸ்தாபனமாக ஸ்தாபித்து, பிறகு மரித்த நிலையில் ஆகிவிட்டனர். அதன் பிறகு அதனோடு தேவன் ஒருபோதும் தன் சமயத்தை வீணடிக்கவில்லை. அது முற்றிலும் உண்மை . 105இங்கே அவர் கடைசி சபைக்காலத்தில் வாசலில் கதவுக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார். அவர் சர்வ வல்லமையுள்ள தேவனவர். அதைப் பற்றி எண்ணுகையில், அது என் இதயத்தை நொறுக்குகிறது. எனது கர்த்தர், தனது சொந்த சபைக்கு வெளியே, அவர்களது லௌகீகத்தினாலும், குளிர்ந்து போன நிலையினாலும், ஸ்தாபனத்தினாலும், அலட்சியத்தினாலும் புறம்பாக்கப்பட்ட பிறகு, வாசலில் நின்றுகொண்டு, மீண்டும் உள்ளே நுழைவதற்காக முயன்று கொண்டு, கதவைத் தட்டிக் கொண்டு நிற்கிறார். சற்று நேரத்திற்கு முன்பாக, நான் அதைப் பற்றி எண்ணிப் பார்க்கையில், நான் எனது மேஜையின் மேல் சாய்ந்து கதற ஆரம்பித்தேன். நான் நினைத்தேன்..... 106இயேசு அந்தப் பரிசேயனுடைய வீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்ததைப் பற்றி அடிக்கடி நான் எண்ணிப்பார்த்ததுண்டு. அங்கே அவரை யாரும் கவனிக்கவேயில்லை. ஆனால் அவரது பாதங்கள் அழுக்காயிருந்தது. அவர்கள் அவரை வாசலண்டை வந்து வரவேற்காமலும் அவர் நடந்து வந்ததினால் அவரது பாதங்கள் சாணத்தினால் அழுக்கடைந்து போயிருந்ததை நீக்கும் படி அவரை கழுவி சுத்திகரிக்காமலும், அவரை எண்ணெயால் அபிஷேகிக்காமலும் இருந்தார்கள். அவர் தெருவில் நடந்து வந்ததினால், தெருவில் குதிரைகள் மற்றும் இன்ன பிறவும் சென்ற தினால் உண்டான அழுக்குகள் அவரது ஆடையில் படிந்திருந்தன. அவர் மேல் நாற்றமாக இருந்தது. அவர்களது வழக்கத்தின்படி, அவர்கள் எப்பொழுதும் வீட்டுக்கு வருகிறவர்களின் கால்களை கழுவி விடுவார்கள். அதற்காக எப்பொழுதும் வாசலண்டையில் கால் கழுவிவிடும் ஒரு பணியாள் ஆயத்தமாக இருப்பான். வீட்டிற்கு ஒரு மனிதன் வரும்பொழுது, அப்பணியாட்கள் அவனது கால்களை கழுவிவிடுவார் கள், பிறகு பொருத்தமானதொரு ஜோடி காலணியை அவனுக்கு அணிவித்துவிடுவார்கள். அதன்பிறகு அவன் சிரசில் தைலத்தால் அபிஷேகித்து, அவன் மேல் நல்ல வாசனை இருக்கும்படி செய்வார்கள். சூரிய வெளிச்சத்தில் அவன் நடந்து வந்ததால் அவனது கழுத்து, சூரியனது வெம்மையால் சுட்டெரிக்கப்பட்டது சற்று நலமாகும்படி ஆகும். அவனது தலை முடியை நன்கு வாரி விடு வார்கள். அதன் பிறகு அவன் வீட்டினுள்ளே செல்வான். வரும் விருந்தாளிக்கு இந்த விதமாக வரவேற்புக் கிடைக்கும். பேட் அவர்களே, இங்கே ஒரு நிமிடம் நில்லுங்கள். நான் உங்களுக்கு ஒன்று காண்பிப்பேன். அவர்கள் இவ்வாறு தான் ஒரு விருந்தாளியை வரவேற்பார்கள். நான் நம்புகிறேன். இல்லை, இது இவ்விதமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். வரவேற்பு இவ்விதமாக இருக்கும். அவர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, அவ்வாறு விருந்தாளி வரவேற்கப்படுவான். 107ஆனால் பெந்தெகொஸ்தே விருந்துக்கு வருகிறது போல, இயேசு இந்த பரிசேயனுடைய வீட்டு விருந்துக்கு வந்தபொழுது, அவரை யாரும் கவனிக்கத் தவறிவிட்டார்கள். அவர்கள் தங்களுடைய விஷயங்களிலும், பிஷப்புகளை வரவேற்பதிலும், மற்றும் இன்ன பிற காரியங்களிலும் கவனமாக இருந்தபடியினால், இயேசு அவ்விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தபோதிலும், ஒருவரும் அவரது பாதங்களை கழுவவில்லை. அவர் அங்கே ஒரு மூலையில் அவர் மேனி தூசி படிந்து, பாதங்கள் அசுத்தத்தினால் நாற்றமடித்துக் கொண்டு, உட்கார்ந்து கொண்டிருந்தார். ஆனால் எவருமே அவர் அங்கே இருப்பதை அறியவேயில்லை. அப்பொழுது அங்கே ஒரு எளிய வேசி அத்தெரு வழியாக வந்தாள், அவளிடம் ஒரு பையில் சிறிது அளவே பணம் இருந்தது. அவள் எட்டிப்பார்த்தபொழுது, அங்கே இயேசு அழுக்கடைந்த பாதங்களுடன் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அது அவளது இருதயத்தை உடைத்தது. அந்த மனிதர் தான் அந்தப் பெண்ணின் பாவங்களை மன்னித்தவர், அம்மனிதர்தான் சுகமளித்தலை அளித்தவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் அவரைக் கவனிக்கவேயில்லை?'' என்று தனக்குள் வினவினாள். ஏனெனில், அங்கே பிஷப்புகள், மற்றும் அவர்கள் குழாமும் இருந்தபடியினால் அவரை புறக்கணித்து விட்டார்கள். அங்கே அவர்... அவரை அவ்விருந்துக்கு வரும்படி அவர்கள் அழைப்பு விடுக்கத்தான் செய்திருந்தனர். 108அந்த விதமாகத்தான் நாமும் செய்கிறோம். நமது கூட்டங் களுக்கு இயேசு வரும்படி நாம் அழைக்கிறோம். ஆனால் நாமோ, அவர் வருகையில், அவரைப் பற்றி வெட்கமடைகிறோம். 'ஓ, நான் 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று கூற விரும்பவில்லை. சகோதரி ஜோன்ஸைப் போல, அவர்கள் என்னை ஒரு உருளும் பரிசுத்தன் என்று அழைப்பார்களே'' என்கிறார்கள். நீர் மாய்மாலக் காரர்! அப்படித்தான். ''நான் எங்கே அந்நிய பாஷையில் பேசிவிடு வேனோ என்று அஞ்சுகிறேன். என்னை 'பாஷை மனிதன்' என்று கேலி செய்வார்கள் என்று அஞ்சுகிறேன், என்று கூறுகின்றனர். நீர் ஒரு பரிதாபத்திற்குரிய நிர்பாக்கியசாலி. இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பரிதபிக்கப்படத்தக்கவரும், நிர் பாக்கியமுள்ளவரும், தரித்திரராயும், நிர்வாணியாயும், குருடாயும் இருந்து கொண்டு, அதை அறியாமலிருக்கிறீர்கள். கால்கள் கழுவப்படாதவராய் இயேசு அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். தெருவில் நிற்கும் வேசி அங்கே போவதை என்னால் காணமுடிகிறது. ஒரு நிமிட நேரம் நாம் யாவரும் அவளைப் பற்றிப் பார்ப்போம். அவன் கடைக்குப் போகிறதை என்னால் பார்க்க முடிகிறது. அங்கு அவள் போய் .... அவளது கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடுகிறது. என்னால் அதைச் செய்ய முடியாது. இந்தபொருளை எடுத்துச்சென்றால் இப்பணத்தை நான் எங்கேயிருந்து பெற்றேன் என்பதை அவர் அறிவார். எவ்விதமாக நான் இதை பெற்றேன் என்பதை அவர் அறிவார். ஆனால் என்னி டத்தில் இருப்பதெல்லாம் அது தான்'' என்று கூறினாள். 109அதைத்தான் அவரும் விரும்புகிறார். அதைதான் அவரும் விரும்புகிறார். ''வெறுங்கையனாக நான் உம்மிடம் வருகிறேன்'' என்று கூறிக்கொண்டு அவரிடம் வாருங்கள். அவர் நீங்கள் என்ன கொண்டு வருகிறீர்கள் என்பதைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. அவள் அங்கே பரிமள தைலத்தை விலைக்கு வாங்கி வைத் திருந்தாள். அதை அவள் எடுத்துக்கொண்டு வருகிறாள். “எப்படி யாவது அவரை நான் காண வேண்டுமே'' என்று எண்ணிக் கொண் டிருக்கிறாள். பின்பு, அவள் அங்கே உள்ளே மெதுவாக நுழைந்து கதவண்டை வந்துவிடுகிறாள். 110அங்கே அவர்கள் அவருக்கு உரிய வரவேற்பு கொடுக்க வில்லை. பரிமள தைலம் உள்ள குப்பியை எடுத்து அதை திறந்து அதை அவரது பாதத்தில் பூசுகின்றாள், பின்பு, அவரது பாதங்களை கழுவ ஆரம்பிக்கிறாள். 'ஓ, இது அவராகத்தான் இருக்க வேண்டும். வேதாகமத்தில் நான் எப்பொழுதும் படித்திருப்பது இவரைப் பற்றித்தான். அவர் என்னை அடையாளங்கண்டுகொள்வார் என்பதை நான் அறிவேன்'' என்று கதறி அழுது கொண்டே மனதில் எண்ணினாள். அதில் முதலாவதான காரியம் என்ன வெனில்... அவரது பாதங்களில் விழுந்த மனந்திரும்புதலின் கண்ணீரினால் அவன் அவரது பாதங்களை நனைத்தாள். அது எவ்வளவு அழகான தண்ணீராக உள்ளது! அவரது பாதங்களை தன் கண்ணீரால் அவள் நனைத்து அதை கழுவின போது, அதை துடைக்க அவளிடம் துணி ஏதும் இருக்கவில்லை. எனவே அவள் தலை முடியை எடுத்து அதைக் கொண்டு துடைத்தாள். சுருள் சுருளான அவளது முடியை அவள் கலைத்துவிட்டிருந்தாள். அவளது கன்னத்திலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதைக்கொண்டு அவரது பாதங்களை அவள் கழுவிவிடுகிறாள்; அவ்வப்பொழுது அவள் அவரது பாதங்களை முத்தமிடுகிறாள் (சகோ. பிரான்ஹாம் முத்தமிடும் ஓசையை உண்டாக்குகிறார் - ஆசி) பாதங்களை கழுவிக் கொண்டே யிருக்கிறாள். 111அழுக்கடைந்த பாதங்களோடு இயேசு அங்கே இருக்கும் பொழுது, ஒருவரும் அதைப்பற்றிக் கவனிக்கவேயில்லை. இன்றைக்கு உருளும் பரிசுத்தர் மற்றும் இன்னபிற அவனமான கரமான நாமங்களை அவர் பெற்றுள்ளார். அவருக்கென்று நிற்பதற் கான தைரியம் மனிதனுக்கு இருக்கவில்லை. மரணம் என்னை விடுவிக்கும் வரையிலும், அர்ப்பணிக்கப்பட்ட இச்சிலுவையை நான் சுமப்பேன் இன்னல்படும் சில தேவ மைந்தர்களுடன் நான் போகிறேன் இயேசுவோடு நான் புறப்பட்டுவிட்டேன், கர்த்தாவே நீர் என்னை அழைத்துச் செல்லும் (என்னை அழைத்துச் செல்லும் கர்த்தாவே என்னவானாலும் என்னை அழைத்துச் செல்லும்) 112யாக்கோபைப் போல், எனக்கு ஒரு கல் என் தலையணையானாலும், அதனால் என்ன வந்தது அவர் எனக்காக செய்ததை எண்ணிப் பார்க்கும்போது! அங்கே இவ்வெளிய விபச்சாரி கதறி அழுது கொண்டு இருக்கிறாள். அவரை விருந்துக்கு அழைத்தவனாகிய சீமோன் என்பவன் அவள் இவ்வாறு செய்து கொண்டு இருக்கையில், ''ஹும் ஹும் ஹும் ஹும்'' என்று உறுமிக் கொண்டே, ''அவர் தீர்க்கதரிசியா இல்லையா என்பது, அவள் எப்படிப்பட்ட பெண்மணி என்பதை அவர் அறிந்து கொண்டால் அதிலிருந்து தெரிய வந்துவிடும்'' என்று கூறிக் கொண்டேயிருந்தான். அந்த மாய் மாலக்காரன்! எனவே, அவள் உள்ளே வந்து விட்டபிறகு ... இயேசு தனது பாதங்களை நகற்றவேயில்லை. அவர் அப்படியே உட்கார்ந்து கொண்டு அவளை நோக்கிப் பார்த்து, அவள் செய்வதை கவனித்துக் கொண்டேயிருந்தார். ஓ, நான் அதை விரும்புகிறேன். நாம் செய் கிற பெரிய காரியங்கள் அல்ல காரியம், நாம் சில வேளைகளில் செய்யாமல் விட்டுவிடுகிற சிறிய காரியங்களில் தான் இருக்கிறது. அவரைப் பற்றி யாருமே கண்டு கொள்ளவில்லை. இறுதியாக அவள் அங்கே அழுது கதறிக் கொண்டு, அவரது பாதங்களை கழுவி துடைத்துக்கொண்டிருக்கிற பொழுது, அதுதான் அங்கிருந்த மக்களது கவனத்தை ஈர்த்தது. அவர் அவளை கவனித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார். ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. 113சீமோன் அங்கே நின்று கொண்டு, 'உம், அவர் தீர்க்க தரிசியா இல்லையா என்பதைப் பாருங்கள். ஏற்கனவே சொன் னேன், நான் சொன்னேன் அல்லவா? அவர் தீர்க்கதரிசியாயிருந் தால், அவள் எப்படிப்பட்ட பெண் என்பதை அவர் அறிந்திருப் பாரே. பாருங்கள், நாம் இங்கே மகத்தான சபையினராக அமர்ந்திருக்கிறோம். நாம் அறிந்து கொண்டு விட்டோம். அவர் தீர்க்கதரிசி அல்ல என்பதை நாம் அறிந்து கொண்டு விட்டோம். அப்படியிருந்தால் அவள் யார் என்பதை அவர் அறிந்திருப்பாரே'' என்று கூறுகிறான். அவள் அங்கே உள்ளே வந்து விட்ட பிறகு, கன்னத்தில் வழிந்தோடும் அவளது மனந்திரும்புதலின் கண்ணீரினால் இயேசு வின் பாதங்களை கழுவித்துடைத்தாள். இதனால் இயேசு சிறிது புத்துணர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஓ தேவனே, நான் அங்கு இருந்திருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் அப்பாதங்களை மீண்டும் ஒரு முறை கழுவி யிருப்பேன். ஆம், ஐயா. இன்றைக்கு பாதங்களை தனது தலை முடியினால் துடைப்பது என்பது ஒரு பெண்ணுக்கு மிகவும் கடினமானதாக இருக்கு மல்லவா? பாதங்களைத் துடைப்பதற்கென இன்றைய பெண் களுக்கு போதுமான முடியில்லாததால், அதற்காக அவள் தலை கீழாக நின்றால் தான் முடியும். ஆம் ஐயா, அவர்கள் தங்கள் தலை முடியை வெட்டிக்கொண்டு விட்டார்கள். 114ஆனால் அங்கே இயேசுவின் பாதங்கள் ஒருவரும் கவனிக் காத நிலையில், அழுக்கடைந்து, நாற்றமடித்துக்கொண்டு, அவர் அங்கே கனவீனப்படுத்தப்பட்டவராய், குறை சொல்லப்பட்ட வராய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவளோ அதை கழுவிவிட்டாள். அவர் தம் பாதங்கள் கழுவித் துடைக்கப் பெற்ற பிறகு, அவளை “நல்லது'' என்று சொல்லுவது போல் நோக்கிப் பார்த்தார். அவர் சீமோனைப் பார்த்து, “சீமோனே, நான் உனக்கு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் உண்டு. நீ என்னை இங்கே வரும் படி அழைத்தாய், ஆனால் நீ என்னை வாசலில் வந்து வரவேற்க வில்லை. என் பாதங்களை கழுவ நீ எனக்கு தண்ணீர் கொடுக்க வில்லை. சூரிய வெம்மையில் நடந்து வந்த உஷணத்தை தணிக்க நீ என் தலையை எண்ணெயால் அபிஷேகிக்கவில்லை. நீ வரவேற்புக் கடையாளமான முத்தமும் கொடுக்கவில்லை. ஆனால் இந்த எளிய பெண்மணி, இந்த வெளியாள், தெருவில் உள்ள ஒரு வேசி, இவளுக்கு என் பாதங்களை கழுவ தண்ணீர் இல்லை, ஆனால் அவள் தன் கண்ணீரினால் என் பாதங்களைக் கழுவினாள். துடைப்பதற்கு அவளிடம் ஒன்றுமில்லை, எனவே அவள் தன் தலைமுடியை எடுத்து பாதங்களைத் துடைத்தாள். என் பாதங்களை விடாமல் முத்த மிட்டாள். இப்பொழுது நான் உனக்கு கூறுவதென்னவெனில், அநேகமான அவளது பாவங்கள் அவளுக்கு மன்னிக்கப்பட்டன'' என்று கூறினார். அப்படித்தான், அவர் ஒருபோதும் அவனு டையதைக் குறித்து கூறவில்லை. “நீ செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது'' லூக்.7:47 115அதே போல் இன்றைக்கும், இயேசுவானவர் ஒரு பெந்தெ கொஸ்தே ஸ்தாபனத்தின் வாசலிலும், பாப்டிஸ்ட் ஸ்தாபனத்தின் வாசலிலும், மெதோடிஸ்ட் ஸ்தாபனத்தின் வாசலிலும் வெளியே நின்று கொண்டு, மீண்டும் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தோடு உள்ளே நுழைவதற்காக தட்டிக் கொண்டிருக்கிறார், ஆனால் ஜனங்களோ அவரைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றனர். உங் களுடைய லௌகீகமும் மற்றும் இன்னபிற காரியங்களும் அவரை சபையை விட்டு வெளியே தள்ளிவிட்ட பிறகு, அவர் வெளியே நின்றிருந்து, மீண்டும் உள்ளே நுழைவதற்காக முயற்சித்துக் கொண்டு சப்தமிட்டுக் கொண்டிருக்கிறார். என்னுடைய வாழ்க்கையிலேயே நான் கண்டவற்றில் மிகவும் பரிதாபமான விஷயமாக இது இருக்கிறது. அவர்களுக்கு அவர் தேவையில்லை என்றாகி விட்டது. அவர் வெளியே வாசலருகே நின்று கதவைத் தட்டி மீண்டும் உள்ளே நுழைய முயன்று கொண்டிருக்கிறார். அவர் அதே காரியத்தைத் தான் செய்ய முயன்று கொண்டிருக்கிறார். ஏன் ஏன்? அவர் வெளியே நிற்கிறார். அவர்கள் அவரை வெளியே தூக்கி எறியவில்லை. அவர்கள் இன்னமும் அவரைக் குறித்து துதிப்பாடல்கள் பாடுகின்றனர். அவரைக் குறித்தே பிரசங்கிக்கின்றனர். ஆனால் அவர் தங்கள் சமூகத்தில் இல்லாததை உணரவில்லை. அது சரிதான். அவர்கள் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். ஏன்? அவர்கள் கிட்டப் பார்வை வியாதியுடையவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பெரிய கட்டியங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் ஐசுவரியவான்களாயிருக்கிறார்கள் அவர்கள் தாம் சார்ந்திருக்கிற பெரிய ஸ்தாபனங்களைக் குறித்து பெருமிதத்துடன் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதை கட்டியெழுப்பி, அதில் மேலும் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்து உள்ளே கொண்டு வர அவர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர் இல்லாததை அவர்கள் உணரவில்லை. இல்லை, இல்லை. அந்நிய பாஷைகளில் பேசுதல் அவர்கள் மத்தியில் இல்லாதிருப்பதை மகத்தான வல்ல மையான செய்திகள் அவர்கள் மத்தியில் இல்லாதிருப்பதை உணர வில்லை. அச்செய்திகள் இருதயத்தை உருவக்குத்தி, இருதயத்தை விருத்த சேதனம் செய்து, உலகத்தின் காரியங்களை உங்களை விட்டு வேரறுக்கிறதாயிருந்து, உங்களை பதரைவிட்டு பிரித்தெடுக்கப் பட்ட கோதுமை மணியாக ஆக்குகிறது. ஓ அவர்கள் ..... 116அவ்வாறு நீங்கள் அவர்களது சபையில் பிரசங்கித்தால், அவர்கள் உங்களை வெளியே தள்ளிவிடுவார்கள். அவ்வித மாகத்தான் பரிசுத்த ஆவியானவர் பிரசங்கித்தார். இயேசு அவர்களை நோக்கி, ''விரியன் பாம்புக்குட்டிகளே, புல்லில் உள்ள பாம்புகளே'' என்ற பிரசங் கித்தார். அந்த மகத்தான அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதனாகிய யோவானும் அவ்வாறு செய்து, அவர்களது தோலை உரித்தான். அவ்வாறுதான் நடந்தது. 117ஆனால் அவர்கள் அவர் இல்லாததை உணரவில்லை ஏனெனில் அவர்கள் அந்த உணர்ச்சியை உடையவர்களாயிருக்க வில்லை. பாருங்கள்? அவர்களுக்கு முதுகில் தட்டிக் கொடுக்கும் மலரைப் போல் மென்மையான அலங்காரமான காரியம் உண்டா யிருக்கிறது. “நீங்கள் அவர்களோடு சேர்ந்து கொண்டு, உங்கள் பெயரை இங்கே பதிந்து கொண்டு விட்டால், நாங்கள் உங்களை உறுப்பினராகிவிடுவோம். மற்ற சபைக்குப் போய் உங்களுடைய சம்மந்தமான சான்றை வாங்கி வந்துவிடுங்கள். நாங்கள் அப் பொழுது உங்களை ஏற்றுக்கொண்டு விடுவோம். ஒவ்வொரு வருட மும் எவ்வளவு கொடுப்பது என்பதற்கான உங்களுடைய வாக்குறுதி என்ன?'' என்றெல்லாம் அவர்கள் கேட்கின்றார்கள். பார்த்தீர்களா? அவர்களுடைய காரியம் அவ்வாறுதான் உள்ளது. ''ஐசுவரியவானும், எனக்கு ஒரு குறைவுமில்லை'' என்ற நிலையில் உள்ளனர். ஓ, ஆனால் உங்களுக்கு அதைவிட ஒரு மகத்தான காரியம் தேவைபடுகிறது. ஆனால் நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. இயேசு பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தோடு மீண்டும் நுழைவதற்காக, வெளியே நின்று கொண்டு முயன்று கொண்டிருக்கிறார். 118மெதோடிஸ்ட் சபையின் நடுவில் பரிசுத்த ஆவி விழுந்தால், அதினால் அவர்கள் சப்தமிட்டு, குதிக்க ஆரம்பித்து, அந்நிய பாஷைகளில் பேசி குடித்த மக்களைப் போல் நடந்து கொண்டால், என்ன நடக்கும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? அந்த மெதோ டிஸ்ட் சபையை, கான்ஃபரென்ஸ்-ஐ விட்டு கான்ஃபரென்ஸ் தூக்கி எறிந்துவிடும். (கான்ஃபரென்ஸ் என்பது இவ்விடத்தில், மெதோடிஸ்ட் சபைக்கு தேசிய அளவில் அதை ஆளுகை செய்யக் கூடிய ஒரு அமைப்பாகும் - மொழிபெயர்ப்பாளர்) நீங்கள் அதை அறிவீர்கள். பாப்டிஸ்ட் சபையிலும் அதே போல் உள்ள காரியம் நடந்திட்டால் என்ன நடக்கும்? அதே தான் இங்கும் நடக்கும். பெந்தெகொஸ்தேயினர்? அதே காரியம் சம்பவித்ததைப் பற்றி அறிந்த அநேகர் உள்ளனர். நிச்சயமாக. ஆம் ஐயா. அதை அவர்கள் அபத்தம் என்று எண்ணுகிறார்கள், எனவே அத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளமாட்டார்கள். 'அவர்கள் எங்களுடைய புது தரை விரிப்பைக் கூட நாசம் செய்துவிட்டார்கள்'' என்று கூறுவர். ஊ ஊ, நிச்சயம் அப்படித்தான். என்னே ! என்னே ! இவர்கள் ஒரு பரிதாபமான கூட்டம் மக்களாய் உள்ளனர். அது அப்படித்தான். 119அவர் அவர்களோடு ஒரு காலத்தில் இருந்தார். அவர் களோடு ஏழு குத்துவிளக்குகளின் மத்தியில் அவர் உலாவினார். இங்கே தான் பதில் உள்ளது; ஸ்தாபனங்களும், அவைகளுடைய லௌகீகமான காரியங்களும், அவர்களுடைய பிஷப்புகளும், கார்டினல்களும், மற்றும் அவர்களுடைய அனைத்து உலக பிரகாரமான காரியங்களும் அவரை வெளியே தள்ளிவிட்டன. அவர் அங்கு இல்லாததை அவர்கள் உணரவில்லை. மேலும் சபையானது ... அவரை திரும்பி அழைத்துக் கொள்வதற்காக நாம் என்ன செய்யப் போகிறோம்? இப்பொழுது அவர் பெந்தெகொஸ்தே சபையைவிட்டும் வெளியே இருப்பாரானால் அவரை மீண்டும் உள்ளேகொண்டு வருவதற்காக நாம் என்ன செய்யப்போகிறோம் அவரை மீண்டும் உள்ளே கொண்டு வருவதற்காக, மக்களின் ஏகோபித்த கருத்துக் கணிப்பைப் பெறலாமா? புதிய போப், புதிய கார்டினல் ஆகியோரை தேர்ந்தெடுத்துவிட்டால், அவர் உள்ளே வந்துவிடுவாரா? அல்லது, புதியதொரு ஸ்தாபனமொன்று எழுப் பப்படுமென்றால் அது சரி செய்துவிடுமா? அது அக்காரியத்தை சாதிக்காது. அது ஒருக்காலும் அவரை மீண்டும் உள்ளே கொண்டு வராது. ஒரு புதிய ஸ்தாபனம் எழும்புவதால் அக்காரியம் நடக்காது. ஒரு புதிய ... ஒரு-ஒரு-ஒரு புதிய கார்டினல் அதைச் சாதிக்க முடியாது. ஒரு புதிய மேய்ப்பர் வந்துவிட்டால், அதனால் எதுவும் நேர்ந்திடாது, நிறைய சம்பளம் கொடுக்கப்பட்ட ஒரு புதிய சுவிசேஷகனால் அதைச் சாதிக்க முடியாது. நீங்கள் நீங்களாகவே அதைச் செய்யாவிட்டால், உலகில் வேறு எதுவும் அதைச் செய்ய முடியாது. எவ்வாறு அவரை உள்ளே கொண்டு வருகிறோம்? ஒரு வாக்கெடுப்பினால் அல்ல. இல்லை ஐயா. இயேசுவை வாக் கெடுப்பின் மூலம் நாம் மீண்டும் உள்ளே கொண்டு வருவதில்லை. ஏனெனில் இயேசு அவ்விதமாக வரமாட்டார். 120இதற்குச் செவிகொடுங்கள். இதோ இங்கே அது இருக்கிறது. “ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால்'' இப் பொழுது, கதவு எது என்பதை நாம் அறிவோம். ”ஒருவன் கதவைத் திறந்து என் சத்தத்தைக் கேட்டால்.'' “ஒரு சபையோ அல்லது ஒரு ஸ்தாபனமோ என் சத்தத்தை கேட்டால்'' என்பதாக அதுவல்ல. அப்படியில்லை, ஐயா. அவர் அவர்களோடு இடைப்படமாட்டார். அவர்கள் ஏற்கெனவே மரித்துப்போய்விட்டார்கள். அதை அவர் வெறுக்கிறார். அவர் அதை எப்பொழுதும் வெறுத்தேயிருக்கிறார். தான் அதை வெறுத்த தாக அவர் கூறினார். இன்றிரவிலும் அதை அவர் வெறுக்கத்தான் செய்கிறார். ஆனால் அவர், “எவனாவது என் சத்தத்தைக் கேட்டால்'' என்றே கூறுகிறார். ”எந்தவொரு மெதோடிஸ்ட் மனிதனோ, எந்தவொரு பாப்டிஸ்ட் மனிதனோ, எந்தவொரு ப்ரெஸ்பிடேரியன் மனிதவனாவது, அல்லது எந்தவொரு கத்தோலிக்க மனிதனாவது, எந்தவொரு தேவ சபை மனிதனாவது, பெந்தெகொஸ்தே மனிதனாவது'' என்பதாக; ''ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன். அவனும் என்னோடே பண்ணுவான்'' அதுவே பெந்தெகொஸ்தே சபைக்கு உள்ள செய்தியாகும். பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தை எழுப்புதலுக்குட்படுத்த அவர் முயலவில்லை. ஆனால் பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதத்தை தனி மனிதரின் இருதயத்தில் மீண்டும் எழுப்புதலோடு உண்டாக்கவே அவர் முயலுகிறார். அது ஒன்றே வழியாக இருக்கிறது. “நான் அவனோடே போஜனம் பண்ணுவேன். அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்.'' 121அப்படியாயின், இந்தச் சபைக் காலத்திற்குரிய தூதன் .... செய்தி நமக்கு என்ன பாடத்தைப் போதிக்கிறது? ஆவியின் வளர்ச்சி உண்டானது என்றல்ல. இல்லை ஐயா. ஆவியின் நிறைவின் சரிவு, எப்பொழுதும் சரிவே நமக்கு ஏற்பட்டுள்ளது. செய்தி யாளன் ... ஒவ்வொரு சபைக்காலத்திற்குரிய தூதனும், அக்காலத் திற்குரிய செய்தியும், ஸ்தாபனமயமாக்கும் போதகத்தை கண்டனம் செய்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு சபைக்காலத்திற் குரிய செய்தியும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. ஆனால் சபை யானது தொடர்ச்சியாக சரிவு நிலையிலேயே இருந்து வந்துள்ளது. எனவே வார்த்தைக்கு அவர்கள் செவி கொடுக்கவேயில்லை. சபைக் குரிய செய்தியானது ஸ்தாபனத்தை மதித்ததாக இருக்கவில்லை. ஸ்தாபனமானது கலப்பின கிறிஸ்தவர்களைப் பிறப்பித்து, பெயரளவில் உள்ளவர்களாக மாத்திரம் அவர்கள் இருந்தார்கள். அவர் களுக்குத் தேவனைக்குறித்தோ, பரிசுத்த ஆவியைக் குறித்தோ தெரியாது. இன்றிரவில் இந்த மேடையில் நான் நின்றிருப்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவு அவ்விஷயமும் உண்மை யாயிருக்கிறது. மிகவும் அருமையான வெதுவெதுப்பான உறுப் பினர்கள். அவர்கள் அவருடைய வாயினின்று வாந்தி பண்ணிப் போடப்படுவதற்காக மாத்திரமே உள்ளனர். புறஜாதியார் ஒரு கிளையாயிருந்தனர். அவர்களை பவுல் எச்சரிக்கிறான். உங்களில் சிலர் நீங்கள் விரும்பினால் ரோமர் 11ம் அதிகாரம் 15ம் வசனம் முதல் 27ம் வசனம் முடிய எடுத்துக் கொண்டு யாவரும் குறித்துக் கொள்ளுங்கள். முடிக்கும் முன்னர், அவ்வசனங்களை உங்களுக்கு நான் மேற்கோள் காட்ட விரும்பு கிறேன். ஏனெனில் அது ஒரு... இப்பொழுது ரோமர் 11:15ல் இருந்து 27ம் வசனம் முடிய குறித்துக் கொள்ளுங்கள். நாம் இப்பொழுது சபைக்காலங்களைக் குறித்த செய்தியை முடித்துக் கொண்டிருக்கிற வேளையில் கவனமாகக் கேளுங்கள். பவுல் அவர்களுக்குக் கூறுகிறான். புறஜாதியாரோடு பவுல் அங்கே பேசுகிறான். '... தேவன் ...'' பவுல் கூறினான். 122அது சரிதானே? யூதர்கள் வெட்டப்பட்டதின் காரணம் என்ன? ஏனெனில் அவர்கள் பெந்தெகொஸ்தேயை புறக்கணித் தார்கள். அப்படித்தானே? பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் பரிசுத்தாவியைக்குறித்து கேலி செய்து அதைத் தூஷித்தார்கள். இயேசு இங்கே இப்பூமியில் இருந்தபோது, அவர் கூறினார்... அவர்கள் அவரை 'பெயல்செபூல்'' என்றழைத்தனர். ''அவன் ஒரு பிசாசு'' என்றனர். ''குறி சொல்லுகிறவன்'' என்றழைத்தனர். இன்னும் என்னவெல்லாமோ சொல்லி அவரை அழைத்தனர். அவர், ''அதற்காக நான் உங்களை மன்னிப்பேன், ஆனால் பரிசுத்த ஆவியானவர் வரும்பொழுது, அவருக்கெதிராக பேசா தீர்கள், ஏனெனில் அதற்கெதிராக பேசும் தூஷணம் மன்னிக் கப்படமாட்டாது“ என்று கூறினார். ''புறஜாதியாரிடத்தில் போக வேண்டாம்'' என்றும், “காணாமற்போன இஸ்ரவேலரிடத்திற்கே போங்கள்'' என்றும் இயேசு தம் சீஷர்களுக்கு கட்டளையிட்டதை நினைவுகூருங்கள். அப்படித்தானே அவர் கூறினார். 123அவர்கள் தங்களைத் தாங்களே எவ்வாறு ஆக்கினைக் குள்ளாக் கிக்கொண்டார்கள்? பரிசுத்த ஆவியை தூஷித்ததினாலும், தேவனுடைய ஆவியை ''அசுத்தமான ஒன்று'' என்று அழைத்ததினாலும் தான். பெந்தெகொஸ்தே நாளில், அவர்கள் ஆவியில் நடனமாடிய போது, ஆவியானவரை அவர்கள் கேலி பரிகாசம் செய்தார்கள். அதைக் குறித்து அந்நகரத்தார் பரிகசித்தார்கள். அதே நகரத்தாரை தீத்து அங்கே கொலை செய்தான். அவர்களது இரத்தம் வாசல் வாசல் வழியாக பாயந்தோடியது. அதே நூற்றாண்டில், அவர்கள் தங்கள் சொந்தப் பிள்ளைகளையே கொன்று தின்றார்கள். அப்படித்தான் நடந்தது. உலகிலுள்ள மகத்தான தேசங்களி லொன்று மிகவும் கீழ்த்தரமானதாக ஆக்கப்பட்டது. அவர்கள் பூமியின் நான்கு திசைகளிலும் சிதறடிக்கப்பட்டனர். ஏன் அவ்வாறு நடந்தது? அவிசுவாசத்தினிமித்தமே! இஸ்ரவேலராகிய அவர்களே சுய அடிமரம், அவர்கள் தான் சுய மரமாவார்கள். 124பவுல் அங்கே இவ்வாறு கூறவில்லையா? அவ்வசனத்தை யார் எடுத்திருக்கிறீர்கள்? பேட், எடுத்துக் கொண்டீர்களா எழுந்து நின்று, 15ம் வசனம் முதல் 27 வசனம் முடிய வாசியுங்கள். (சகோதரன் பேட் அவர்கள் பின்வரும் வேத வாக்கியங்களை படிக்கிறார் - ஆசி). அவர்களை தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கீகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்த ஜீவன் உண்டானது போலிருக்கமல்லவோ? மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்த மா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமா யிருந்தால் கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும். சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவ மரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்ட வைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன் பங்காளியாயிருந்தாயானால், நீ அந்த கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டாதே; பெருமை பாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல் வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள். நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டதென்று சொல்லுகிறாயே. நல்லது அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப் போடப் பட்டன. ரோமர் 11:15-20 125கவனியுங்கள். ''அவிசுவாசம்' நல்லது, தொடர்ந்து படியுங் கள். (சகோதரனே பேட் அவர்கள் பின்வரும் வேத வாக்கியங்களை தொடர்ந்து படிக்கிறார் - ஆசி). .... நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய், மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு, சுபாவக் கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிட மாட்டார் என்று எச்சரிக்கையாயிரு. ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத் திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப் பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டு போவாய். அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திரா திருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறு படியும் ஒட்ட வைக்கிறதற்குத் தேவன் வல்லவரா யிருக்கிறாரே. சுபாவத்தின்படி காட்டொலிவ மரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவ மரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக் கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவ மரத்திலே ஒட்ட வைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா? மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்க ளென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறிய வேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதி யாருடைய நிறைவு உண்டாகும் வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்கு கடினமான மனதுண்டா யிருக்கும். இந்தப் பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப் படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்; நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதி யிருக்கிறது. ரோமர் 11:20-27 126அதை அறிந்து கொண்டீர்களா?'' இஸ்ரவேலர் இங்கு வந்து, பரிசுத்த ஆவியினால் நடைபெற்றும் அடையாளங்களைப் பார்த்த பிறகு வெட்டப்பட்டால்...'' என்று பவுல் கூறினான். அவர்கள் பவுலுடைய செய்தியை நிராகரித்தபடியினால், இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுதல், மனந்திரும்பி, இயேசு வின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுதல், விசுவாசிக்கிறவனைத் தொடரும் அடையாளங்கள் அற்புதங்கள் போன்றவை) அவ்வாறு ஆகியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் அதை புறக்கணித்தனர். அவர்கள் கூறினர். “.... இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்” அப்.13:46. அது சரிதானே? அவர்கள் முதலில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டது எபேசுவிலே அல்ல, அந்தியோகியாவிலே இவ்வாறு நடந்தது என்று நான் நினைக்கிறேன். அதைப் பார்ப்போம். முதல் மரமானது பரிசுத்தமாயிருந்தால், அதன் கிளைகளும் பரிசுத்தமாக இருக்கும் சுய ஒலிவ மரமாகும் அது. பவுல் பிரசங்கித்த பெந்தெகொஸ்தேயின் செய்தியை அவர்கள் அவிசுவாசித்த படியினாலே, (அப்படித்தானே?) தேவன் அவர்களை வெட்டி எறிந்து விட்டு, புறுஜாதியாராகிய காட்டொலிவக் கிளைகளாகிய நம்மை வெட்டி, சுய ஒலிவ மரத்தில் ஒட்டவைத்து, அதின் வேரிலுள்ள சாரத்திலும் பங்கெடுத்துக்கொண்டு, அதினால் நாம் ஜீவிக்கத்தக்கதாக இயன்றது. 127இப்பொழுது, சபைக்காலங்களினூடே கடந்து வந்துள்ள இந்தப் பெந்தெகொஸ்தேயின் செய்தியை இந்நாளில் நாம் நிரா கரித்தால், அது எவ்வளவு அதிகமாயிருக்கும்? அன்றைக்கு செய்ததை போல், ஒட்டவைக்கப்பட்ட இந்த காட்டொலிவக் கிளைகளை எவ்வளவு அதிகமாய் அவர் வெட்டிவிட்டு, அந்த மற்ற சுய ஒலிவக் கிளையை மீண்டும் ஒட்ட வைக்கிறதற்கு வல்லவரா யிருக்கிறாரல்லவா? அவிசுவாசத்தினால் அவன் அதை புறக் கணித்தான். இன்று காலையிலுள்ள பாடத்தோடு இதை சரியாகப் பொருத்திப் பாருங்கள். இப்பொழுது நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்களல்லவா? நாம் தாமே புறஜாதி சபையானது எடுத்துக்கொள்ளப்படுவதற்காக உள்ள கடைசி காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் யூதர்கள் மேல் வந்து இறங்குவதும், இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் முத்திரையிடப்படுதலும் நிகழப் போகிற கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இஸ்ரவேலராகிய சுய ஒலிவக்கிளைக்கு மீண்டும் ஆசீர்வாதத்தை கொண்டு வருதல் நடக்கப்போகிறது. இயேசுவானவர் எப்பொழுதுமே உங்களுடைய வாசலில் நின்றிருந்து கதவைத் தட்டிக் கொண்டிருக்கப் போவதில்லை. அவர் போதும் என்று அளவுக்கு தட்டிக் கொண்டிருக்கப்போவதில்லை அவர் போதும் என்ற அளவுக்கு தட்டி முடித்துவிட்டு திரும்பிப் போய்விடும் நேரம் ஒன்று வரும். அப்பொழுது நீங்கள் அவரு டைய கதவைத் தட்டுவீர்கள், ஆனால் நீங்கள் ஒரு போதும் அவரை கண்டு கொள்ளவே முடியாது. வருவதற்கான நேரம் இருக்கையில் வந்து விடுங்கள். பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் பெற்றுக் கொண்டதுபோல், அதே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்குக் குறைவாக எதையும் பெற்றுக்கொள்ள எதனோடும் ஒப்புரவாக வேண்டாம். அதே விதமாக தண்ணீர் ஞானஸ்நானம், அன்றைக்கு அவர்கள் செய்த அதே காரியம், இதை தவிர வேறு எதையும் பெற விரும்பாதீர்கள். அதைத் தவிர வேறு எதையும் உங்கள் உள்ளத்தில் நீங்கள் ஏற்றக்கொள்ள வேண்டாம். 128இப்பொழுது, எனது கத்தோலிக்க நண்பர்களே, உங்களுக்கு நான் ஒன்றைக் கூறட்டும். நீங்கள் கன்னி மரியாளிடத்தில் விசுவாசங் கொண்டுள்ளீர்கள். கன்னி மரியாள் இயேசுவின் தாயானாலும், அவளும் பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியதிருந்தது அதைப்பெற்றுக்கொண்ட போது, அவளும் ஒரு குடித்தவளைப்போல் நடந்துகொண்டாள். அவளும் அந்த நூற்றிருபது பேரோடு இருந்து, பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டு, அந்நிய பாஷைகளில் பேசி, தேவனுடைய ஆவியினால் நிரம்பியிருந்த பொழுது, குடித்த ஒரு பெண்மணியைப் போல் நடந்து கொண்டாள். கன்னி மரியாள் மகிமைக்குள் போவதற்காக அதை நிறைவேற்ற வேண்டியிருந்த பொழுது, அதற்குக் குறைவான தொன்றை நீங்கள் எவ்வாறு பெற்றுக் கொள்ளப்போகிறீர்கள்? அதைப் பற்றி எண்ணிப் பாருங்கள். அது தான் சரி. இங்கே பின்னால் அமர்ந்திருக்கிற பாப்டிஸ்ட் பிரசங்கியார் பாப்டிஸ்டுகளுக்கும் அதே காரியம் தான் கூறப்படுகிறதோ என்று நிச்சயமாக அறிய விரும்புகிறார். யாராயிருந்தாலும் சரி, யாவருக்கும் அதே தான் வேண்டும். 129எனவே, வெறுமனே ஒரு சபையில் சேர்ந்து கொண்டு, சமயக்கோட்பாட்டை ஒப்பித்துவிட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை காலையிலும் தவறாது ஆலயத்திற்கு செல்வது என்ற காரியங்கள் ஒரு நன்மையும் விளைவிக்காது. அதன் பலனாக நீங்கள் தேவனை பரிகசிக்கிறதாகத் தான் ஆகும். ஒன்று ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருங்கள், அல்லது நீங்கள் முற்றிலும் ஒன்றுமற்ற நிலையில் இருந்துவிடுங்கள். ஒன்று நீங்கள் அனலாயிருங்கள், அல்லது குளிராயாவது இருங்கள் கறுப்பு- வெள்ளை பறவையை நீங்கள் காண முடியாது. குடிகாரனாயும், குடிக்காதவனாயும் உள்ள ஒருவனை நீங்கள் காணமுடியாது. பாவியாயும் பரிசுத்தவானாயும் இருக்கும் ஒரு மனிதனையும் நீங்கள் காண முடியாது. அப்படிப் பட்டவைகளை நீங்கள் உண்டாக்க முடியாது. ஒன்று நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவன் உங்களில் வாசம் பண்ணுதலை உடையவராயிருங்கள், அல்லது அது அற்றவராயிருங்கள். இருந்தால் இப்படிப்பட்ட நிலையில் இருங்கள், அல்லது மற்றும் அற்றுப்போன நிலையில் இருங்கள். 130எனவே, இயேசு உங்களில் வாசலில் நிற்கிறார் என்பதையும், இந்நாட்களில் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றிய தேவனுடைய வாக்குத்தத்தையும் நினைவு கூருங்கள். எதனால் அப்படியாயிற்று? புறக்கணித்தபடியினால், சுய ஒலிவக்கிளையாகிய இஸ்ரவேலர் வெட்டப்படுவதற்கு காரணம் என்ன? ஏனெனில், அவர்கள் பவுலுடைய பெந்தெகொஸ்தே செய்தியை புறக்கணித் தார்கள். இது கடைசி சபைக் காலம் என்பதை விசுவாசிக்கிறீர்களா? வேதம் அவ்வாறு கூறியது. அவர்களுக்கு என்ன சம்பவிக்கப்போகிறது என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் பெந்தெகொஸ்தே செய்தியை புறக்கணித்துவிட்டபடியினால், இவர்களும் வெட்டப்படுவார்கள், அதன் பிறகு தேவன் மீண்டும் யூதர்களிடம் திரும்புவார். 131அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படு வார்கள். ஏனெனில் அவர் அவர்களை ஒரு தேசமாக எடுத்துக் கொள் வார். தனிப்பட்ட நபர்களாக அல்ல. ஆனால் நீங்களும் நானுமோ, தனித்தனி நபர்களாகத்தான் நம்மை அவர் தெரிந்து கொள்கிறார். ஏனெனில் அவர் யூதர்களிடம் வருவது... அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தில், அவர்கள் புறஜாதிகளிடத்தில் வந்தது, ''புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தை தெரிந்து கொள்ளும்படி'' யாகத்தான். அது அவருடைய மணவாட்டியாகும். ''ஒரு ஜனம், இங்கொன்றும், அங்கொன்றும், இங்கொன்றும், அங்கொன்றும் ஆக அவர் நம்மிடம் தனிப்பட்ட நபர்களாகத்தான் இடைபடுகிறார். இனம் ஜாதி, நிறம் என்று பாராமல் அவர் நம்மை தெரிந்து கொண்டார். அவர் நம்மோடு தனிப்பட்ட நபர்களாகத் தான் இடைபடுகிறார். அது அவருடைய மலர்ச்செண்டு, அதை அவர் தனது பீடத்தின் மேல் வைப்பார். ஆனால் யூதர்களைப் பொறுத்தமட்டிலோ, அவர் இஸ்ரவேலருடன் ஒரு தேசமாகத்தான் இடைபடுகிறார், அவர்கள் ஒரு ஜாதியான ஜனம் ஆவர், அவருடைய ஜாதி. 132நமக்கு இந்த செய்தி கிடைத்திருக்கிறபடியினால், நான் இன்றிரவில் மகிழ்ச்சியாயிருக்கிறேன். நீங்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டபடியினால் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். நீங்கள் கலந்து கொண்டதை நான் மெச்சுகிறேன். என்னை அவர் இதைக் காண செய்தபடியினாலும், நான் இதை சபைக்கு அளிக்க இயலும்படி செய்தபடியினாலும், நான் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இப்பொழுது அது என் இரு தயத்தை விட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ளது. சில காலம் பரிசுத்த ஆவியானவர் என் இருதயத்தில் இதைக் குறித்து இடைப்பட்டார், என்னால் அதை அலட்சியம் செய்துவிட முடியவில்லை. நான் அதனோடு இணைந்து செல்ல வேண்டியதாகத் தான் இருந்தது. இரு காரியங்கள் செய்யும்படி நான் நடத்தப்பட்டுள்ளேன். லூயிசியானாவிலுள்ள ஷ்ரீவ்போர்ட்டுக்கு சகோதரன் மூர் அவர்களுடன் ஒரு கூட்டத்திற்காக செல்ல வேண்டும். அநேக வாரங்கள் நான் ஏறத்தாழ கதறிவிட்டேன். ஏனெனில் நான் ஷ்ரீவ்போர்ட்டுக்கு போக விரும்பினேன். அங்கே அமர்ந்திருக்கிற என் மனைவி அதைப்பற்றி உங்களுக்கு கூற முடியும். ஏன்? ஷ்ரீவ் போர்ட்டில் இருந்த யாராவது இங்கிருந்தால், ஏன் என்பதை இப்பொழுது அறிய முடியும். அதைப் போல காரியத்தை அவர்கள் கேட்டிருக்கவோ, பார்த்திருக்கவோ இல்லை, எவ்விடத்திலுமிருந்து பிரசங்கிகளும், பாப்டிஸ்ட்டுகளும், இன்னும் பல வகையான மக்களும் வந்திருந்தனர். ஐஸ் பெட்டியின் மேல் கை வைத்த மனிதன் ஒருவன், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவன் மேல் வந்திறங்கி, “ஷ்ரீவ்போர்ட்டுக்குப் போ, அங்கே நீ என்ன செய்ய வேண்டுமென்பது உனக்குக் கூறப்படும்'' என்று கூறினார். என்னுடைய பெயரையும் அவருக்குத் தெரியப்படுத்தி, எங்கே காணலாம் என்பதையும் கூறினார். ''அவன் உனக்கு நீ என்ன செய்யவேண்டுமென்பதை கூறுவான்'' என்று கூறினார். 133“படிகளுக்கு அடியில் தண்ணீர் தொட்டியானது ஆயத்த மாயுள்ளது, உனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷகமானது தேவை யாயுள்ளது'' என்றேன் நான். அங்கே ... எனவே அங்கே நடக்கப் போகிறவைகளைப் பற்றி முன்னு ரைத்தல்களும், தீர்க்கதரிசனங்களும் மக்கள் பேசினார்கள், அவைகள் அங்கே நம்மத்தியில் அப்படியே நடைபெற்றன. பிறகு, “நான் ஜெபர்சன்வில்லுக்கு சென்று இப்புத்தகத்தை எழுதிட வேண்டும், ஏனெனில் இங்கே இன்னும் எவ்வளவு காலம் நான் இருந்தாக வேண்டும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இம்மகத்தான செய்தியை நான் உரைத்திட்டால், அது புத்தக வடிவம் பெற்றுவிடும், நான் போய் விட்ட பிறகோ அவ் வார்த்தைகள் தொடர்ந்து ஜீவித்துக் கொண்டேயிருக்கும்'' என்று நான் கூறினேன். இது சம்மந்தமான வரலாற்றுக் குறிப்புக்களை எழுதிடச் செய்திட்டேன், அதுவும் புத்தகத்தில் இடம் பெறும். நான் இங்கே இச்செய்தியை சபைக்கு கொண்டு வருவதற்காக வந்தேன். ஏனெனில் பரிசுத்த ஆவியின் அசைவு இச்செய்தி யில் இருப்பதை கண்டுணர வேண்டுமே; நானும் கூட இதற்கு முன் இதைப்பற்றி அறியாதிருந்தேன். அது உண்மை யாயிருக்கிறது. இதை கர்த்தருடைய நாமத்தில் உரைக்கிறேன். ”நானுங்கூட அவைகளை அறியாதிருந்தேன்'' என்பது உண்மை யாயிருக்கிறது. நான் இப்பொழுது விடுதலை பெற்றதாக உணருகிறேன். இச்செய்தியை தேவன் தாமே நமக்குக் கொண்டு வந்திருக்கிறார் என்று நான் உணருகிறேன். நாம் சாலையின் முடிவுக்கு வந்து விட்டோம் என்ற நான் நம்புகிறேன். தேவன் பிரத்தியட்மாகுதல் நம் மத்தியில் உண்டாவதற்கான வேளையானது வந்து விட்டது என்று நான் விசுவாசிக்கிறேன். இன்னும் எவ்வளவு காலம் இருக்கும் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் சமயமானது நெருங்கிவிட்டது. 134அந்த மகத்தான மனிதன் எழும்புவதற்காக நாம் எதிர் பார்த்துக் கொண்டு இருப்போம். என்னுடைய நாளிலேயே அவன் வரக்கூடும். அல்லது வெகு சீக்கிரத்திலேயே வரக்கூடும். நான் அறியேன். இப்பொழுது அவன் நம் மத்தியிலேயே கூட இருக்கக் கூடும். நம்மால் கூற இயலாது. அந்த வேளை வரையிலும் நம்மை நடத்தப் பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். அப்பொழுது இந்த வழிகாட்டி நம்மை வழி நடத்துவதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்ளும் போது, அவன் பரிசுத்த ஆவியால் அபிஷேகிக் கப்பட்டவனாகவே இருப்பான். வரப்போகிற அந்த மனிதன் நிச்சயமாக எலியாகவாகத் தான் இருப்பான். ஆனால் அவன் தானே வழி நடத்திச் செல்கிறவனாக இருந்து, பிள்ளைகளின் இருதயங்களை திருப்புவான், அல்லது பிள்ளைகளின் இருதயங்களை பிதாக்களின் செய்திக்கு திருப்புவான், அச்செய்தியானது, அவர் தம்முடைய ஆவியை பெந்தெகொஸ்தே நாளில் ஊற்றியபொழுது கொடுக்கப் பட்டதாகும். அச்செய்தியானது எவ்வாறு தொடர்ந்து வந்து கொண்டிருக் கிறது என்பதை நான் என்னால் முடிந்த வரை, வரலாற்றிலிருந்தும், வேதத்திலிருந்தும் கொண்டு வந்து காண்பித்து இருக்கிறேன். அது தானே சபைக்காலங்களின் வழியாக தொடர்ந்து வந்து, இன்றைக்கு அதுதான் இச்செய்தி என்பதை காண்பித்திருக்கிறேன். ஸ்தாபனங்கள் தேவனுக்கு முன்பாக சாபக்கேடாக இருக்கிறது என்பதையும் காண்பித்தேன். வேத பூர்வமாகவும், அப்போஸ் தலருடைய நடபடிகளின் வாயிலாகவும், வரலாற்றின் மூல மாகவும் உரைக்கப்பட்ட இச்செய்தியானது உங்கள் சிந்தையில் பதிந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். அது.... 135தேவன் தம்முடைய சபையை மத ஸ்தாபனமாக ஆக்கிய ஒரு சந்தர்ப்பம் கூட இல்லை. ரோமன் கத்தோலிக்க பரம்பரை குருக்களாட்சி முறைதான், ஸ்தாபன சபைகளின் தாயாக இருக் கிறது. ஸ்தாபனங்கள் யாவற்றின் தாய் ரோமன் கத்தோலிக்க சபையேயாகும். எந்தவொரு ப்ராடெஸ்டெண்ட் குழுவிலும் எழுப்புதல் எப்பொழுதாவது ஏற்பட்டால், அது உடனே தன் தாயிடமே திரும்பிச் சென்று, அதே காரியத்தையே செய்தது. அவள் ஒரு வேசி என்றும், அவளுக்கு குமாரத்திகள் உண்டு என்று வேதம் கூறுகிறது. அவர்கள் வேசிகள் என்று அழைக்கப்படுவதால், அவர்கள் பெண்களாகத் தான் இருக்கவேண்டும். அங்கே அவள் இருக்கிறாள். எனவே நாம் அமர்ந்து கொண்டிருக்கிறோம்... ஆனால் அவரும் நமக்குக் கூறியிருக்கிறார்; “பயப்படாதே, சிறுமந்தையே, உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்''. எனவே நாம் யாவரும் அந்நாளில், மெதோடிஸ்ட்டுகளே, பாப்டிஸ்டுகளே, நீங்கள் யாரா யிருந்தாலும் சரி, ”ஒருவன் கதவைத் திறந்தால், நான் அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்.'' 136என் சகோதர சகோதரிகளே, நாம் தானே அந்நாளில் அந்த சிறு மந்தையாக எண்ணப்படுவோமாக. அவர் வந்து இப்பூமியை விட்டு எடுத்துக்கொள்வதற்கான அவ்வேளை வரையிலும், காத்திருக்கும் அந்த சிறு மந்தையில் அங்கம் வகிக்கிறவர்களாக நாம் இருப்போமாக. எடுத்துக்கொள்ளப்படுதலானது உலாகளா வியதாக இருக்குமே. “இரண்டுபேர் படுத்திருப்பார்கள், ஒருவரை நான் எடுத்துக்கொள்வேன், இரண்டு பேர்கள் வயலில் இருப் பார்கள். நான் ஒருவரை எடுத்துக்கொள்வேள்'' என அவர் கூறுகிறார். இது பூமியின் ஒரு பக்கத்தில் இரவாகவும், மறுபக்கத் தில் இது பகலாகவும் இருக்கும் என்பதைக் காட்டுகிறதல்லவா? ”இரண்டு பேர் படுத்திருப்பார்கள், இரண்டு பேர் வயலிலிருப் பார்கள் அவர்களில் தலா ஒருவரைத் தான் நான் எடுத்துக் கொள்வேன்'' என்று கூறுகிறார். நான் இன்று காலையில் கூறியது போல், நீங்கள் சாலையில் உங்கள் தாயுடன் பேசிக்கொண்டு காரோட்டி சென்று கொண்டிருக் கக் கூடும். நீங்கள் சுற்றுமுற்றும் பார்க்கையில் உங்கள் தாய் போய் விட்டிருப்பார்கள். நீங்கள் மேசையில் உட்கார்ந்து, உங்கள் காபியையோ, அல்லது காலை உணவையோ அருந்திக்கொண்டு, புசித்துக் கொண்டு இருக்கக் கூடும். முதலாவது காரியம் என்ன வெனில், நீங்கள் சுற்றும் முற்றும் பார்க்கையில், அங்கே இனி உங்கள் தந்தையார் காணப்படமாட்டார். அவ்வாறு அது இருக்கும். அது வருகிறது, ஆனால் எந்த வேளையில் நடக்கும் என்பதை அறியோம். ஆனால் அதன் காரியம் என்னவெனில், அது நடந்து முடிந்துவிட்டதென்றால், முடிந்ததுதான். அப்பொழுது உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது.'' அதைப்பற்றி நான் நீண்ட காலமாக கேட்டு வந்திருக்கிறேன்'' என்று நீங்கள் கூறுவீர்கள். ஆனால் உங்களுடைய கடைசி சந்தர்ப்பமாக நீங்கள் அதைக் குறித்துக் கேட்கப் போகிறீர்கள். அது சம்பவிக்கத்தான் போகிறது, ஏனெனில் அது கர்த்தருடைய வார்த்தையாயிருக்கிறது. நான் பிரசங்கித்து வந்திருக்கிற கடந்த எட்டுநாட்களாக, அது, எப்பொழு தாவது பிசகிப்போயிருக்கிறதா? இங்கே இயேசு என்ன கூறி யிருக்கிறாரோ, அது வந்து நிறைவேறியாகவே வேண்டும், அவ்வாறு தான் சபைக்காலமெல்லாம் நடந்திருக்கிறது. 137இந்த சபைக்காலமானது சரியாக இதற்குள் இருக்கிறது. அதன் சரியான வேளையில் அது இருந்து கொண்டிருக்கிறது. இன்று காலையில் கூட, பத்துக் கன்னியர் எதற்கு அடையாளமாக உள்ளனர் என்பதைக் குறித்தும், நித்திரை செய்யும் புத்தியில்லாத கன்னிய ரின் வேளையைக் குறித்தும் பார்த்தோம். வேதமானது கூறியதைக் குறித்து நினைவில் கொள்ளுங்கள்; அதாவது, புத்தியற்ற நித்திரை செய்யும் கன்னியர்.... “இதோ மணவாளன் வருகிறார், இதோ கர்த்தருடைய வருகை'' என்ற சத்தம் புறப்பட்டுச் சென்றபோது, வார்த்தையின் பிரசங்கித்தலும் நடந்த போது .... அப்பொழுதுதான் என்ன சம்பவித்தது? ''காலம் சமீபமாயிற்று அணுகுண்டுகள் மற்றும் இன்ன பிறவும் ஆயத்தமாயுள்ளன'' என்ற பிரசங்கிகள் தெருக்களின் ஓடிச்சென்று செய்தியை பிரசங்கித்தனர். அவ்வாறு அவர்கள் செய்த உடனேயே, நித்திரை செய்யும் புத்தியில்லாத கன்னியர் ஆகிய பெரிய சபையானது, “ஓ, நல்லது, நாம் இத்தனை காலமாக ப்ரெஸ்பிடேரியன் ஆக இருந்து விட்டோம். நாம் இதைப் பற்றி ஆராய்ந்து இதைக் கண்டு பிடிப் போம். ஆம், நமக்கு பரிசுத்த ஆவி தேவையென்பதை நான் விசு வாசிக்கிறேன்'' என்று கூறியது. அவர்கள் இப்பொழுது அதைக் குறித்து துண்டுப்பிரதிகளை எழுதி வெளியிட ஆரம்பித்து விட்டார்கள். ''அதில் எங்களுக்குக் கொஞ்சம் தாருங்கள்'' என்று அவர்கள் கூறினார்கள். இவர்களோ, “எங்களுக்குப் போதுமான அளவே எங்களிடம் உள்ளது, ஆகவே கொடுக்க இயலாது'' என்றார்கள். எனவே இன்றைக்கு, ஸ்தாபனங்களாகிய பெரிய சபைகள் செய்வதைப்போல், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள் வதற்காக ஜெபிக்கும்படி புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் எண்ணெய் வாங்கச் சென்றபொழுது, மணவாளன் வந்துவிட்டார். ''நாம் பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள அதனிடம் திரும்பியாக வேண்டும். சபையில் தெய்வீக சுகமளித்தலின் வரத்தைப் பெற்றவர்கள் நமக்கு இருக்க வேண்டும்; அந்நிய பாஷைகளில் பேசுகிறவர்கள் நமக்கு வேண்டும். அந்நிய பாஷைகளை வியாக்கியானம் செய்கிறவர்கள் நமக்கு வேண்டும். நமது சபையில் இந்த அனைத்து ஆவிக்குரிய வரங்களும் நாம் பெற்றிருக்கவேண்டும். எனவே அதற்கான கூட்டங்களை நாம் ஆரம்பித்து அதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும்'' என்று கூறிக் கொண்டு, இந்த பெரிய சபைகள் ஆகிய ஸ்தாபனங்கள் மகத்தான சர்வதேச கூட்டங்களை ஏற்பாடு செய்து அதைப் பெற்றுக் கொள்ள இப்பொழுதே அவர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். அதற்காக கவுன்சில்களை அமைத்து, அதைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வாறு அவர்கள் அதைச் செய்ய புறப்பட்டு சென்றிருக்கிற பொழுது, அப்பொழுது அந்த வேளையில் தான் மணவாளன் வந்தார். வந்து விளக்கில் எண்ணெய் உள்ளவர்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். புத்தியில்லாத கன்னியர் திரும்பி வந்தபொழுது என்ன சம்ப வித்தது? அழுகையும், பற்கடிப்பும் நிறைந்திருக்கிற மகா உபத் திரவ காலமாகிய புறம்பான இருளிலே அவர்கள் தள்ளப்படு வார்கள். அந்த வேளையில் மணவாட்டியோ பரலோகத்தில் இருப்பாள். ஓ, என்னே ! அதன்பிறகு மூன்றரை ஆண்டுகளின் முடிவில், யோசேப்பைப் போல் அவர் வந்து, தன்னை தனது சகோதரராகிய யூதர்களுக்கு அறியப்படுத்துவார். அவர்கள் குடும்பம் குடும்பமாக பிரித்துக் கொண்டு, அவருக்காக அழுது புலம்பி, 'இந்தக் காயங்கள் எங்கே உமக்கு ஏற்பட்டன?'' என்று கேட்டு, தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்ப்பார்கள். அவர் தனது சகோதரர்களுக்குதான் யார் என்பதை அவர்கள் அறியும்படி செய்வார். இப்பொழுது, அவர் தன் சபைக்கு, தன்னை அவர்கள் அறியும்படி செய்திட முயன்று கொண்டிருக்கிறார். ஆனால் அவர்களோ அவரை வெளியே தள்ளிவிட்டார்கள். அவர் இன்னமும் வாசலருகே நின்று கதவை தட்டிக்கொண்டே, ''அங்கே இன்னும் யாராவது ஒருவர் உள்ளனரா? எனக்காக கதவைத் திறந்து என்னை உள்ளே வர விட்டு உன்னோடு பேசவிடும்படி செய்ய இன்னும் யாராவது ஒருவர் உள்ளனரா?'' என்று கேட்கிறார். நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். மிகவும் நன்றியுள்ளவனா யிருக்கிறேன். அநேக ஆண்டுகளுக்கு முன்பாக, சுமார் இருபத் தெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, என்னுடைய இருதயத்தில் அந்த தட்டுதலை நான் உணர்ந்தேன். நான் ... அவர் உள்ளே வந்தார், அது முதற்கொண்டு நான் அவரோடு போஜனம் பண்ணவும், அவர் என்னோடு போஜனம் பண்ணவும் செய்து கொண்டிருக்கிறோம். நான் பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதமான பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டேன். நான் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத் தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டேன். என்னுடைய வாழ்க் கையில் நான் ஞானஸ்நானம் பெற்றது ஒரே ஒரு முறைதான், அதை இவ்வாறு பெற்றுக் கொண்டேன். நான் ஒரு சிறு பையனாக இருந்தபொழுது, யாரும் என்னிடம் மூன்று தேவர்கள் உண்டு என்ற சொல்ல முடியவில்லை. அப்போதகத்தை என்னிடம் யாரும் திணிக்க முடியாது. தேவன் என்னப்பட்டவர் யார் என்பதை அறிந்திருக்கும் எவரிடமும் நீங்கள் அதை திணித்துவிட முடியாது. எனவே நான் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டபொழுது, ஒரு பாப்டிஸ்ட் பிரசங்கியார் எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். ''நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ் நானம் பெறவேண்டும் என விரும்புகிறேன்'' என்று நான் கூறி னேன். டாக்டர் ராய் ஈ.டேவிஸ் என்பவர்தான், நான் வாலிபனாக இருந்தபொழுது எனக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தார். அதுதான் சரியானது. அதை நான் விசுவாசித்தேன்; அதோடு நிலைத்து நினறேன். அது வேத சத்தியம் என்பதை நான் அறிந்திருக்கிறேன். அது தேவனு டைய நித்தியமான வார்த்தையாக இருக்கிறது. அவர்களில் நானும் ஒருவன் என்பதால் சந்தோஷமே நானும் அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் அவர்களின் நானும் ஒருவன் என்பதால் சந்தோஷமே அவர்களில் நானும் ஒருவன், அவர்களில் ஒருவன் அவர்களின் நானும் ஒருவன் என்பதால் சந்தோஷமே இவர்கள் கல்லாதவராயினும், லோக கீர்த்தி, அற்றவராயினும் இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று, பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதம் பெற்றனரே இப்பொழுது அவர்கள் எத்திசையிலும் சென்று அவருடைய வல்லமை மாறாதது என்று கூறுகின்றனர். இம்மக்களில் நானும் ஒருவன் என்று கூறிட எனக்கு சந்தோஷமே. 138நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறீர்களா? அப்படியாயின் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அவர்களில் நானும் ஒருவன், நான் அவர்களில் ஒருவன் அவர்களில் ஒருவன் என்றிட எனக்கு சந்தோஷமே வாரும் என் சகோதரரே, ஆசியை நாடுவீர், அது உம் இதயத்தை பாவத்தினின்று சுத்திகரிக்குமே அது உம்மில் சந்தோஷத்தின் மணியோசை கேட்கச் செய்யும் அது உம் அத்துமாவை அனலுள்ளதாக்குமே ஓ, இப்பொழுது அது என் இதயத்தில் கொழுந்துவிட்டு எரிகிறது, ஓ, அவர் நாமத்திற்கே மகிமை, நானும் அவர்களில் ஒருவன் என்ற கூறிட இயன்றதால் எனக்கு சந்தோஷமே ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் நான், நான் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கு சந்தோஷமே அல்லேலூயா அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் என்பதால் எனக்கு சந்தோஷமே, அவர்கள் மேல் வீட்டறையில் கூடி வந்து, அவர் நாமத்தில் ஜெபித்தனர், அவர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்பட்டனர் அந்நாளில் அவர் அவர்களுக்குச் செய்ததை உனக்கும் செய்வார், நானும் அவர்களில் ஒருவன் என்ற கூற முடிந்ததால் எனக்கு சந்தோஷமே. 139இப்பொழுது, நாம் முன்னும் பின்னும், சுற்றிலும் உள்ள வர்களோடு கைகுலுக்குவோம். அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்குச் சந்தோஷமே, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன் என்பதால் எனக்குச் சந்தோஷமே, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்குச் சந்தோஷமே, நல்லது, அவர்களின் ஒருவன், அவர்களில் ஒருவன் நானும் அவர்களில் ஒருவன் என்பதால் சந்தோஷமே அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்குச் சந்தோஷமே, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்பதால் எனக்கு சந்தோஷமே 140அவர்களில் நீங்களும் ஒருவர் என்பதால் உமக்கு சந்தோஷ மில்லையா? (சபையார், ''ஆம், ஆமென், அல்லேலூயா'' என்று பதிலளிக்கிறார்கள் - ஆசி) சத்தம் போடுகிற கூட்டம். (ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசுகிறார். இன்னொரு சகோதரன் அதற்கு வியாக்கியானம் செய்கிறார் - ஆசி). பிதாவே, எவ்வளவாய், நாங்கள் உமக்கு, அபாத்திரரான எங்கள் மேல் உள்ள உம்முடைய தயவுக்காகவும், இரக்கங்களுக்காகவும், நன்றி செலுத்துகிறோம். உம்முடைய செய்தியை இப்பொழுது நீர் உறுதிப்படுத்துவீர் என்பதைக் குறித்து நீர் வாக்குத்தத்தம் செய்துள்ளீர், கர்த்தாவே, அதைப்பற்றி எண்ணுகையில்... உம்முடைய இரக்கங்கள் அவர்கள் மேல் தங்க வேண்டும் என்று நான் ஜெபிக் கிறேன், தேவனே. இங்கே யாராவது அவரை இரட்சகராக அறியாதிருந்தால், இப்பொழுதே நீங்கள் அவரை உங்கள் இருதயத்தில் இரட்சகராக கண்டு கொள்ள விரும்பினால், நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கும் பொழுது எழுந்து நிற்பீர்களா? அவர் தாமே இச்செய்தியை இப்பொழுது நீர் உறுதிப்படுத்த விரும்புவதாக கூறினார். அவரை அறியாத யாராவது இங்கிருந்தால், இன்னும் அவரது ஆவியை பெறாமல் இருந்தால், அவர் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். 141நல்லது, அதோ அங்கே பின்னால் ஒருவர்... நீங்கள் எழுந்து நிற்பீர்களா, சகோதரனே! (சபையிலிருந்து ஒரு சகோதரன் பேசு கிறார்-ஆசி) அவர் பரிசுத்த ஆவியினாலே அபிஷேகிக்கப்பட விரும் புகிறார், அப்படித்தானே சகோதரனே? தேவன் உம்மை ஆசீர்வதிப் பராக. நீங்கள் இருக்கும் இடத்திலேயே நில்லுங்கள். “பரிசுத்த ஆவியினால் நானும் அபிஷேகிக்கப்படவேண்டும்'' என்று எழுந்து நின்று கூற விரும்புகிற இன்னும் யாராவது உள்ளனரா? தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே, தேவன் உம்மை ஆசீர் வதிப்பாராக. எழுந்து நில்லுங்கள். அப்படியே நின்று கொண் டிருங்கள். இன்னும் யாராவது இங்கு பரிசுத்த ஆவியைப் பெற்று, ஞானஸ்நானம் பண்ணப்பட்ட விரும்பி, அதற்காக எங்களுடைய ஜெபங்களில் நினைத்துக் கொள்ளப்பட்ட இப்பொழுது விரும்பு கிறீர்களா? பரிசுத்த ஆவியினால் நீங்கள் அபிஷேகிக்கப்பட விரும் புகிறீர்களா? நான் கூற வேண்டியதை கூறிடும் முன்னர் இன்னும் யாராவது எழுந்து நின்று சேர்த்துக் கொள்ளப்பட விரும்புவீர்களா? அவருடைய மந்தையில் ஒருவராக எண்ணப்பட வாஞ்சிக்கிறீரா? (அதைச் செய்வீர்களா?) கறைதிரையற்று, விழித்திருந்து அவர் மீண்டும் வரும் காட்சியை காண காத்திருப்பீர். அவர் மீண்டும் வருகிறார். அவருடைய பகைவராக இருக்க விரும்புவீரா? அல்லது அவருடைய பிள்ளையாக இருக்க விரும்பு வீரா? இயேசுவின் இரத்தத்தைத் தவிர வேறு எதையும் தேவன் அங்கீகரிக்கமாட்டார். அவர் சினமடைகிற தேவன் அவர் ஒரு பொழுதும்... உங்களுடைய சபை அங்கத்துவம் அவருக்கு ஒன்று மில்லை. இயேசுவின் இரத்தத்தைத் தவிர வேறு எதையும் அவர் பாரார். மெய்யாம் ஜீவ நதி, பாவம் போக்கும் நதி வேறே நதியை அறியேன் இயேசுவின் இரத்தந்தானே. பாவ தோஷம் நீக்கிட மீட்பரின் இரத்தந்தானே தீயகுணம் மாற்றிட மீட்பரின் இரத்தந்தானே மெய்யாம் ஜீவ நதி, பாவம் போக்கும் நதி வேறே நதியை அறியேன் இயேசுவின் இரத்தந்தானே. (சகோதரன் பிரன்ஹாம் அவர்கள இப்பாடலை தாழ்ந்த குரலில் தனக்குள் பாடிக்கொள்கிறார் - ஆசி). வேறே இரட்சிப்பில்லையே, இயேசுவின் இரத்தந்தானே புண்ய கிரியை செல்லாதே இயேசுவின் இரத்தந்தானே வேறு யாராவது உள்ளனரா? மெய்யாம் ஜீவ நதி, (ஒன்றும் நிலைக்காது சகோதரனே, சகோதரியே இவ்வுலகானது மூழ்கிக் கொண்டிருக்கிறது, அது முடிந்து போய்விட்டது). பனியைப் போல.... வேறே நதியை அறியேன் இயேசுவின் இரத்தந்தானே. டெடி அவர்களே, நீங்கள் விரும்பினால், மெதுவாக “இம்மானுவேலின் இரத்தத்தாலே நிறைந்த ஊற்றுண்டே'' என்ற பாடலை ... இப்பொழுது சிநேகிதரே, நின்று கொண்டிருக்கிற நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இனிமையை ஏற்றுக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறீர்கள். இந்தக் காரியங்கள் சம்பவிக்கும் என்று உரைத்த அதே வேதாகமத்தில், அவர் எவ்வாறு வாக்குத்தத்தம் செய்தாரோ அதே விதமாக அவைகளை செய்து நிறைவேற்றினார். “வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்று பேதுரு கூறினான். உங்கள் மேல் தேவனுடைய ஆசீர்வாதம் வேண்டுமென்ற விரும்பி நீங்கள் எழுந்து நின்றீர்கள். அவருடைய ஊழியக்காரன் என்று முறையில் நான் இப்பொழுது உங்களுக்காக ஜெபிக்கிறேன். தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கொடுக் கும்படி நான் ஜெபிப்பேன். நீங்கள் உத்தமமாயிருந்தால் இந்த வாக்குறுதியை தேவனுக்கு நீங்கள் பின்வருமாறு செய்வீர்களோ என்று நான் பார்க்கிறேன். இதை உங்கள் இருதயத்தில் செய் வீர்களானால், பின்வரும் வாக்குறுதியை தேவனுக்கு கொடுங்கள்: “தேவனே, இந்த நேரம் முதல், என் கால் ஒன்றி நிற்கும் நான், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை தேடிக்கொண்டு இருக்கிற நான், நீர் என்னை பரிசுத்த ஆவியினால் நிரப்பும் வரையிலும், தொடர்ந்து ஜெபித்துக் கொண்டு, காத்துக் கொண்டிருப்பேன்.'' நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்திக்காட்டி தேவனுக்கு இந்த வாக்குறுதியை அளிப்பீர்களா? ”பரிசுத்த ஆவியின் இனிமையினாலும் நன்மை யினாலும் நீர் என்னை நிரப்பும் வரையிலும் நான் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டேயிருப்பேன்'' என்று கூறுங்கள். நாம் தலைகளை வணங்கியிருக்கையில் நான் இப்பொழுது என்னுடைய ஜெபத்தை ஏறெடுக்கிறேன். 142எங்கள் பரம பிதாவே, அவர்கள் உம்முடைய சமூகத்தின் வெற்றிச் சின்னமாக இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய வர்களாக இருக்கிறபடியால், அவ்வார்த்தைகள் உண்மையானவை என்று அறிந்திருக்கிறார்கள். அவைகள் பரிசுத்த ஆவியினால் அளிக்கப்பட்டவை என்று அவர்கள் அறிகிறார்கள். ஏனெனில் அவைகள் தேவனுடைய வார்த்தையாக இருக்கின்றன. அவர்கள் தங்களுக்கு நீர் தேவை என்பதையும், ஜெயங்கொள்ளுகிற வல்லமையை அளிக்கும் பரிசுத்த ஆவியின் இனிமை தங்கள் ஜீவியத்தில் தேவைப்படுகிறது என்பதையும் குறித்து அறிந்து உணர்ந்திருக்கிறார்கள். உன்னதத்திலிருந்து வரும் பெலத்தால் அவர்கள் தரிப்பிக்கப்படுவார்கள். ஒரு கிறிஸ்தவ ஜீவியத்தை ஜீவித்துக் காட்டுவதற்கான வல்லமையை அவர்கள் பெற்றுக் கொள்ளுவார்கள்; சோதனையை ஜெயிக்கிறதற்காக வல்லமையை அவர்கள் பெற்றுக் கொள்ளுவார்கள். 'அவர்கள் மேல் வீட்டறை யில் அவரது நாமத்தினால் ஜெபித்த பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர், ஆராதனைக்கான வல்லமை இறங்கியது'' என்ற பாடலை சற்று முன் நாம் பாடியதுபோல் ஆரா தனைக்கான வல்லமை அவர்கள் மேல் வரவேண்டும். அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில் நான் உம்மி டம் ஜெபிக்கிறேன், பிதாவே; அவர்கள் தங்கள் கரங்களை உயர்த் தியதை நீர் காண்கையில், அவர்கள் உமக்கு ஒரு உறுதி மொழி அளித்துள்ளனர், அவர்கள் ஒரு வாக்குறுதியை செய்துள்ளனர், என்னவெனில், நீர் அவர்களை நிரப்பும் வரையிலும், விடாமல் ஜெபிப்பார்கள் என்றும், அதை விட்டுவிடமாட்டார்கள் என்றும் உறுதி கூறியுள்ளனர், அவர்களுடைய ஜீவியத்தில், போதுமான அளவு உம்முடைய பரிசுத்த பிரசன்னத்தினாலே நீர் நிரப்பியருளும். அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்படவேண்டும் என்று, கர்த்தாவே, அவர்கள் சார்பில், உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில், நான் என்னுடைய ஜெபத்தை ஏறெடுக்கிறேன். அது அவர்களுக்கு நேரிடுகிற வரையிலும் இந்த சபையை விட்டு அவர்கள் அகல வேண்டாம் என்று நான் ஜெபிக்கிறேன்; அவர்கள் ஒவ்வொரு ஆத்துமாவும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் வரையிலும், அவர்கள் இங்கேயே இருக்கவேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இதை அளித்தருளும், கர்த்தாவே. 143நீர் சர்வ வல்லமையுள்ள தேவன்; உலகத்தின் பாவத்தைப் போக்க நீர் மாம்சத்தில் பிரசத்தியட்சமானீர். நீர் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து, உன்னதத்திற்கு எழுந்தருளினீர். இன்றிரவில், நீர் எங்கள் நடுவே, பரிசுத்த ஆவி என்ற பெயரோடு இங்கே இருக்கிறீர். அவர்கள் ஒவ்வொரு வரையும், பிதாவே, நீர் எங்கள் விலையேறப்பெற்ற கர்த்தராகிய நீர், உம்மைக் கொண்டே நிரப்பி யருளும். அவர்கள் தாமே உம்முடைய இராஜ்யத்திற்கு ஒரு ஆசீர்வாதமாகவும், வரப்போகும் உலகுக்கும் இருக்கட்டும். ஒரு நாளிலே நீர் சாலையின் முடிவுக்கு வரும்பொழுது, அது இன்றைய நாளாகவும் இருக்கக்கூடும், அது எப்பொழுது இருக்கும் என்பதை நாங்கள் அறியோம்... எடுத்துக்கொள்ளப்படுதலில் போகிறவர் களுக்குள்ளே நானும் ஒருவனாக எண்ணப்படட்டும், கர்த்தாவே. எடுத்துக்கொள்ளப்படுதலில் போகிறவர்களுக்குள்ளே இவர்களும் காணப்படட்டும். தெய்வீக பிரசன்னத்தில் உள்ள ஒவ்வொரு வரும், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட யாவரும், அவர்கள் தேவனுக்குச் சொந்தமானவர்களாமே, அவர்கள் யாவரும் எடுத்துக் கொள்ளப்படுதலில் போவார்களாக. இவர்களை நீர் ஏற்றுக்கொள்ளும், பிதாவே. அவர்கள் இப் பொழுது உம்முடையவர்களாக இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து வின் நாமத்தினால் வேண்டுகிறேன். ஆமென் 144இப்பொழுது, பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்து, இந்த மக்கள் அருகே நின்றுகொண்டிருக்கிற மற்றவர்கள் யாவரும் அவர்கள் மேல் உங்கள் கைகளை வையுங்கள். இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே எப்பாவத்தீங்கும் அதினால் நிவிர்த்தியாகுமே நிவிர்த்தியாகுமே நிவிர்த்தியாகுமே எப்பாவத்தீங்கும் அதினால் நிவிர்த்தியாகுமே மா பாவியான கள்ளனும், அவ்வூற்றில் மூழ்கினான் மன்னிப்பும் மோட்சானந்தமும், அடைந்து பூரித்தான் அவ்வாறே நானும் இயேசுவால் விமோசனம் பெற்றேன் என்பாவம் நீங்கிப் போனதால் ஓயாமல் பாடுவேன், ஓயாமல் பாடுவேன் ஓயாமல் பாடுவேன் என்பாவம் நீங்கிப் போனதால் ஓயாமல் பாடுவேன், 145இப்பொழுது உங்களுடைய கரங்களை உயர்த்தி தேவனுக்கு ஸ்தோத்திரத்தை செலுத்துங்கள். “நன்றி உமக்கே, கர்த்தாவே, நான் காலூன்றி எழுந்து நின்றேன், நான் உமக்கு துதி செலுத்து வேன். உம்முடைய ஆசீர்வாதங்களுக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; உம்முடைய நன்மைக்காகவும், எனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை தந்ததற்காகவும் உமக்கு நன்றி செலுத்து கிறேன், கர்த்தாவே, நன்றி கர்த்தாவே, நீர் வாக்குரைத்ததை எங்களுக்கு தருவதற்காக எங்களை அழைத்ததற்காக உமக்கு நன்றி; நீர் உம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறீர். நீர் அதை திரும்ப எடுத்துக் கொள்ளமாட்டீர். நாங்கள் உம்மை விசுவாசிக் கிறோம். 146நீங்கள் சந்தோஷமாயிருக்கவில்லையா? ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம்'' என்று கூறுங்கள். டெடி...? இன்னும் ஒரு தடவை... “இது எனக்கு பரலோகத்தைப் போல் உள்ளது, இதைப் புரிந்துகொள்ள முடியாத அநேகரை நாம் காண்கிறோம்'' என்ற பாடல். நமது மகிழ்ச்சி, விடுதலை இவற்றின் காரணம் அறியாமல், அநேகர் இருப்பதை நாம் காண்கிறோம் நாம் யோர்தானை கடந்து கானான் எனும் அழகிய தேசத்தினுள் வந்துவிட்டோம். இது எனக்கு பரலோகத்தைப் போலுள்ளது. ஓ இது எனக்கு பரலோகத்தைப் போலுள்ளது ஓ இது எனக்கு பரலோகத்தைப் போலுள்ளது நல்லது, நான் யோர்தானைக் கடந்து அழகிய கானான் தேசத்தினுள் பிரவேசித்தேன், இது எனக்கு பரலோகத்தைப் போலுள்ளது. நான் மகிழ்ச்சியடைகையில், நான் பாடி ஆர்ப்பரிப்பேன் நான் காண்பதை பிசாசு நம்பவில்லை ஆனால் நான் ஆவியால் நிரப்பப்பட்டேன், அதில் ஐயம் ஏதுமில்லை அதுவே நான் அடைந்திட்ட பாக்கியம் அதுவே நான் அடைதிட்ட பாக்கியம் (தேவனுக்கு துதி) ஓ, இது எனக்கு பரலோகத்தைப் போலுள்ளது நான் யோர்தானைக் கடந்து அழகிய கானானுக்குள் பிரவேசித்தேன் இது எனக்கு பரலோகத்தைப் போலுள்ளது. 147அது உங்களை சந்தோஷப்படுத்தவில்லையா? நல்லது. யாருட னாவது கைகுலுக்கி, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இது பரலோகத் தைப் போலுள்ளது'' என்று கூறிடுங்கள். துக்கத்தையும், வேதனையும் சுமந்த பிள்ளையே இயேசுவின் நாமத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அது உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளித்திடுமே நீங்கள் போகுமிடமெல்லாம் அதை எடுத்துச்செல்லுவீர் அந்நாமம் விலையேறப்பெற்றது, ஓ, அது எத்தனை இனிமை பூலோகத்தின் நம்பிக்கையும், பரத்தில் மகிழ்ச்சியுமாமே அது விலையேறப்பெற்ற நாமம், மிக்க இனிமையானதுவே பூவின் நம்பிக்கையும், பரத்தில் மகிழ்ச்சியுமாமே அது நம் யாத்திரை முடிவு பெறுகையில், நாம் இயேசுவின் நாமத்தில் அவர் பாதத்தில் சாஷ்டாங்கம் செய்து வணங்குவோம், அவரை இராஜாதி இராஜவாக முடிசூடிடுவோம் நாம் விலையேறப்பெற்றதும் இனிமையானதும் அந்நாமமே பூவின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியுமாமே விலையேறப்பெற்ற நாமமது, மிகவும் இனிமையானது பூவின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியுமாமே அந்நாமம் இப்பொழுது நம்முடைய தலைகளைத் தாழ்த்தி, மெதுவாக... எப்பொதும் இயேசுவின் நாமத்தை எடுத்துக்கொள்வீர் அது கண்ணிகளினின்று காக்கும் கேடயமாமே சோதனைகள் உன்னை சூழ்ந்து கொள்ளுகையில் அப்பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரிப்பீர் அது விலையேறப்பெற்ற நாமமது, இனிமையானதுவே.